இலக்கியச்சோலை

“மனம் விட்டுப் பேசுவோம்” ….. யாழ்.எஸ். பாஸ்கர்

“பதினான்காம் ஆண்டில் அக்கினிக்குஞ்சு”

அன்பு வாசகர்களே வணக்கம். இணையத்தள இதழாக “அக்கினிக் குஞ்சு” மலரத்துவங்கி இன்றுடன் (5-04-2024) பதின்மூன்றாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. மிகுந்த நம்பிக்கையுடனும் தளராத ஆர்வத்துடனும் பதின்நான்காவது ஆண்டில் கால் எடுத்து வைக்கிறோம்.

முன்னோக்கிப் பார்ப்பதற்கு முன்னால் நாம் கடந்து வந்த பாதையை பின் நோக்கிப் பார்ப்போம். சுமார் முப்பத்து மூன்று (33) ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு ஏறிய மாசிகையாக அக்கினிக் குஞ்சு வெளிவரத்துவங்கியது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு விரிவான பிரசுரக்களம் அமைத்துக் கொடுத்து வருகிறோம். துதிபாடி செம்பு தூக்கும் வேலைகளை தவிர்த்தோம். கொள்கைகளை சமரசம் செய்யாமல் எமது பயணத்தை தொடர்ந்தோம். பாரிய நிதிநெருக்கடிகளைச் சந்தித்தோம். பன்னிரெண்டு இதழ்களுக்கு மேல் தொடரமுடியவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் பல தமிழ் அமைப்புகளும் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்ந்த போதும் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றும் செயற்பாட்டாளருக்கு ஊக்கிவிப்பது என்பது குதிரைக் கொம்பே. இருந்த போதும் ஒரு சிலர் ஆர்வத்தினாலும் ஆத்மதிருப்திக்காகவும் தமது சொந்த பணத்தை செலவு செய்து தொண்டாற்றுகிறார்கள். சிலர் ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் கூடி தெருத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளயாருக்கு உடைப்பது என்ற பழமொழிக்கு ஒப்ப அரச உதவித் தொகைகளைப் பெற்று உருப்படியானவற்றை செய்யாமல் வீண் விரயம் செய்கிறார்கள்.

அக்கினிக்குஞ்சு இன்று வரை எந்த விளம்பரங்கள் அல்லது அரச உதவியோ அல்லது தனிப்பட்ட நபர்களிடம். இருந்து அன்பளிப்பு தொகைகள் பெற்று வெளிவரவில்லை . எனது தனிப்பட்ட உழைப்பின் மூலம் வரும் வருமானத்தை கொண்டே வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதில் பெருமையடைகிறேன் முடிந்த வரை ஓடுவோம். முடியாது என்னும் நிலை வரவிடாதே என்று இறைவனை வேண்டுவோம்.

உலகெங்கும் பரந்து வாழும் படைப்பாளிகளின் படைப்புக்களை இருகரம் நீட்டி வரவேற்று பிரசுரித்து வருகின்றோம். எம்மோடு இதுவரை இணைந்து பயணிக்காத, பயணிக்கவிரும்பும் படைப்பாளிகள் தயக்கமின்றி தங்கள் ஆக்கங்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். நிச்சயமாக பிரசுரிப்போம். தங்கள் நட்பும், ஆதரவும் அக்கினிக்குஞ்சின் முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் உதவும்.

மேலும், உலகெங்கும் பரந்து வாழும் படைப்பாளிகள் கலைஞர்கள் பற்றிய களஞ்சியம் ஒன்றினை திரட்டும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் அதன் முன்னோட்டமாகவே அவர்களுடைய விபரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு வருகிறோம். தம்மை அறியாதவர்கள் மத்தியிலே தம்மை பற்றிய பெருமைகளைச் சொல்லும் உரிமை படைப்பாளிகள் கலைஞர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்பன்னெடுங் காலமாகவே அங்கீகரித்துள்ளது. உங்களைப்பற்றிய விபரங்களையும் புகைப்படத்தையும் எமக்கு அனுப்பி வையுங்கள் இது நாளைய படைப்பாளிகள் கலைஞர்களோடு
அகலித்து ஆரோக்கியமான தமிழ்ப் பயணம் செய்வதற்கு இக்களஞ்சியம் உதவுவதுடன் நாளைய சந்ததியினர் தமிழ் பயணம் தொடர உற்றதுணையாக இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த பதின்மூன்று (13) வருடங்களாக அக்கினிக்குஞ்சு உலாவர எம்முடன் இணைந்து வடம் இழுத்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் துணிச்சலான இலக் கிய படைப்பாளி என்று போற்றப்பட்ட மறைந்த எஸ்.பொ- அவர்கள் எனக்கு இலக்கிய ஆசானாகவும் அக்கினிக்குஞ்சுவின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தது என்றும் எனது தமிழ் ஊழியத்தில் மறக்க முடியா ஒன்று.

