கட்டுரைகள்

மன்னிக்க முடியாத குற்றம் செய்தவர்கள்! ….. ஏலையா க.முருகதாசன்.

இந்த உலகத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள் யார்?.யாரிடம் வாங்கினார்கள்.

பூமி மனிதர்கள் இந்தப் பூமி நிலத்தில் எவ்வாறு தோன்றினார்கள்.பலநாட்டு ஆய்வாளர்களும் பலவிதமாகச் சொல்கிறார்கள்.உடலும் உயிரும் எப்படித் தோன்றியது யாருக்குமே தெரியாது.

உயிரியல் விஞ்ஞானம் பல கட்ட ஆய்வுகள் செய்து உயிரின் உடலின் தோற்றத்தை வேதியல் தரவுகள் ஊடாக நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல என்பதும் நிறுவப்பட்டு வருகின்றது.

மனிதர்கள் பூமியில் தேற்றம் பெற்றதற்கு வேற்றுக்னகிரகவாசிகளே காரணமென்றும் அவர்களே பல்வேறு வேற்றுக்கிரகங்களிலிருந்து பல்வேறு நிறங்கள் உடல் தோற்றம் உள்ளவர்களை பூமிக்கு கொண்டு வந்துவிட்டவர்கள் என்ற உண்மையை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

பிரபஞ்சத்தின் பிரவசமாக இருக்கின்ற பலகோடிக் கோள்களில் பூமியும் ஒன்று.இதில் வாழுகின்ற மனிதர்கள் பூமி நிலங்களை பங்கு போட்டு பிரபஞ்சமே அவர்க்கவர்க்கென உறுதி எழுதிக் கொடுத்தது போல சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

நாகரீக உலகத்தை உருவாக்கி வருகிறோம் என திக்கெங்கம் பறை கொட்டும் மனிதகுலம் வன்முறையாளர்களாக மாறி வருகின்றனர்.நாக்கும் இதழ்களும் நோகாத பேச்சுக்குப் பின்னால் நுணி நாக்கில் அமிர்தமும் அடிநாக்கில் நஞ்சம் கொண்டவர்களாக உலகத் தலைவர்களில் பலர் இருந்தார்கள் இருந்தும் வருகிறார்கள்.

மனிதம் பற்றியும் எல்லா மனிதர்களும் நிற ரீதியாகவோ,மத மொழி ரீதியாகவோ அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்று உலக மனித மாண்பாளர்கள் அறிக்கை விடுகிறார்கள,; அமைப்புகளை உருவாக்கி மனிதம் பேசுகிறார்கள்.அதைப் பார்த்து உலகம் புல்லரித்து நிற்கிறது.

ஒவ்வொரு கண்டத்தின் வரலாற்றிலும் கறைபடிந்த சோகமான கதைகளிருக்கின்றன.இன்று பெரும்பாலான கண்ட நாடுகள் மாடமாளிகையாலும் கூட கோபுரத்தினாலும் உருவாக்கப்பட்டு நவீன தொழில்நுட்பம் அதற்கு அலங்காரமாகி காட்சியளிக்கின்றன.

இந்த காட்சிகளைப் பார்க்கின்ற மக்கள் உலகம் வளர்ந்துவிட்டது எளன்று புளகாங்கிதம் கொள்வதுடன் நின்றுவிடாது பிரபஞ்சத்தை ஆளும் விஞ்ஞான உத்திகளைக் கையாள்வது கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த வளர்ச்சிக்கு அத்திவாரமாக புதைகுழிக்குள் போட்டு மூடப்பட்ட அந்தந்த கண்ட பழங்குடிமக்களை நாம் சிந்திக்காதிருக்கிறோம்,மறக்கவே முயற்சிக்கிறோம்.

மனிதமாண்பு பேசியவர்களின் மூதாதையரே இந்த மிலேச்சத்தனத்தைச் செய்தவர்கள்.அவுஸ்திரேலியாவுக்கு வந்தேறு குடிகளான ஆங்கிலேயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அபரோஜின பழங்குடி மக்கள் தொடங்கி அனைவரையும் வேட்டையாடினர்.இன்று அவர்களுக்கு அந்த நாட்டின் உரிமையைக் கொடுக்க மறுக்கிறார்கள் அவுஸ்திரேலிய ஆங்கிலேய எகாதிபத்தியத்தினர்.இது போன்றே வட அமெரிக்காவின் பழங்கடி மக்களயான சிவப்பு இந்தியர்களை கொலம்பசின் வாரிசுகள் வேட்:டையாடினர்.

தங்களை மேன்மையானவர்கள் எனக் காட்டிக் கொள்ள,மக்களை மூளைச்சலவை செய்து நம்ப வைப்பதற்காக தொடராக எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் அமெரிக்காவில் தயாரான கவ்போய் திரைப்படங்கள்.

