அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரதேச குடியுறவு நிறுவனத்தின் பிரதானி மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் 4ஆம் திகதி கொழும்பு 5 ஹெவ்லோக்கில் நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதான பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பிரதிநிதிகள் பலர் அதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாணவர் விசா, ஸ்பொன்ஸர் விசா மற்றும் தொழில் விசா உட்பட பல்வேறு விசா பிரிவுகளில் பெற்றுக் கொள்ள கூடிய முறை தொடர்பில் இங்கு முழுமையான தெளிவுப்படுத்தல் வழங்கப்படவுள்ளது.
குடியுரிமை பெற்றுக் கொள்ள கூடிய பாடநெறியை தெரிவு செய்வதற்கு, புலமைப்பரிசிலுக்கு தேவையான தகுதி தொடர்பிலும் இதன்போது விளக்கம் வழங்கப்படவுள்ளது விசா பெற்றுக்கொள்வதற்கான நிதி மூலங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலிய குழுவினால் தெளிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.