கட்டுரைகள்
சர்ச்சையை கிளப்பிய புட்டினின் நேர்காணல்: உக்ரைன் போரில் ஊடக முரண்பாடு! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
சமூக ஊடக சலசலப்புக்கு மத்தியில், மாஸ்கோவிற்கு டக்கர் கார்ல்சனின் (Tucker Carlson interview ) வருகை இருந்தது. விளாடிமிர் புட்டினுடன் அளித்த பேட்டியும் மேற்குலக ஊடகங்களில் பெருங் காட்சியாக மாறியுள்ளதுடன் பாரிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய பேட்டி:
மாஸ்கோவில் புட்டினின் போர்க்கதைக்கு டக்கர் கார்ல்சன்
நம்பகத்தன்மையைக் கொடுக்கிறார் என்ற விமர்சனம் அமெரிக்க ஊடகங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், ரஷ்ய ஊடகங்கள் கார்ல்சனை “உண்மையைப் பேசும்” பிரபலமாகக் கொண்டாடின என்பது மற்றோர் விடயமாகும்.
புகழ்பெற்ற போல்ஷோய் பாலே மற்றும் சிறந்த உணவு விடுதிகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் டக்கர் கார்ல்சனின் பயணத்திட்டம் மேற்குலக ஊடகங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
ஆயினும் புட்டின் நேர்காணலை நிறுத்த அமெரிக்க அரசாங்கம் முயன்றதாக
அவர் முதலில் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை நிறுத்த ஜோ பிடன் நிர்வாகம் உளவு பார்த்ததாக டக்கர் கார்ல்சன் குற்றச்சாட்டினை வெள்ளை மாளிகை முழுமையாக மறுக்கிறது.
மேற்கத்திய அரசாங்கங்கள் நேர்மாறாக இந்த நேர்காணல் வீடியோவை தணிக்கை செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத வெளியுறவு தகவல்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள் என டக்கர் கார்ல்சன் கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேர்காணல் செய்த செய்தி அமெரிக்காவின் புருவங்களை உயர்த்தியது என்றும், கிரெம்ளினுக்கான பிரச்சார கருவியாக அவர் செயல்படுவதாக பலர் குற்றம் சாட்டி விவாதங்களை ஊடகங்களில் தூண்டியுள்ளனர்.
உக்ரைன் போர் பற்றிய உண்மை :
மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் பேட்டி மூலம் உண்மையை அமெரிக்கர்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு
என்று டக்கர் கார்ல்சன் தன் பக்க நியாயத்தை கூறுகிறார்.
முன்னாள் வொக்ஸ் நியூஸ் (FOX NEWS) தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அளித்த பேட்டி “பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு புட்டின் ஏன் உக்ரைனை ஆக்கிரமித்தார் அல்லது இப்போது அவரது இலக்குகள் என்ன என்று தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.
உக்ரைன் போர் பற்றிய “உண்மையை” வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த பேட்டி அமைந்ததுடன், மேற்கத்திய ஊடகங்கள் பொய்களால் நிரப்பப்பட்ட ஒரு திரிபு படுத்தப்பட்ட பார்வையை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் புட்டினின் விளக்கத்தை கேட்க அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு புட்டின் ஏன் உக்ரைனை ஆக்கிரமித்தார் அல்லது இப்போது அவரது இலக்குகள் என்ன என்று தெரியவில்லை என்று கார்ல்சன் மாஸ்கோவில் பேட்டியில் கூறியுள்ளார்.
கார்ல்சன் அமெரிக்கா மீது விமர்சிக்கும் வார்த்தைகளைக் என்றுமே குறைக்கவில்லை. அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதற்காக, மேற்கத்திய ஊடகங்கள் அவரை விமர்சித்தது. அத்துடன் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உண்மையற்ற போர் பிரச்சாரத்தில் பங்கேற்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவில் ஜெலென்ஸ்கியின் நேர்காணல்களை அவர் விமர்சித்ததுடன், மோதலில் அமெரிக்க ஈடுபாட்டை விமர்சித்து வந்துள்ளார். உக்ரேனிய போர் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் ரஷ்ய நிலைப்பாட்டுக்கு மற்றொரு ஆதரவை
சேர்த்ததுள்ளார். கார்ல்சன் புட்டினுடனான தனது பிரத்தியேக நேர்காணலை ஒளிபரப்பிய நிலையில், உக்ரைன் போரின் பொதுக் கருத்துக்களை வடிவமைப்பதில் அவரது பங்கினை பலர் சிலாகித்துள்ளனர்.
