“உனை நீ அறி” ….. ஏலையா க.முருகதாசன்.
உனை நீ அறி என்ற வாசகத்தில் அது சொல்லும் அர்த்தத்தையும் அதன் ஆழத்தையம் பரப்பையும் அறிந்து கொள்வது முடியாத காரியம்.பிரபஞ்சக்; கடலை அறிந்து கொள்ளத்தான் முடியுமா.போகப் போக போய்க்கொண்டேயிருக்கும் பிரபஞ்ச வெளி போன்றதுதான் உனை நீ அறி என்ற சொற்களுக்குள்; பொதிந்து கிடக்கம் நுட்பம்.கேள்வி கேட்டு பதில் கண்டு,சிந்தித்து சிந்தனையை தேடலாக்கி சந்திக்கும் வியப்புக்குரிய விடயங்களை உள்வாங்கி அறிவைச் சேகரித்தாலும் உனை நீ அறி என்பதற்கு நிறைவு என்பது கிடையாது.
உனை நீ அறி என்று தலைப்பிட்டு ஒன்றக்கு மேற்பட்ட தடவைகள் நான் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறேன்.ஆனால் அவை எதுவுமே முழுமையானவை அல்ல.முழுமையை எந்த அறிஞராலும் சொல்ல முடியாது.
இந்தச் சொற்களுக்குள் இருக்கும் யார் நீ ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலைத் தேடிச் செல்வோம்.
யார் நீ? ஏன்ற கேள்விக்கு முதல் பதிலாக வருவது.அவரவர் பெற்றோரை இனங்காட்ட எவரின் பிள்ளை நீ என்பதுதான்.அந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளை கவனிப்பவர்கள் பெற்றோர்களின் வளர்ப்புப் பற்றி சாதகபாதகமான விமர்சனங்களை வைப்பார்கள்.அது சமூக இயல்பும் யதார்த்தமுமாகும்.
யார் நீ? என்பதில் அடுத்த பதில் எதை நோக்கியதாக இருக்குமென்றால் நீ எந்த ஊர்க்காரன் என்பதை நோக்கியேதான் இருக்கும்..அப்பொழுதும் ஒருவரின் பழக்கவழக்கங்களை வைத்து இது அவரின் ஊர்க்குணம் என்று சாதகபாதகமான கருத்து வரும்.
யார் நீ? ஏன்பதில் நீ எங்கே படித்தாய் என்று கேள்வி வரும் போது அவரின் அறிவினையும் அவரின் நடவடிக்கையையும் எடை போட்டு அந்தப் பள்ளிக்கூடமா என்று சாதகபாதகமான விமர்சனங்களும் கருத்துக்களும் வரும்.
யார் நீ? என்பதில் ஒருவரின் நண்பர்கள் வட்டத்தை அறியும் போது ஓ..அவர்களா உனது நண்பர்கள் எனக் கேள்வி எழுந்து அவர்களைப் போலத்தான் நீயும் இருப்பாய் எனச் சாதகபாதகமான கருத்து வரும்.
யார் நீ? என்பதில் நீ எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்ற கேள்வி க்கூடாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்ற பதில் வரும் போது அந்த இனத்தின் மொழிக்குணம்,பழக்கவழக்க பண்பாட்டுக்குணம் என அவற்றின் சாதகபாதக அடையாளங்களைச் வினாவுக்கு விடையாகச் சொல்லப்படும்.
யார் நீ? என்று அடுத்து வரும் கேள்வி.அவரவர் உளவியல் பண்பு சார்ந்ததாக இருக்கும்.ஒருவரின் நடத்தை அவரின் பண்பைக் காட்டுவதாக இருக்கும்.
உலக இனங்கள் ஒவ்வொன்றையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு அந்தந்த இனங்களின் மொழி,கலை பண்பாட்டு அடையாளங்களுடன்,அவரவரின்
சமயங்கள்,குடும்ப உறவுகளைப் பேணுகின்ற முறைமை இன்னும் ஒவ்வொரு இனத்துக்குமுரிய தனித்துவங்கள் என எல்லா அடையாளங்களும் ஒர் இனத்திலிருந்து இன்னொரு இனத்தை வேறுபடுத்திப் பார்ப்பகதற்கு உதவுகின்றது.
