கட்டுரைகள்
ஈரான் இராணுவ தலைமையை அழிப்பதில் அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து கங்கணம்!
ஈரான் இராணுவ தலைமையை அழிப்பதில், அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து கங்கணம் கட்டியுள்ளமைக்கு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில்,
ஈரான் துணை தூதரகத்தை முற்றாக அழித்த இஸ்ரேலின் தாக்குதல் மேலும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரேல் ஈரான் முரண்:
1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சி, மேற்கு நாடுகளுக்கு சவால் விடும் வகையிலான ஒரு தலைமையை ஈரானில் அதிகாரத்திற்கு கொண்டு வந்தது.
தொடர்ச்சியாக முஸ்லிம்களின் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது என்பதும் ஈரானின் குற்றச்சாட்டு. ஈரானின் தலைவர்கள், இஸ்ரேலை அழிப்பது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். அதேபோல, இஸ்ரேல் இருப்பதை ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஈரான் தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும் இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இஸ்ரேலும் ஈரானை ஒரு அச்சுறுத்தலாகவே எப்போதும் பார்க்கிறது.
இஸ்ரேலும் எந்த வகையிலும் ஈரான் நாட்டின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இரு நாட்டினரிடமும் இந்த பதற்றமும் மோதல் போக்கும் தொடர்ந்து இருந்து வருகிறது. இஸ்ரேலும் நேரடியாக புவியியல் ரீதியாக ஈரானுடன் இணைக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துள்ள லெபனான், சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானின் தாராளமான ஆதரவு இருக்கிறது.
சிரியாவில் ஈரான் தூதரகம் அழிப்பு:
காசாவில் யுத்தம் தீவிரமாகையில், கடந்த வாரம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டது.
இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தவித பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈரான் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் துணை தூதரகத்தை முற்றாக அழித்த இஸ்ரேலின் அடாவடித்தனத்தால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகளுக்கும், லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரான் ஆதரவு வழங்கியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட தளபதிகள் உட்டப 11 பேர் கொல்லப்பட்டததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இரண்டு ஈரானிய ஜெனரல்கள் 5 அதிகாரிகள் என 7 பேர் தங்களில் கொல்லப்பட்டதை ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உறுதி செய்துள்ளது.
ஜெனரல் அலி ரெசா ஜஹ்தி மற்றும் அவரது துணை முகமது ஹாடி ஹாஜி ரஹிமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
2016 வரை லெபனான் மற்றும் சிரியாவில் குத்ஸ் படைக்கு ஜஹ்தி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொ்மானில் நினைவு தின தாக்குதல்:
ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதியாக இருந்தவா் காசிம் சுலைமானி. அந்த நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவா் ஈராக் சென்றிருந்தபோது, அவரைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா 2020 ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், காசிம் சுலைமானியின் 4-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கொ்மானில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்்அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
இந்தத் தாக்குதலில் 103 போ் உயிரிழந்ததாகவும், 211 போ் காயமடைந்ததாகவும்,குண்டுவெடிப்பில் இறந்தவா்களில் பெரும்பாலானவா்கள் இரண்டாவது குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகவும், முதல் குண்டுவெடிப்புக்குப் பிறகு அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக அவா்கள் அங்கு குழுமியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் குற்றஞ்சாட்டியது. ஆயினும் இத்தாக்குதலுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று கூறிய அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியிருந்தன.
யாரிந்த ஜெனரல் சுலைமானி :
முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரிலியே 2020 ஜனவரியில் ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதாக பென்டகன் தெரிவித்தது.
அமெரிக்கர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஈரானின் முக்கியப் படைத் தளபதி காசிம் சுலைமானி, எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அப்போது கூறியிருந்தார்.
பாக்தாத் சா்வதேச விமான நிலையத்தில் 2020 ஜனவரி 3இல் ஈராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான குத்ஸ் படையின் ஜெனரல் காசிம் சுலைமானி உயிரிழந்தார்.
அந்தத் தாக்குதலில் தங்களது துணைத் தலைவா் அபு மஹதி அல்-முஹாந்திஸ் உள்பட மேலும் 7 போ் உயிரிழந்ததாக ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவப் படை தெரிவித்தது.
ஈராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்த நாட்டு ராணுவத்துடன் ஹஷீத் அல்-ஷாபி படை இணைந்து சண்டையிட்டது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவனத்தின் குத்ஸ் படைப் பிரிவு, வெளிநாடுகளில் ஈரானுக்கு ஆதரவான மறைமுகப் போரிலும், உளவுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான காசிம் சுலைமானி, மிகச் சிறப்பாக செயல்பட்டு ஈரான் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தாா்.
இந்த தாக்குதல் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களைக் கொலை செய்தது மற்றும் ஏராளமானோர் காயமடைந்ததற்கு சுலைமானி காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டினார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்.
எனினும், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.