உச்சி வெய்யிலிலே வெண்ணெய் விற்க வருகிறாரா? – நியூசிலாந்து சிற்சபேசன்
இந்தியாவிலே சனநாயகத் திருவிழா களைகட்ட ஆரம்பிக்கின்றது. மார்ச் 16ல் பொதுத்தேர்தல்அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ம் திகதி முதல் ஜூன் 1ம் திகதி வரை, ஏழு கட்டங்களாக,வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்பின்னர், ஒரேகட்டமாக, ஜூன் 4ல் வாக்குஎண்ணிக்கை நடைபெறுகின்றது.
தேர்தல் தொடர்பிலான பூர்வாங்க அறிவிப்பு வெளியாகும்வரையில் கட்சிகள்காத்திருப்பதில்லை. ஆறுமாதங்களுக்கு முன்னரேயே தேர்தல் சலசலப்புஆரம்பமாகிவிடுகின்றது. கூட்டணி ஊடாட்டங்கள் கண்சாடை காட்டத் தொடங்குகின்றன.
இந்தியப் பாராளுமன்றம் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாகும். அவை மக்களவை,மாநிலங்களவை என அழைக்கப்படுகின்றன. அதிலே, மக்களவைக்கான உறுப்பினர்களையேபொதுமக்கள் வாக்களித்து தெரிவு செய்கின்றனர். அதனாலே, மக்களவைத் தேர்தலையேபாராளுமன்றத் தேர்தல் என்று சுட்டுவது வழமையாகும்.
இந்தியாவிலே 28 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. சனத்தொகையின்அடிப்படையிலேயே தொகுதிகள் அமைகின்றன. மக்களவையிலே மொத்தமுள்ள 543உறுப்பினர்களிலே, சுமார் அரைவாசிப் பங்கினர் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம்,மேற்குவங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து தெரிவாகின்றனர்.
அந்தவகையிலே தமிழ்நாடு கவனத்தைப் பெறுகின்றது. அத்தோடு, தேசியக் கட்சிகள்தலையெடுக்கத் திணறுகின்ற சூழலும் கவனத்தைச் சுண்டுவதாகும். கடந்தஅரைநூற்றாண்டாகத் திராவிடக் கட்சிகளே தமிழக அரசியலில் கோலோச்சுகின்றன.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரியின் ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து 40மக்களவை தேர்தல் தொகுதிகள் என்பதாகவே தமிழ்நாட்டின் எண்ணிக்கைகவனிக்கப்படுகின்றது. ஏப்ரல் 19ம் திகதி ஒரேகட்டமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும்வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
தமிழ்நாட்டிலே இரண்டு அணிகளை மையப்படுத்தியதாகவே அரசியல்களம்காணப்படுகின்றது. ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகம். மற்றையது, அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பணிகளை திட்டமிட்டே செயற்படுத்துகின்றது. 2024மக்களவைத் தேர்தல் கூட்டணியை, தேர்தல் அறிவிப்பு வெளியாக முன்னரேஅறிவித்துவிட்டது. தொகுதிப்பங்கீட்டையும் வேகமாக முடித்திருந்தது. மொத்தமுள்ள 40தொகுதிகளில் – 21 திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், 10 காங்கிரஸ் கட்சிக்கும், தலா 2கம்யுனிஸ்ட், மார்கசிய கம்யுனிஸ்ட், மற்றும் தொல் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள்கட்சிக்கும், தலா ஒன்று வைகோவின் மறுமலர்ச்சி திமுக, முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, எந்தெந்த தொகுதிகளில்,எந்தக்கட்சி போட்டியிடுவது என்பதை முடிவெடுத்தது. அந்தவகையிலே, தேர்தலைஎதிர்கொள்ளக்கூடிய தயார்ப்படுத்தலை படிப்படியாக செயற்படுத்துகின்றது.
மறுவளத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்ஆகியிருக்கின்றது. ஜெயலாலிதாவின் மறைவுக்குபின் கட்சியினுடைய திரட்சிவீரியமிழக்கின்றது. தற்போது, எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு கட்சியிலேஓங்கியுள்ளது. இருந்தபோதிலும், ஒ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டியதன் பாதிப்புமறைகரமாகத் தெரிகின்றது. கூடவே, ஜெயலதாவின் வளர்ப்புமகனான டிடிவி தினகரனின்தனிக்கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தனி ஆவர்த்தனமும் இடைஞ்சலாகஉள்ளது. காரணம்: தென்மாவட்டங்களில் சுமார் ஐந்து விழுக்காடு வரையான வாக்குவங்கிடிடிவி தினகரனிடம் உள்ளதெனக் கணிக்கப்படுகின்றது.
ஜெயலலிதாவுக்குப் பிந்தைய காலத்திலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனானகூட்டணியிலேயே பாரதிய ஜனதாவும் தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றது. தற்போதுஅந்தநிலை இல்லை. பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக, 2023 செப்டெம்பரில்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.
ஆனாலும்கூட, 2024 மக்களவைத் தேர்தலிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்கூட்டணி அமைத்துக் கொள்ளவே பாரதிய ஜனதா விரும்பியது. காரணம்: சிலதொகுதிகளிலேனும் வெற்றி பெறுவதற்கு, பலமான கூட்டணி அவசியம் என்பதை பாரதியஜனதா நம்புகின்றது. ஆனால் அத்தகையதொரு கூட்டணி அமையவேயில்லை.அதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சிப் பிளவுகளும்கூடமுட்டுக்கட்டையாகியிருக்கலாம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தே பாரதிய ஜனதாவும்,பட்டாளி மக்கள் கட்சியும் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டன. அதேபோன்றதொருகூட்டணி 2024 மக்களவைத் தேர்தலிலே ஏற்பட்டிருந்தால், வடமாவட்டங்கள், கோவைமற்றும் தென்தமிழகத்தில் வெற்றி வாய்ப்புக்களை அதிகரித்திருக்கலாம்.எதுஎப்படியோ, எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்கூட்டணிக் கூடாரத்திலே நுழைய முடியவில்லை. அதனால், பட்டாளி மக்கள் கட்சியைஇழுத்துக்கொண்டுபோய் பாரதிய ஜனதா மற்றுமொரு கூட்டணியை அமைத்திருக்கின்றது.
கூடவே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து புறமொதுங்கியஒ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் பாரதிய ஜனதாவின் கூடாரத்திலே ஒதுங்கியுள்ளனர்.அந்தவகையிலே, இரண்டு கழகங்களுக்கு வெளியே பாரதிய ஜனதா தனியானதொருகூட்டணியை உருவாக்கியுள்ளது. அதன்மூலமாக, கழகங்களின் தோளிலேயே தேசியக்கட்சிகள் சவாரி செய்கின்றன என்னும் பிம்பத்தை பாரதிய ஜனதா மாற்ற எத்தனிக்கின்றது.
எதுஎப்படியாகிலும், தமிழ்நாட்டில் கையளவு வெற்றியையேனும் பெற்றுவிடவேண்டும் எனமோடி தலையால் தண்ணீர் குடிக்கின்றார். தமிழ்மொழியின் அருமை பெருமைகளைப்பேசுகின்றார். தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி பிறக்கிறது என்கிறார். தமிழ்நாட்டிலேஇருமல் தும்மல் சத்தம் கேட்டால் போதும், உடனேயே பிளேன் பிடித்து வந்துஇறங்கிவிடுகின்றார். இவையெல்லாம் உச்சி வெய்யிலில் வெண்ணெய் விற்றகதையாகிவிடுமா என்பது தேர்தல் முடிவு வரும்போது தெரிந்துவிடும்.