ஓவ்வொரு தனிமனிதனும் அந்தந்த இனங்களை வெளிக்காட்டும் பிரதிநிதி என்வபதற்கமைய,அதை மற்றவர்கள் விதந்துரைக்கும் வகையிலும் சிலாகித்து மகிழ்ந்துரைக்கும் வகையிலும் ஒவ்வொரு இனத்திலும் தோன்றிய,தத்துவஞானிகள்,அறிஞர்கள்,மொழிக்காக,சுதந்திரத்திற்;காக நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்கள்,விஞ்ஞானிகள் உலக மக்களுக்கான அறிவியல் நூல்களை எழுதியவர்ள்,விவசாயத்துறையில் புதுமையைக் கண்டுபிடித்தவர்கள்,நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தவர்கள் என மனிதகுலத்தின் மாண்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்த மனிதர்களை அவர்கள் எந்தெந்த இனத்தை எந்தெந்த நாட்டைச் சார்ந்தவர்களோ அவர்களை முன்நிறுத்தி அவர்களை நினைவு கூர்ந்து ஓ நீங்கள் அந்த இனத்தைச் சேர்ந்தவரா,அந்த நாட்டைச் சேர்ந்தவரா எனப் போற்றுகிறார்கள் மகிழ்ச்சியடைய வைக்கிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையென்றால் அது ஒரு கல்விச் சிறப்புமிக்க நாடு,இலங்கைப் பல்கலைக்கழங்கள் மிகச் சிறந்தவை என்ற அபிப்பராயமும் கணிப்பீடுகளும் உண்டு.
அதிலும் தமிழ்ர்களைப் பற்றியெல்லாம் பேசும் போதும் விதந்துரைக்கும் போதெல்லாம் தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்கள்.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையின் பொன்மொழியை நிலைநாட்டுபவர்கள் என்ற அபிப்பிராயம் ஏகோபித்த அபிப்பிராயமாக இருந்து வருகிறது.
அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களைப்: பற்றி ஒரு பொது அபிப்பிராயம் உண்டு.யாழ்ப்பாணத் தமிழர்களில் 98 வீதமான தமிழர்கள் படித்தவர்கள் என்பதே.கல்வியிலிருந்து வெளிக்கிளம்பும் அறிவு எதுவேன்றால் சமூகக்கேடுகளாக கருதப்படுபவையையும் ஒரு இனத்துக்கு அவமானம் தருபவையாக இருப்பவற்றையும் செய்யக்கூடாது என்பதேயாகும்.
பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்பது போல எதிரியும் வெட்கித்தலைகுனிவது போல எமது கல்வியினால் பெற்ற அறிவு இருக்க வேண்டும்.எமது நடத்தை இருக்க வேண்டும்.நல்லதை நினைப்பதும்,நல்லதைச் சொல்வதும்,நல்லதைச் செய்வதுமே மிகச் சிறந்த மனித மாண்பு.
யாழ் மாவட்டத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சிய பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.யாழ் மாவட்டத்தின் கிராமப்புறங்களில்கூட தரமான பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
அங்கெல்லாம் படித்த இளைஞர்களில் சிலர் கேட்பார் புத்தி கேட்டு கடந்த 09.02.24 அன்று,கனடா வாழ் தொழிலதிபர் திரு.இந்திரகுமார் பத்மநாதனின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடகர் கரிகரனின் இசைநிகழ்ச்சியிலும் அதுசார்ந்த நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவென வந்த நடன வடிவமைப்பாளர்
திருமதி.கலா மாஸ்ரர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள்.
இது மிகவும் அருவருக்கத்தக்கக் கேவலமான செயல்.இதனால் அந்த நடன வடிவமைப்பாளர் கவலைப்படட்டும்,ஆத்திரப்படட்டும்,அவமானப்படட்டும் என்றெண்ணிச் செய்தவர்களே அவமானப்பட வேண்டியவர்கள்.
விருந்தினராகச் சென்ற இடத்தில் தான் மதிக்கும் யாழ்ப்பாணத் தமிழருக்குள் இப்படியும் இருக்கிறார்களே என யாழ் தமிழர்களில் இதனைச் செய்தவர்களைப் பற்றி அவர் எண்ணுவதுடன் அது காலத்துக்கும் அவரின் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்..
தமிழகத்தில் இதனை அவர் சொல்லாமல் விட்டிருக்கமாட்டார்.ஒருசிலர் செய்த கீழ்த்ததரமான வேலைகளால் அவமானத்தால் வெட்கித்தலைகுனிந்து நிற்பவர்கள் கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்களே.
