கட்டுரைகள்
உலக சிறுவர் புத்தக தினமும் , குழந்தை இலக்கியமும்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(இன்று உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.)
உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கையின் நகர்வில் மனிதர்களிடமிருந்து மறைந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்று வாசிப்பு பழக்கம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகைகளையோ அல்லது நல்ல நூல்களையோ காசுகொடுத்து வாங்கி வீட்டில் படிப்பவர்களை விட நூலகங்களுக்கு சென்று படிப்பவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று இணைய வளர்ச்சியின் காரணமாக அந்த நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் கூட மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான். வாசிப்புதான் ஒரு மனிதனை பூரணமாக்க கூடியது. முடிந்தளவு நல்ல நூல்களை வாசிப்பதும், நமது எதிர்கால குழந்தைகளுக்கும் அந்த வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவும் அவசியமாகும்.
சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. IPPY
ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு) இத்தினத்தை கடைபிடிக்கிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில் ஏப்ரல் 2 ஆம் திகதி உலக சிறுவர் புத்தக தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.
குழந்தைகளின் அரசன் என போற்றப்படுபவர் டென்மார்க்கை சேர்ந்தவர் கவிஞர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்ற குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளே சர்வதேச குழந்தைகளின் புத்தக தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவர் 1805 ஏப்., 2ல் பிறந்தார். 14 வயதில் நடிகராக வேண்டும் என எண்ணினார். இவரது குரல் வளத்தை கேட்ட சக கலைஞர்கள், நீங்கள் ஏன் கவிதைகள் எழுதக்கூடாது என கேட்டனர். இதனை இலட்சியமாக எடுத்துக்கொண்ட ஆண்டர்சன் அதில் முழு ஈடுபாட்டை செலுத்தினார்.
பின் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
இவரது கதை புத்தகங்கள் 125 மொழிகளில்,மொழிபெயர்க்கப்
பட்டுள்ளது. இவரது கதைகளை தழுவி, அனிமேஷன் திரைப்படங்களும் வெளியாகின. சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புத்தங்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவர்களுக்கு, அச்சடிக்கும் பதிப்பகங்களுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ‘எச்.சி.ஆண்டர்சன் விருது’ ஐ.பி.பி.ஒய்., அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்தி குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தையாவது அவர்களுக்கு ஒதுக்கி அந்த நேரத்தில் வாசிப்பு பழக்கத்தை கட்டாயப்படுத்தலாம். அதே போன்று வீடுகளில் பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வாசிக்க கூடிய நல்ல நூல்களை பரிசளித்து அவர்களை வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதேவேளை குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கி சர்வதேச குழந்தைகளின் புத்தக தினத்தை கொண்டாட வேண்டும்.
குழந்தைகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்ற இவ்விரு நோக்கங்களுக்காக சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்ற இவ்விரு நோக்கங்களுக்காக சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.