அக்கினிக் குஞ்சு என்று பெயர் அதற்கான இலச்சினைஆகியனவும் அவர் ஆலோசனையால் உருவானவையே இந்த தருணத்தில் அவரை நினவுகூர்ந்து. பதினான்காம் (14) ஆண்டில் அக்கினிக்குஞ்சு பயணம் தொடர்கிறது.

கவிஞர்அம்பி, அம்பிதாத்தா என்று எல்லோராலும் அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகை பாகர் தனது 96 வயதிலும் தமிழ் இலக்கியம் பேசி வருகிறார். அக்கினிக்குஞ்சு ஆரம்பித்த காலம் முதற் கொண்டு அக்கினிக்குஞ்சுவின் வளர்ச்சியில் பல வழிகளில் பங்காற்றிவருபவர் அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தற்காலத்தமிழ் இலக்கியத்தின் பன்முக ஆளு மை கொண்ட படைப்பாளி கவிஞர் மகாதேவஐயர்
ஜெயராமசர்மா அவர்களும் தொடர்ந்து அக்கினிக்குஞ்சு வின் வளர்ச்சியில் பங்காற்றி வருவது டன் ஆசிரியர் குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். அவருக்கும் என் நன்றிகள்.

என்னுடன் நீண்ட காலமாக கலைஇலக்கிய பணிகளில் இணைந்து பயணித்து வரும் சகோதரர் நண்பர் அக்கினிக் குஞ்சுவின் சட்ட ஆலோசகர் மட்டக்களப்பு மண்வாசனை கலந்த ஆக்கங்கள் வழங்கி அளப்பரிய உதவிகளை வழங்கி வரும் சட்டத்தரணி பாடும் மீன் சிறி கந்தராசா அவர்களுக்கும் என் நன்றிகள்.

சுமார் முப்பத்தைந்து (35) வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் என் கலைத்தாகத்துக்கு பிள்ளையார் சுழிபோட்டு மேடை தந்து வழிசமைத்த பிரபல எழுத்தாளறும் சிறந்த சமூகசேவையாளறும் தமிழ் இலக்கியத்தை தன் உயிர் மூச்சாக கொண்டு இயங்கிவரும் அண்ணன் முருகபூபதி அவர்கள் தன் படைப்புக்கள் மூலம் அக்கினிக்குஞ்சுவை அலங்கரிப்பவர் அவருக்கும் என் நன்றிகள்

காலத்தின் தேவை கருதி கடுகதியில் அக்கினிக்குஞ்சுவின் ஆரோக்கியத்திற்கு அற்புதமான கதைகள் வாரா வாரம் வழங்கும் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் நன்றிகள்

உண்மைச் சம்பவங்களை கருவாக உள்வாங்கி பல தொடர்கதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என வழங்கிவரும் சிறந்த நடிகர் படைப்பாளி, சிறந்த விமர்சகர் என் இனிய நண்பர் ஏலையா க. முருகதாசனுக்கும் என் நன்றிகள்.

அத்திபூத்தாற் போல் அப்பப்ப கதைகள் கவிதைகள், கட்டுரைகள் என தந்து தன் இருப்பை உறுதிப்படுத்தும் அன்பிற்கினிய சங்கரசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

கனகதைகள் தருவதில்லை ஆனால் கனதியான கதைகள் அவ்வவ்போது தந்து அக்கினிக்குஞ்சுவின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க உதவி வரும் எஸ்-ஜெகதீசன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

.  கடுகதியில் உலக அரசியலை அலசி அற்புதமான அரசியல் கட்டுரைகளைஅடுக்கடுக்கா அனுப்பி உதவும் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களுக்கும் நன்றிகள்.

