கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நபர் காலமானார்
022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் காலமானதாக அதிகாரிகள் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் நேற்று முன்தினம் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
1909 ஆம் ஆண்டு மே 27 இல் தென் அமெரிக்கா – வெனிசுலாவில் உள்ள டச்சிரா மாநிலத்தின் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
குடும்பத்தில் 9வது பிள்ளையாக பிறந்த ஜுவான் விசென்டே பெரெஸ், அடுத்த மாதம் தனது 115வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தார்.
2022 பெப்ரவரி 4ஆம் திகதியன்று, கின்னஸ் சாதனையின்படி, பெரெஸ் 112 வயது மற்றும் 253 நாட்களுடன் உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். 2022 நிலவரப்படி அவர் 11 பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்தனர்.
ஐந்தாவது வயதில், அவர் தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் விவசாயத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அத்துடன்; கரும்பு மற்றும் கோப்பி அறுவடைக்கு உதவினார்” என்று 2022 இன் கின்னஸ் அறிக்கை கூறுகிறது.
கடினமாக வேலை செய்தல், விடுமுறை நாட்களில் ஓய்வெடுப்பது, சீக்கிரம் தூங்கச் செல்வது, கடவுளை நேசிப்பது, எப்போதும் அவரைத் தன் இதயத்தில் சுமந்து செல்வது என்பன அவரின் அன்றாட செயல்களாக இருந்தததாக குறிப்பிடப்படுகிறது.