மேற்கத்திய ஊடகங்கள் பொய்யும் திரிபும் :
“நீங்கள் புட்டினின் குரலைக் கேட்டதில்லை. அது தவறு, அமெரிக்கர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு போரைப் பற்றி எங்களால் முடிந்த அனைத்தையும் அறிய உரிமை உண்டு. அதைப் பற்றி அவர்களிடம் சொல்ல எங்களுக்கு உரிமை உள்ளது” என்றும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக ரஷ்ய அதிபரை நேர்காணல் செய்ய மாஸ்கோ சென்றதனை அமெரிக்க அரசும் மற்றய. மேற்குலக ஊடகங்களும் பாரியளவில் கிண்டல் செய்தன. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் பொய்களால் நிரப்பப்பட்ட ஒரு திரிபுபடுத்தப்பட்ட பார்வையை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் புட்டின் நிலைப்பாட்டெ பார்த்து அறியவும் அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு.
டக்கர் கார்ல்சன் மாஸ்கோ பேட்டியுடன் ஒரு புயலை கிளப்பியுள்ளார். இந்த நேர்காணலை தணிக்கை செய்யப்படாததாக வெளியிடும் தனது விருப்பத்தை X உரிமையாளர் எலோன் மஸ்க்கின் ஆதரவை பெற்றுள்ளார். இந்த
நேர்காணலை கார்ல்சன் தனது சொந்த வலைத்தளமான TuckerCarlson.comஇல் இலவசமாக பார்க்கவும் அனுமதித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய டக்கர் கார்ல்சன் பின்னணி:
டொனால்ட் ட்ரம்பின் தவறான கூற்றுகளை வெளியிட்டதை தொடர்ந்து கார்ல்சனின் சர்ச்சைக்குரிய ஊடக வரலாறு கேள்விக்குறியானது.
வொக்ஸ் நியூஸில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இப்போது அவரது மாஸ்கோ முயற்சியானது மேலும் சிக்கலைச் சேர்த்துள்ளது.
அத்துடன் டொனால்ட் ட்ரம்பின் விவரணங்களை ஒளிபரப்பியதால் வொக்ஸுக்கு எதிராக ஒரு பெரிய அவதூறு வழக்குக்கு வழிவகுத்ததுடன், கார்ல்சனின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியது. ஆனால் வொக்ஸுடன் பிரிந்ததில் இருந்து, கார்ல்சன் X இல் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார். அங்கு அவரது நிகழ்ச்சிகள், பெரும்பாலும் ரஸ்ஸல் பிராண்ட் மற்றும் ஆண்ட்ரூ டேட் போன்ற நபர்கள் வரை பல நிகழ்வுகளை காணலாம்.
டக்கர் கார்ல்சன் ரஷ்ய ஜனாதிபதியை நேர்காணல் செய்வதனையும், மாஸ்கோவிற்கு வருவதனை நிறுத்தவும் அமெரிக்க அரசாங்கம் முயன்றது என்பது உண்மையே. டக்கர் கார்ல்சனின் சர்ச்சையை கிளப்பிய ரஷ்ய ஜனாதிபதியின் நேர்காணல் பல உண்மைகளை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டியுள்ளது.
உக்ரைன் போர் பற்றிய உண்மைகளையும், மேற்கத்திய ஊடகங்கள் பொய்மைகளையும் தெளிவுபடுத்து உள்ளது.
ஆயினும் இந்த நேர்காணலை மேற்குலக ஊடகங்கள் புட்டினின் பிரச்சாரம் என்றும், வழமையான அமெரிக்க ஊதுகுழல்களாக இந்த நேர்காணலை உண்மையற்றது என தங்கள் பாணிக்கு பறைசாற்றி வருகின்றன.