இலக்கியச்சோலை
“அத்திவாரம் இல்லாத இந்து மதம்” …
நாம் அறிந்ததை, படித்து வியந்தை எமது உறவுகளோடு பகிர்வதும், அறியச் செய்வதும் ஒரு வகையில் நல்ல அறமே.
அந்த வகையில் நான் படித்து படித்து மீண்டும் மீண்டும் படிக்க முயலும் ஒரு நூல்
நேசமணி புத்திரனின்
அத்திவாரம் இல்லாத இந்து மதம்
இந்த நூலில் அவரே சொல்கிறார்
” நீங்கள் இந்து மதத்தவர் என்பதை ஒரு புறம் தள்ளி விட்டு தமிழர் என்ற ஒரு தகுதியுடன் வாசியுங்கள் “
அணிந்துரை எழுதிய திரு கரவையூர் தயா சொல்கிறார்
” ஒவ்வொரு தமிழர் கைய்யிலும் இருக்க வேண்டிய நூல் “
நான் மேற்சொன்ன இரண்டையும்
வழிமொழிகிறேன்..
நிற்சயமாக ஒவ்வொரு தமிழரும் இதை படிக்கவேண்டும்
ஊசியின் செவி வழி புகுந்த நூல் கிழிசல்களை தைப்பது போல
இந்த நூல் சமஸ்கிருதம் மந்திரம் என்ற மாயைக்குள் கிடக்கும் பலரின் அறியாமைகளை தைக்க முயல்கிறது
இந்த நூலில் மிகவும் உச்சம் தொட்டது
உசாத்துணை பாடல்களும் அதற்கான விளக்கம் தனது பார்வை என்பதும்
உசாத்துணை நூல் அதன் பக்கங்கள் என்பனவும் தான்
இந்த நூலை ஒரு இலக்கிய சுரங்கமாகவே நான் காண்கிறேன்..
ஆசிரியரின் எழுத்து நடை ஒரு சாமானிய வாசகனான என்னை மிகவும் இலகுவாக அழைத்து செல்கிறது
வாசிக்கும்போது அந்த இடங்களில் நான் நிற்பது போலவே உணரமுடிகிறது
இதில் ஒவ்வொரு இடங்களிலும் நாங்கள் தினமும் பாவிக்கும் சொல்லாடல்களை பாவித்ததால் மிகவும் எழிமையாக மனதில் பதிந்து விடுகிறது
இது ஏதடா வம்பு
உனக்குத்தான் வெளிச்சம்
எழுத்தரின் பெயர் தெரியவில்லை
அடடா அடடா எவ்வளவு பெரிய தாராள மனம்
தாங்க முடியல டா சாமி
மனு வின் பயித்தியம் உனக்கும் எனக்கும் பிடிக்காமல் இருக்கட்டும்
இது போன்ற பல சொற்கள்
இவைகள் இரண்டு வகையான ஆதிக்கம் செலுத்தி நிற்கிறது நூலில்
ஒன்று இலகுவாக எமது மனதில் ஆழமாக பதிய வைக்கிறார்
அடுத்து இந்த சமூக அவலங்களை கண்டு அவர் கொதிக்கும் கொதிப்பு
தமிழர் தமிழராக இருந்தபோது அவர்கள் இடையில் எப்படி இந்த ஏற்றத்தாழ்வுகளை புகுத்தினார்கள்.. தமிழர் எப்படி ஏமாந்தார்கள் என்பதை அறிய இந்த நூல் உதவும்
அண்மையில் இந்த நூல் ஆசிரியர் தனது முகநூலில்
” இந்த சின்ன வீரன் ” என்று தனது பதிலில் குறிப்பிட்டார்
உண்மையில் நீங்கள் சின்ன வீரன் தான்
கடுகு சிறிதானாலும் காரம் பெரிதான சின்ன வீரன் தான்
இந்த நூலை எழுத
இந்த மனு நீதியின் அநீதியை எழுத இந்த சின்ன வீரனின் பெரு வீரம் அடடா அடடா
இப்போதும் கூட தமது நெற்றி வியர்வை சிந்தி கோவில்களை கட்டிப்போட்டு
மந்திரம் சொல்லி பூசை வைக்குமாப் போல வருமா என்று கை கட்டி நிற்கும் ஒவ்வொரு வரும் வாசிக்க வேண்டிய நூல்..
அனுஷ்டானங்களின் அறியாமையை இப்படி உரத்துச் சொல்ல இந்த ஆசியரால் தான் முடியும்
நூல் ஆசிரியர் நேசமணி புத்திரன் அவுஸ்திலியா நாட்டில் வாழ்கிறார்..
இந்த நூலை அமேசனால் பெறமுடியும்..
உண்மையில் ஆசியரே சின்ன வீரரே நன்றி நன்றி நன்றி.. பாராட்டுகள் வாழ்த்துகள்..
உங்கள் தமிழ் பணி தொடரட்டும்
இந்த நூலை வாசித்தது நான் பெற்ற பேறு
வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் நூலாசிரியர் நேசமணி புத்திரன்
. https://www.amazon.co.uk/Aththivaaram-Illaatha-Inthumatham-அத்திவாரம்-இல்லாத/dp/1636403328 இணைய தளத்தில் வாங்கலாம். Kindleல் e book ஆகவும் உண்டு.