நடுகைக்காரி 63……. ஏலையா க.முருகதாசன்
புஸ்பகலாவுக்கு பீரியட் வந்து இன்று இரண்டாவது நாள்.அவள் தோய்ந்துவிட்டுக்கொலிஜயுக்குப் போனால் மனதுக்கு இலேசாக இருக்கும் என்பதால் அவளாகவேகுளித்திருக்கலாம்.
ஆனால் ஊருக்குள் சில குடும்பங:கள் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடித்துவருகின்றன.வீமன்காமத்தில் அப்படி ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்ட குடும்பமாகஇருப்பவர்கள் புஸ்பகலாவின் பெற்றோர்களான சதாசிவமும் நவமணியும்.
புஸ்பகலா தானகவே கிணத்திலை தண்ணி அள்ளி தோஞ்சிருப்பாள்.ஆனால் தற்செயலாககிணத்துக்குள் சருகு விழுந்தாலே பார்த்தியா நீ வீட்டுக்குத் தூரமாய் இருக்கேக்கில தண்ணிஅள்ளிக் குளிச்சியே அதாலைதான் மரத்திலை கிடந்த முழுச் சருகுகளெல்லாம் கிணத்தைப்பார்த்து விழுந்து கிடக்குதுகள் என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுறமாதிரி தாயார் பேசுவார் என்பதால் தோய வார்க்கச் சொல்லி தாயிடம் கேட்டிருந்தாள்.
மூன்று வாளி தண்ணியை மகளின் தலையில் வார்த்த தாய் இனி நீ தோய் என்று சொல்லிப்போட்டுப் போகாமல் அது சரி நீ நேற்று உன்ரை சினேகிதிக்கு காய்ச்சல் என்று சொல்லிஎன்னட்டை கொர்லிக்சும் வாங்கிக் கொண்டு போனனியல்லோ உண்மையிலை உன்ரைசினேகிதி வீட்டுக்குத்தான் போனனியோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்குது,ஏனென்டால்கொஞ்ச நாளா உன்னை அவதானிச்சு கொண்டுத வாறன் உன்ரை போக்கேசரியில்லை,முந்திமாதிரி நீ இல்லை.நானும் உன்ரை வயதைக் கடந்து வந்தவள்தான் உன்ரைஇந்த வயசில் நான் எப்படியெல்லாம் தடுமாறினேன் சபலப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும்ஆனால் நான் ஒரு போதும் காதல் என்ற கண்ராவியில் விழவில்லை.காதலிப்பது கௌரவக்குறைச்சல் பரம்பரைக்கே இழுக்கு, அழுக்கு என்று என்ரை அம்மா அப்பாநினைச்சவை,காதலிக்காமல் இருப்பதுதான் பெருமை என்று நினைச்சவை அதை வாழையடிவாழையாக எங்கடை பரம்பரை கடைப்பிடிக்க வேணும் அதுதான் கௌரவம் என்றுபுஸ்பகலாவின் தாய் ஒரு பிரசங்கத்தையே செய்து முடிச்சாள்.
தாயின் பிற்போக்குத்தனம் புஸ்பகலாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.காதலிப்பது ஒருஅருவருப்பான விசயம் என்று அம்மா நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரிஞ்சபோதும் காதலிப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று தாயைக் கேட்கத் தோன்றினாலும்தாய் தனக்கு இவ்வளவு உபதேசமும் செய்தது தான் யாரையாவது காதலிக்கிறேனா என்பதைஅறிய தூண்டில் போட்டுப் பார்க்கிறார் என்பதைப் பரிந்து கொண்ட புஸ்பகலா எதுவுமேபேசாமல் நல்ல பிள்ளை மாதிரி தாயிடமிருந்து வாளிக் கொடியை வாங்கியவள் தண்ணிஅள்ளுவதற்காக கிணத்துக்குள் வாளியை விட்டாள்.
புஸ்பகலா எதையோ மறைக்கிறாள் என்பதை அவளின் தாய் உணர்ந்து கொண்டது அவளின்முகத்தில் தெரிந்தது.தோய்ஞ்;சு முடித்து,ஈரம் எடுத்து காலைச் சாபபாடும் சாப்பிட்டு மத்தியானம்கல்லூரியில் வைச்சுச் சாப்பிடுவதற்கு தாய் இடியப்பத்தை உதிர்த்தி முட்டை பொரிச்சுப்போட்டு கலந்து குடுத்த சாப்பாட்டையும் தாயிடமிருந்து வாங்கிக் கொண்டு போவதைத் தாய்பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெற்ற தாய்க்குத் தெரியும் தனது மகளின் மனநிலை என்ன என்பது.மகளை அனுப்பிவிட்டுவீட்டுப்படியில் சுவரருகே உட்கார்ந்து,தலையைச் சுவரோடு சாய்த்து கண்ணை மூடியவாறுயோசணையில் மூழ்கினாள் புஸ்பகலாவின் தாய்.
