கலைஞர்கள்

திரு… கே . வி . செல்வராஜா … (கலைஞர்) … கனடா.

திரு கே வி செல்வராஜா ( சிந்தனைச்செல்வன்) 1947 பருத்தித்துறையில் பிறந்தார்.

இவருடைய பாட்டனார்(அப்பப்பா)கத்தர் தாய்மாமனார் தம்பு (இவர் சிலம்பம் குத்துச்சண்டை குஸ்தி போன்றவற்றிலும்) இருவரும் நாடகத்துறையில் (கூத்து சத்தியவான் சாவித்திரி அண்ணாவியார்களாக) சிறந்து விளங்கியிருந்தமையால் சிறுவயதிலேயே (1951) சிறுபிள்ளைப் பாத்திரங்களுக்கு மேடையேற்றப்பட்டு கலைவாழ்வில் அடியெடுத்து வைத்து அவர்களது கலைவாழ்வு பிடித்துப்போக அவர்கள் மூலமாக பல மேடைகளிலும் பின்னர் இன்றுவரை 70 ஆண்டுகளுக்குமேலாக அதைத் தொடர்கின்றார்.

புற்றளை மகாவித்தியாலயத்தில் கல்வியை ஆரம்பித்து புலோலி மகாவித்தியாலத்திலும் பின்னர் பரமேஸ்வராக்கல்லூரியில் (இன்றைய பல்கலைக்கழகம்) உயர்கல்வியை கற்றார் பின்னர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியின்போது காசியப்பன் சங்கிலியன் போன்ற நாடகங்களை எழுதி நடித்தார். அதற்கு காசியப்பன் நாடகத்திற்கு விருதும் பெற்றார்.

பூநகரி பரம்பன்கிராய் பாடசாலையில் அதிபராக இருந்து வில்லடி பாடசாலையில் கற்பித்து வந்தார். பூநகரியை வாழ்விடமாகக் கொண்டு 1963 உதயசூரியன் நாடகமன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை எழுதி நடித்து மேடையேற்றினார் பின்னர்1969, 1970 களில் தங்கச்செல்வம் நாடகமன்றத்தை உருவாக்கி பிரிந்த உறவு இராஜத்துரோகி சப சமுகச்சுடர் கண்திறந்தது என்பன போன்ற பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்தார். இக்காலப்பகுதியில் மக்கள்குரல் திரைப்பத்திரிகை துரை அவர்களது பாராடுட்க்களில் இவர் ஏன் திரைத்துறைக்கு போகக்கூடதென்று விமர்சனமெழுதி இருந்தார். அவர் கூறியபடி ஆறுமாதங்களில் அது நடைபெற்றது. 

1971ம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகை சித்தனைச்செல்வன் என்கின்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 1978 தொடக்கம் 1982 வரை கோண்டாவில் வாகீஸ்வரி ஸ்வரி நாடகமன்றத்தில் அலாவுதீன் நாடகத்தின் பிரதான பாத்திரத்தில் ஊதியம் பெற்று நடித்தார். இந்நாடகம் பல ஆயிரம் மேடைகளை இலங்கையெங்கும் மேடையேற்றியது. நுவரெலியா வட்டக்கொட மகாவித்தியாலயத்திற்கு கல்வி கற்பிக்கச் சென்ற வேளை இலங்கைத் தமிழ்திரைப்படத்தில் நடித்த காத்திருப்பேன் உனக்காக(1976  செல்வராஜா) நெஞ்சுக்குத் தெரியும்(1979) போன்ற படங்களில் நடித்தார் பின்னர் தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் சென்று (1980-1984) அங்கும் உள்ளூர் மேடை நாடகங்களில் நடித்தார்.

கனடாவில்1985ம் ஆண்டியிலுருந்து கலோ இந்தியா  தொலைக்காட்சியில் ஆத்மாவின் ராகங்கள்தொலைக்காட்சித்தொடரை எழுதி இயக்கி நடித்தார். கனடிய முதல் தமிழ் தொலைக்காட்சியான தமிழமுதம் தொலைக்காட்சியின் ஆலோசகராக இருந்தார். கனடாவிற்கு வருகைதரும் தென்இந்திய நாடகக்கலைஞர்களுடன் இணைந்து பல நாடகங்களை நடித்தார்.  குறிப்பாக வை.ஜி மகேந்திரன் நாடகக்குழு மற்றும் மேஜர் சுந்தரராஜன் அவர்களுடன் இணைந்து நடித்தார். கனடாவில் வகிர்தாலயா நாடகமன்றத்தை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி நடிப்பிசைச்செல்வம் (வை ஜி மகேந்திரன்) நாடகரத்தினம்(மேஜர் சுந்தரராஜன் போன்ற பல விருதுகளையும் பெற்றார் அவற்றில் அவர் மகிழ்ந்து கூறுவது நடிகமணி வி.வி. வைரமுத்து பெயரிலான விருதுபெற்றதை பேறாகவே நினைவு கூர்ந்தார். 1951ம் ஆண்டுதொடங்கி 2024 இன்றுவரை கலையை தொடர்ந்துவருகிறார்.

பி.கு…. 50வருடங்களுக்கு மேலான குடும்ப நட்பு —இவரது நாடக மன்றத்தினரால் மேடையேற்றப்பட்டு பல நாடக போட்டிகளில் முதல் பரிசு பெற்ற நாடகமான “சங்கமம்” நாடகத்தை1969களில்  நான் பரமேஸ்வராக்கல்லூரி மாணவனாக இருந்த போது இவரின் நெறியாள்கையில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து கல்லூரி கலை விழாவில் மேடையேற்றி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற அந்த பசுமையான நினைவுகள் இன்றும் நெஞ்சை வருடுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.