கட்டுரைகள்

 வற்றாத காவிரி பாயும் கர்னாடகாவின் தலைநகர் பெங்களூரில் தண்ணீருக்கு திண்டாட்டம்! … சங்கர சுப்பிரமணியன்.

பெங்களூரில் சில நிறுவனங்கள் மறைந்திருக்கும் தண்ணீரை உற்பத்தி செய்து வருகிறார்கள். சுற்றுப்புற நீர் உற்பத்தி என்ற உயர்நர தொழில் நுட்பத்தின் மூலம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நுண்ணுயிரற்ற நூற்றுக்கு நூறு சதவீதம் சுத்தமான குடி நீராக மாற்றுகிறார்கள்.

பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாட்டால் திண்டாடும்போது தினமும் நூறு லிட்டர் தண்ணீரை காற்றில் இருக்கும் ஈரப்பதம் மூலம் பெறலாம் என்பதை கற்பனை செய்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனையை உண்மையாக்கும் சுற்றுப்புற நீர் உற்பத்தி என்ற தொழில் நுட்பத்திற்குத்தான் நன்றி கூறவேண்டும்.

அரசு மருத்துவமனைகள் பள்ளிகள் போன்றவற்றில் இடையூறின்றி தண்ணீர் கிடைக்க இந்த தொழில்நுட்பத்தை அவர்களது இடத்திலேயே அமைத்திருக்கிறார்கள். காற்றிலுள்ள ஈரப்பதம் உறைவு என்ற வழிமுறையின் மூலம் நீர்த் திவலைகளாக மாற்றியபின் இந்த நீர்த்திவலைகளை சேகரித்து பல முறை வடிகட்டப்படுகிறது. இப்படி வடிகட்டிய நீருடன் தாது உப்புக்கள் சேர்க்கப் படுகின்றன.

இவ்வாறு சுற்றுப்புற நீர் உற்பத்தி சாதனம் மூலம் பயனடைவதில் முதன்மையானது
பெங்களூர் கிருஷ்ணராஜ புரத்திலுள்ள அரசு மருத்துவ மனையாகும். இங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இத் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் நாளொன்றுக்கு முந்நூறு லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் நீரைபெங்களூர் கிழக்கு மருத்துவ மனையில் சிறுநீர் பிரித்தல் மையம் மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கும் பயன் படுத்தப்படுத்துகிறார்கள்.

மேலும் சவ்வூடுபரவல் தொழில் நுட்பத்தையும் கையாள்வதால் தினமும் சுற்றுப்புற தண்ணீர் உற்பத்தி தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும்முத்தூறு லிட்டர் தண்ணீரையும் பயன்படுத்துவதில்லை. வென்னீராகவும் குளிர்ந்த நீராகவும் குடிநீருக்காக மட்டும் ஐம்பதில் இருந்து நூறு லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு நீரை பயன் படுத்தும்போது உற்பத்தி சாதனம் நீரை நிரப்பிக் கொண்டே இருக்கும். சுற்றுப்புற நீர் உற்பத்தி சாதனத்துக்கு காற்றின் வருகை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீர் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று இந்த மருத்துவ மனையின் செவிலியர் கண்காளிப்பாளரான பிரவீனா கூறுகிறார்.

சமீபத்தில் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள உயர் ஆரம்பபள்ளியில் 250 லிட்டர் நீர் உற்பத்தி செய்யும் சுற்றுப்புற நீர் உற்பத்தி சாதனத்தை அமைத்துள்ளார்கள்.
ரோட்டரி மாவட்டம் 3191ன் சமூக கட்டமைப்பு மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்திய திட்டத்தைப் பற்றி மாவட்ட இயக்குனர் காசி நாத் பிரபு என்ன கூறுகிறார் தெரியுமா?

இதன் மூலம் அப்பள்ளிக்கு வரும் முந்நூறு குழந்தைகளுக்கும் குறைந்த பட்சம் அரை லிட்டர் குடிநீரை வழங்குகிறோம் என்கிறார்.
இந்த சாதனத்தின் மூலம் தற்போது என்பது சதவீதம் தண்ணீர் உற்பத்தியை எங்களால் பெறமுடியும் என்றும் கூறுகிறார்.

