இலக்கியச்சோலை

14 ஆண்டு சாதனைப் பயணம் …. அக்கினிக் குஞ்சு இணைய இதழுக்கு நல்வாழ்த்துகள்!

தமிழ் இணைய உலகில் 14 ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வலம் வந்து கொண்டிருக்கும் அக்கினிக் குஞ்சு இதழுக்கு  முதற்கண் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்க சார்பற்ற கொள்கையுடன் உடனடித் தகவல் பரிமாற்றங்களை சிறப்பாய் ஆற்றி வரும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ், இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடன் பதிவு செய்து வருவது பாராட்டிற்குரியது.

அனுபவம் வாய்ந்த மூத்த எழுத்தாளர்களுக்கும் எழுத்துலகில் புதிதாய் தடம் பதிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி ஆதரிப்பதுவே அக்கினிக்குஞ்சு இதழின் தனித்தன்மைகளில் ஒன்று. இது தமிழ் இலக்கிய உலகம் புதிய நோக்குடனான கருத்துக்களின் பெட்டகமாய் மிளிர்வதற்கு உதவுகிறது.
எனது சிறுகதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் மற்றும் ஓவியங்களுக்கும் முதலில்  ஒரு தளம் அமைத்துக் கொடுத்தது அக்கினிக்குஞ்சே!

மறைந்த மூத்த எழுத்தாளர் திரு.எஸ். பொ அவர்கள் வித்திட்ட இந்த இதழ் இன்று விருட்சமாய் வளர்ந்து பல புலம்பெயர் நாடுகளில் நன்மதிப்பைப் பெற்று இன்று வேரூண்டி வளர்ந்திருப்பது பெருமைக்குரியதே.

நிரந்தர பணியாளர்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு இணைய இதழை வெகு சிறப்பாக நடத்தி வருவது என்பது அசாத்தியமான செயல். இதற்கு பின்னணியில் இருக்கும் இதழ் ஆசிரியர் திரு. யாழ் பாஸ்கரின் அயராத உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நாம் மனதார பாராட்டவே வேண்டும்!

அக்கினிக்குஞ்சு இதழ் இணையதளத்தில் வெளிவரும் கட்டுரைகள் அனைத்தும்  நடைமுறைச் சவால்கள், சமூக நிகழ்வுகள், அரசியல் விவாதங்கள் என பல்வேறு நடப்புகளை அலசி ஆராய்ந்து வாசகர்களின் சிந்தனை தூண்டுகோலாக அமையும் வண்ணம் வெளியிடுவது தனிச்சிறப்பு.

14 ஆண்டுகளாக தமிழ் இணைய உலகில் அக்கினிக்குஞ்சு இதழ் ஆற்றியுள்ள பணி மகத்தானது. இதன் மூலம் வாசகர்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல், எழுத்தாளர்களுக்கும் ஒரு களம் அமைத்து அவர்களை  ஊக்கமளித்து வருகிறது.

இந்த சிறந்த இணைய இதழ் இன்னும் பல ஆண்டுகள் மேலும் சிறப்பாக தமிழ் சமூகத்திற்கு சேவை புரிய எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் எதிர்கால எழுத்தாளர்களாக இலக்கிய உலகில் காலெடி எடுத்து வைக்க இருக்கும் இளம் தலைமுறைக்கும் அக்கினிக்குஞ்சு நிச்சயம் ஆதரவளித்து ஒரு வழிகாட்டியாக திகழும் என்பதில் ஐயமில்லை!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.