தொடர் கதைகள் அரசியல் கட்டுரைகள் என ஈழத்தில் இருந்து இடை விடாது வழங்கி வரும் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணக்கும் என் நன்றிகள்.

அக்கினிக் குஞ்சுவின் வளர்ச்சியிலே ஆரம்பகாலம். முதல் இன்றுவரை பக்கதுணையாக நின்று தொடர்ந்து விளம்பரம் மற்றும் அக்கினிக்குஞ்சு விழாக்களுக்கு பிரதான அனுசரனை வழங்கி ஊக்குவிக்கும் என் நீண்ட கால நண்பர் JAYANI JEWELLERY AND P.J. HOTELS உரிமையாளர் பிரபா அவர்களுக்கும் என் நன்றிகள்

அக்கினிக்குஞ்சுவில் வெளியாகும் கதைகள் கட்டுரைகளுக்கு பொருத்தமான படங்கள் அழகாக வரைந்து தந்து உதவுவதுடன் தன் படைப்புக்களையும் தந்து உதவிவரும் ஓவியர் படைப்பாளியுமான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களுக்கும் நன்றிகள்

மேலும் – படைப்பாளிகளான நியூசிலாந்து சிற்சபேசன் … இந்தியா – சோலச்சி … லண்டன் முல்லை அமுதன் … இந்தியா- மா சங்கீதா … இந்தியா – யாழ் ராகவன் …. இலங்கை – நூருல்  உமர்…. மெல்பேன் நடேசன் … ஆகியோருக்கும் என் நன்றிகள்.

அக்கினிக்குஞ்சுவின் இணையத்தள வடிவமைப்பு … தொழில் நுட்பம்  … செய்தி ஆசிரியர்கள் என பல வழிகளில் துணை நிற்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

எனது கலை  இலக்கிய பயணம் எந்த தங்கு தடையும் இன்றி தொடர எந்த வித ஆக்கினையும் அரியண்டமும் தராமல் ஆதரவு வழங்கி வரும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

நிறைவாக அக்கினிக் குஞ்சுவின் வாசகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எமது தளத்தை பார்வையிடும் ஆயிரக்கணக்கான . வாசகர் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

இந்த வெற்றிக்கு முழுதும் காரணமானவர்கள் படைப்பாளிகளும் வாசகர்களுமே எங்களுடைய பணிதொடர என்றும் உங்கள் ஆதரவையும் நல்லாசியையும் வேண்டி நிற்கும் உங்கள்…. யாழ் -எஸ் – பாஸ்கர்.

Loading

3 Comments

  1. மனம் விட்டு பேசும் தங்கள் மாண்பு கண்டு மகிழ்ந்தேன். கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக தங்களோடு பயணித்து வருகிறேன். புதிதாக பயணிக்கும் படைப்பாளிகளுக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என் படைப்புக்களை அவ்வப்போது தருகிறேன். மேலும் என் படைப்புக்களை தொகுத்து நூலாக்கும் எண்ணம் எனக்கில்லை என்பதும் ஒரு காரணம்.

    ஜாம்பவான்கள் நூல்களுக்கு மத்தியில் நான் காற்றில் கரைந்து போவேன். ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சிற்றிலை போல் ஆவேன் என்பதும் நான் நூல் வெளியிடாததற்கு ஒரு காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பத்தோடு பதினைந்தாக எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பது நூல் வெளியிட எனக்கு விருப்பமில்லை. நூல் வெளியிட்டு அதனால் கிடைப்பதை நான் அக்கினிக்குஞ்சு இதழில் எழுதுவதன் மூலம் எப்போதோ அடைந்து விட்டேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கர சுப்பிரமணியன்.

  2. அன்புடன்

    யாழ் பாஸ்கருக்கு

    பதினான்காம் ஆண்டில் நுழையும் அக்கினிக் குஞ்சு இணைய இதழுக்கு என் வாழ்த்தும் மகிழ்ச்சியும்

    இரண்டாம் விசுவாமித்திரன்

  3. சிறிதெனத் தந்ததும் பெரிது நான் பெற்றதும் பேறெனக் கொள்கிறேன். நாளிதில் நன்றி!

    சுபீட்சமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! பெருகுக நலம் எலாம்.

    எஸ். ஜெகதீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.