இப்படியொரு சுவரொட்டியைத் அடித்தமைக்கு காரணம் 2009 ஆண்டு தமழீழப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலா மாஸ்ரர் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்திக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் சுவரொட்டியை அடித்த ஒட்டியவர்.
கலா மாஸ்ரர் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளரே தவிர நிகழ்ச்சி நடைபெற்ற தொலைக்காட்சி அவருடையது அல்ல.நிகழ்ச்சியைத் தயாரித்த தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் அவர் சம்பளத்திற்கு வேலை செய்பவர்.அதுகூடவா அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
சும்மா ஒப்புக்கு குற்றம்சாட்டுபவர்கள் பக்கம் நின்றால்கூட கலைஞர் தொலைக்காட்சியை நடத்தியவர்கள் கலைஞர் திரு.மு.கருணாநிதியின் குடும்பக்குழுமத் தொலைக்காட்சியே அது.ஆதலால் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமெனில் கலைஞர் திரு.மு.கருணாநிதிக்கெதிராகவல்லவா சுவரொட்டி அடித்து ஒட்டியிருக்க வேண்டும் அல்லது இன்றைய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவல்லவா சுவரொட்டி அடித்து ஒடுஇடியிருக்க வேண்டும்.ஏனெனில் கலைஞர் தொலைக்காட்சியில் அவரும் ஒரு பங்குதாரர் என்பதற்காகவே.
2009 ஆண்டு தமிழீழப் போர் நடந்து கொண்டிருந்த போது போருக்கு ஆதரவாக இருந்த மக்களே தாயகத்தில தமது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
திருமணங்கள் நடந்தன,பூப்புனித நீராட்டு விழாக்கள் நடந்தன,பிறந்தநாள் விழாக்கள் நடந்தன,கோவில் பூசைகள் நடந்தன,திருவிழாக்கள் நடந்தன எல்லாமே நடந்தன.
அதே போல புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்மக்கள் 2009 தமிழீழ விடுதலைப் போர் நடந்த போது தத்தம் நாடுகளில் தமிழீழப் போருக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டார்கள் பேரணி நடத்தினார்கள்.அதே வேளை நடக்க வேண்டிய திருமணங்கள்,பூப்புனித நீராட்டு விழாக்கள்,பிறந்தநாள் விழாக்கள்,கோவில் திருவிழாக்கள் என எல்லாமேதான் நடந்தன.
எய்தவன் இருக்க அம்பை நொந்த மாதிரி ஒருசிலர் கலா மாஸ்ரரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமது உடம்பிலும் மனதிலும் தாமே அழுக்கை பூசிக் கொண்டுவிட்டார்கள்.
திரு.பிரபாகரன் போர் நடத்திய மண்ணின் புனிதத்தையே மாசுபடுத்திவி;ட்டார்கள்.திரு.பிரபாகரன் பிறந்த மண் யாழ்ப்பாண மண் என்பதற்காகவே அதைப் பார்க்க ஆவல் கொள்ளும் பலர் இருக்கிறார்கள்.அதில் சிங்களவர்களும் அடங்கும்(திரு.பிரபாகரன் பற்றிய சாதக பாத விமர்சனம் இருந்தாலும்)
இதைச் செய்த பிள்ளைகள் யாருடைய பிள்ளைகள்?
இதைச் செய்தவர்களின் ஊர் எது?
இதைச் செய்தவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்?
இதைச் செய்தவர்களின் நண்பர்கள் யார்?
இதைச் செய்தவர்களின் நடத்தைப் பண்பு என்ன?
இப்படித்தான் அவதானிப்போர் கேட்பார்கள்,மனதில் நினைத்துக் கொள்வார்கள்;.அதுதான் உனை நீ அறி என்பதாகும் இப்படிச் செய்தமைக்கு பெற்றோர் பொறுப்பில்லை,ஊர் பொறுப்பில்லை, ,அவரவர் படித்த பள்ளிக்கூடம் பொறுப்பில்லை,,நண்பர்கள் பொறுப்பில்லை என்றும் தர்க்;க ரீதியாகவும் வாதாடலாம்.
ஆனால் எல்லா வாதாட்டங்களின் பின்னர் இறுதியில் பெற்றோரால் பிள்ளைகளும் பிள்ளைகளால் பெற்றோரும் பெருமைப்படுதல் என்ற ஒழுக்கவியலே விடையாக வரும்..