சுற்றுப்புற நீர் உற்பத்தி மூலம் பெறப்படும் தண்ணீர் மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும் கோடைகாலங்களில் குறைவாகவும் இருக்கும். கிடைக்கப்படும் தகவலின்படி ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாதனத்தின் மூலம் கோடைகாலங்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது.

கோடை காலத்தில் தண்ணீர் உற்பத்தி பகல் நேரங்களில் குறைவாகவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகவும் உள்ளது. இது கண்டிப்பாக கோளரங்கத்தின் குடிநீர் தேவைக்கு மிகவும் உதவியாக இருப்பதை நிலைநாட்டியுள்ளது.

மேக தூது எனும் திட்டத்தின் மூலம் மைத்ரி அக்வாடெக் என்ற அமைப்பு நாற்பது லிட்டர் முதல் ஐயாயிரம் லிட்டர் வரை தண்ணீரை உற்பத்தி செய்யக்கூடிய இருபத்தியொன்று சாதனங்களை பெங்களூரின் பல இடங்களில் நிறுவியுள்ளது.

இந்த சாதனங்களை குடியிருப்பு பகுதி, தொழில் நிறுவனங்கள், மற்றும் கல்விக் கூடங்களில் நிறுவியதோடு கடைசியாக கோலாரிலுள்ள தோட்டக்கலை கல்லூரியிலும் நிறுவியிருக்கிறார்கள். ஆதாயமன்றி நடத்தும் அமைப்பான அப்ளையிங் டெக்னாலஜி ப்பார் சோசியல் சேஞ்சஸ் என்ற அபைப்பின் இயக்குனர் எஸ். ஶ்ரீதர் மைத்ரி அக்வாடெக்குடன் இணைந்து செயலாற்றுகிறார்.

இவர் மக்களுக்கு தண்ணீரை அவர்கள் இருப்பிடத்துக்கே கொண்டு செல்வதோடு தற்போது பெங்களூரில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு இந்த தொழில் நுட்பத்தின்பால் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருப்பாதகவும் கூறுகிறார்.

இருந்தபோதிலும் மின் கட்டணத்தை எண்ணி பொதுமக்கள் இந்த சாதனங்களை தங்கள் இல்லங்களில் நிறுவ தயங்குகிறார்கள். சுற்றுப்புற நீர் உற்பத்தி மூலம் தண்ணீரைப் பெற ஒரு லிட்டருக்கு கால் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. மொத்தத்தில் குறைந்த அளவு பராமரிப்புச் செலவுடன் ஒருலிட்டர் தண்ணீருக்கு இரண்டு ரூபாய் ஆகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டில் நடைபெறும் திராவிடமாடல் ஆட்சி சாராய உற்பத்தியில் காட்டும் கவனத்தையும் வேகத்தையும் தண்ணீரில் காட்டவில்லையே என்ற எரிச்சல் ஏற்படுகிறது. அதே சமயம் தமிழ் நாட்டு முதல் அமைச்சர் படத்தை செருப்பால் அடித்து இறுதிச் சடங்கு நடத்துகிறார்களே என்று கோபமும் உண்டாகிறது.

ஒரு பக்கம் கோபம் வந்தாலும் நான் பிறந்த மண்ணைக் காட்டிலும் நீண்டகாலமாக வாழ்ந்த மண்ணில் தம் மக்களுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும்போது பெருமையடைவதோடு
பாராட்டவும் தோன்றுகிறது. நல்ல செயலை யார் செய்தாலும் பாராட்டுவதுதானே மனித பண்பு. தமிழினத் தலைவர் பிரபாகரனை சிங்கள மக்கள் பாராட்டும் போது நாம் அவர்களை பாராட்வில்லையா?

யார் செய்கிறார்கள என்று பாராமல் யார் செயினும் குற்றம் காணும்போது கண்டிப்பதும் நல்லது செய்யும்போது பராட்டுவதும் மட்டுமே ஒருவரை எப்படிப் பட்டவர் என்பதை அடையாளப்படுத்தும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.