இலக்கியச்சோலை

“மிக மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்” …. ஏலையா க.முருகதாசன்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கிவரும் அக்கினிக்குஞ்சு இணையத்தளம் தனது ஊடக,கலை இலக்கியப் பயணத்தில் பதினாலாவது ஆண்டு பயணப் பாதையில் தொடர்கின்ற இவ்வேளை அதனுடைய சேவையை வாழ்த்திப்: பாராட்டுவதுடன் இவ்விணையத்தளத்தின் ஆசிரியர் திரு.சதா பாஸ்கர் அவர்களை மிகுந்த பெருமையுடன் பாராட்டி மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

ஒரு காலகட்டத்தில் அச்சு ஊடகங்கள் நாளாந்தம் தாம் அறியும் சமூகம்,அரசியல் கலை இலக்கியம் போன்ற செய்திகளை மக்களுக்கு அச்சு ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர்.

காலப் போக்கில் சிந்தனையின் நீட்சி காரணமாக செய்தி ஊடகங்கள் பன்முக அறிவுத் தேடலைக் கவனத்தில் எடுத்து செய்திகளுடன் கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள், கலை சம்பந்தப்பட்ட விடயங்கள் என பன்முகங்களை கொண்டவையாக விரிவடைந்தன.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற போது தம்மோடு கொண்டு சென்ற எழுத்துசார் இலக்கியம் ,கலை என்பவற்றையும் அங்கும் அவற்றை மக்கள் அறியத் தந்தனர்.

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் தாம் பிரசுரிக்கும் செய்திகளில் தமது கருத்தையோ பக்கசார்பையோ திணிக்காமல் உள்ளதை உள்ளபடி பிரசுரித்தல்,இலங்கை,தமிழ்நாடு,இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள்,தமிழர்கள் வாழும் அரேபிய நாடுகள் என அங்குள்ள தரமான எழுத்தாளர்களின் கதை,கட்டுரை,கவிதை என தரமான ஆக்கங்கள் இவ்விணையத்தளத்தில் வெளிவருவதுடன் கலை சம்பந்தப்பட்ட செய்திகள் விழாக்கள் என்பன பற்றிய விபரங்களும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் பிரசுரமாகி வருகின்றன.

பல ஆணடுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில்,எழுத்தாளர் திரு.எஸ்.பொ அவர்களின் ஆலோசனையுடன் எழுத்தாளர் திரு.சதா பாஸ்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அக்கினிக்குஞ்சு சஞ்சிகையின் நீட்சிதான் அவரின் இவ்விணையத்தளம்.

ஒரு சஞ்சிகையாகட்டும் அல்லது ஒரு இணையத்தளமாகட்டும் பார்வையைக் கவர்நதிழுக்கிற மாதிரி கண்ணுக்கு இதமாக இருக்க வேண்டும்.ஏனெனில் கண்ணின் வழியாக மூளைக்குச் சென்றடையும் தூண்டுணர்வு வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

பார்வைக்குச் சுகமான வடிவமைப்புடனும் காத்திரமானஆக்கங்களுடனும் இவ்வினையத்தளம் பதினான்கு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.

2014 ஆண்டு நண்பர் திரு.இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் உதவியுடன் என்னால் முன்னெடுக்கப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற தொடர்கதையின் வாயிலாக எனக்கும் அக்கினிக்குஞ்சு இணையத்தள

ஆசிரியர் திரு.சதா பாஸ்கருக்கும் இடையில் ஏற்பட்ட இலக்கியத் தொடர்பு நட்பாகித் தொடர்கிறது.இந்த ஒன்பது வருட காலத்தில் எனது பல ஆக்கங்களை தனது இணையத்தளத்தில் பிரசுரித்து பெரும் ஆதரவைத் தந்து வருகிறார்.

ஒரு இணையத்தளத்தை நடத்துவது சாதாரண விடயம் அல்ல.வேலைக்குச் செல்லும் ஒருவர் இணையத்தளம் நடத்துவதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும். பணச் செலவுடன் களைப்பும் மனச்சோர்வும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவிருக்கும்.ஆனால் இவற்றையெல்லபாம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்தும் இவ்விணையத்தளத்தை சிறப்பாக நடத்தி வரும் ஆசிரியருக்கும்,அவரின் குடும்பத்தினருக்கும் ஆக்காதாரர்கள் வாசகர்கள் என அனைவருக்கும் பணிவான வணக்கத்துடன் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.