சிவப்பு இந்தியர்களை கொள்ளைக்காரர்களாகவும காட்டுமிராண்டிகளாகவும் காட்டி அவர்களைக் கொன்றொழிப்பதே சரியான தீர்வு என்ற ஒரு மாயையை மக்கள் மனதில் இருத்துவதற்காகவும் அமெரிக்காவின் பழங்குடிகள் காட்டு மிராண்டிகள் நாகரீகமற்றவர்கள் எனக் காட்டியே அவர்கள் பூமியில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்பது போல உலகுக்கு காட்டி அவர்ளின் நிலங்களைப் பறித்து அவர்களை அழித்தார்கள்.அங்கும் சிவப்பு இந்தியப் பெண்கள் ஆங்கிலேயர்களால் வன்புணர்வக்குள்ளாகினர்.

இது போன்றுதான் கனடா நிலப்பரப்பிலும் பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டார்கள்.ஒருவரைக் கொலை செய்தால் கொலை செய்தவருக்கு மரதண்டனை என நீதி சொல்கின்றது.(சில நாடுகளில்: இது நடைமுறையில் இன்னமும் இருக்கின்றது,சில நாடுகளில் இல்லை).ஆனால் பழங்குடி மக்களை வேட்டையாடி அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடே தெரியாமல் அழித்த ஆட்சியாளர்களுக்கு எத்தண்டனையும் அளிக்கப்படவில்லை.

கனடாவில் இனுவிட் பழங்குடி மக்கள்(பழைய பெயர் எஸ்கிமோவர்)கனடா நிலப் பரப்போடு தொடர்புடைய பழங்குடிகளான சமவெளிப் பழங்குடியினர்;,இறொக்குவா பழங்குடிகள்,வட வேட்டுவப் பழங்குடியினர்,வடமேற்கு பழங்குடியினர்,அல்கோன்கிய பழங்குடியினர்,பீடபூமிப் பழங்குடியினர் இருந்தார்கள்.

இப்பழங்கடியினர் அருகியும் இன்னும் சிலப் பழங்குடியினர் ஆங்காங்கே தற்பொழுது உள்ள மக்களுடன் கலந்துவிட்டனர்.

அதே வேளை தமது நிலப்பரப்புக்கு ஏற்றவர்கள் அல்ல என்ற பழங்குடி இனப்பிரிவுகள் கொலை செய்யப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டனர்.

கனடா நாட்டின் பழங்குடிப் பிரிவினரில் ஒரு பகுதியினர் அவ்வாறு புதைக்கப்பட்ட கொடுஞ்செயல் ஊடகங்கள் வழியாக அறிந்து கொண்ட தற்போதையு பிரதமர் அண்ரூ ட்ரூடோ கடந்த ஆண்டு அதற்காக மன்னிப்புக் கேட்டார்.

பல நாடுகளிலும்,நாடுகளின் தீவுகளிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். மனித நாகரீகமே படிப்படியாக படிமுறை

வளர்ச்சியைக் கண்டதும் அங்கிருந்துதான் என்பது ஆய்வின் நிலைப்பாடாகும்.

இந்திய மாகாணங்களின் காட்டுப்பகுதிகளில் வாழுகின்ற பழங்குடிமக்கள் வேண்டப்படாதவர்கள் என்றும் வாழத்தகுதியற்றவர்கள் என்றும் மோசமான வன்மக் குணத்துடன் சிந்திக்கும் சிலரின் காட்டுமிராண்டித்தனமான சிந்தனையின் காரணமாக பழங்கடி மக்களைத் தாக்கிக் காயமேற்படுத்துவதுடன்,கொலைசெய்வதுடன் பழங்குடிமக்களின் பெண்களை வன்புணர்வு செய்தலும் இடம்பெற்று வருகின்றது.

இச்செய்திகள் ஊடகங்களில் வருவதும் பின்னர் அவற்றின் தீவிர அலைகள் நீர்த்துப் போவதும் வழமையானதுதான்.

புழங்குடி மக்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களையும் அவர்களைக் கொலை செய்து புதைத்தவர்களையும் உலகம் ஒரு போதுமே மன்னிக்காது.

Loading

One Comment

  1. பழங்குடி மக்களை கொடுமைப் படுத்தியவர்களையும் படுத்துபவர்களையும் உலகம் ஒருபோதும் மன்னிக்காது. உண்மைதான். நம் கண்முன்னே நம் இனத்தை இலட்சக்கணக்கில் கொன்று அழித்தவர்களுக்கு உலகம் என்ன தண்டனை கொடுத்திருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடக்கும்வரை அவலங்கள் தீராது.

    சங்கர சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.