முந்திமாதிரி தனது மகள் இல்லை.அவளுக்கு யாரோ ஒரு பொடியனுடன் பழக்கம்ஏற்பட்டுவிட்டது.அது அவளின் நடத்தையில் தெரியுது.முகத்தில் ஒரு இயல்புக்கு மாறானபிரகாசமான பொலிவு தெரியுது.ஏதோ இருக்குது.ஏதாவது காதல் கீதலில்விழுந்துவிட்டாளோ,கடவுளே அவளின் நிலைமையை வெளிப்படையாக்கு,குப்பையில் கிடந்தமருந்துமணச் சிரட்டைக்கும் நேற்றுச் சினேகிதியின் வீட்டுக்குப் போனபோது அவளுக்கு வந்தமாதச் சுகயீனத்துக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்குமோ,தங்களுடைய மருமோளுக்குஏற்பட்ட கதிக்குள் இவளும் சிக்குப்பட்டு முருகா அப்படியொன்றும் நடக்கவைக்காதை,யாழ்தேவிக்கு முன்னால் பாய்ந்து எங்கடை மருமோள் தற்கொலை செய்தது போலஐயையோ முருகா அப்படியொன்றம் நடக்க விடாதை.முருகா முருகா மகளின் அழகு ஆபத்தில்கொண்டு போய் விட்டிடுமோ என அவள் தேவையில்லாத கற்பனையில் மூழ்கஅவளையறியாமலே அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அப்பொழுது பத்திரிகை வாங்க சைக்கிளில் தெல்லிப்பழைச் சந்திக்குப் போன கணவன்சதாசிவம் பத்திரிகையுடன் வந்து முற்றத்தில் சைக்கிளை நிற்பாட்டிப் போட்டு என்னப்பாசுவரோடை சாய்ஞ்சிருந்து என்ன கற்பனை செய்கிறாய் என்ற கணவரின் குரலைக் கேட்டபுஸ்பகலா சுவரிலிருந்து தலையை எடுத்தவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.அவளுக்கருகில்படியில் உட்கார்ந்த கணவன் சதாசிவம் அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்திருப்பதைக்கண்டவர் அழுதனீங்களோ ஏனப்பா அழுதனீங்கள் என்று கேட்க மகளைப் பற்றி நினைச்சுஅதனால் கண்ணீர் கசிந்ததை மூடிமறைச்சு அம்மாவை நினைச்சன் அம்மா எங்களுக்காகபடட்பாட்டை நினைக்க அழுகை வந்திட்டுது.நாங்கள் மூன்று பேரும் பொம்பிளைப்பிள்ளையள்.பிராந்திலிருந்து காப்பாற்ற தாய்க்கோழி தனது செட்டைக்குள் பாதுகாப்பு குடுப்பதுபோல அம்மா எங்களை வளர்ந்தாள்.என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் தாய்க்கோழியால் தாங்க முடியாது.எங்களுக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளையள் ஒருத்திகல்யாணம் கட்டி தப்பிவிட்டாள்,இரண்டாமவளை அவளின் அழகைப் பாதுகாத்து ஒருத்தனின்கையிலை பிடிச்சுக் குடுக்கும் வரை எங்களுக்கு நிம்மதியிருக்காதுங்க என்றவள் கணவனின்கைகளை விரிச்சு அதில் தனது முகத்தை வைச்சுக் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
மனைவியின் தலையை நிமிர்த்திய சதாசிவம் அவளின் கண்ணீரைத் துடைச்சு முன்னுக்குவிழந்த தலைமயிரை பின்னுக்கு தலையோடு தள்ளியபடியே இதுக்குப் போய் கற்பனைபண்ணிஅழுதனியே.எங்கடை பிள்ளையள் இரண்டும் எப்படிப்பட்டவை என்று எங்களுக்குத்தெரியுந்தானே.அவளையவளைப் பற்றி யாருமே கதைக்கேலாது.நீங்கள் ஒன்றுக்கும்யோசிக்காதையுங்கோ.
மூத்தவள் கொஞ்சம் பயந்தவள்,மெதுமையான குணம் கொண்டவள்.ஆனால் புஸ்பா அப்பிடியேஅவள் வைச்சு உரிச்சு குணத்திலை உங்களைப் போல,ஆராவது பொடியங்கள் கூறுகுறிப்பாய்ப்பார்த்தாலே என்னடா பார்க்கிறாய் என்று கேட்கக்கூடியவள் ஒரு பொடியங்களும் அவளிட்டைவாலாட்ட முடியாது.அவளை நினைச்சு பயப்படாதை அவள் ஒரு சிக்கலுக்குள்ளும்சிக்குப்படமாட்டாள்.இந்த முறை எஸ்.எஸ:சியை எடுக்கட்டும், நல்ல குடும்பமாய்ப் பார்த்துஅவளைக் கரை சேர்ப்பம் என்று கணவன் சதாசிவம் மனைவி நவமணியை ஆறதல்படுத்தினார்.
புஸ்பகலாவின் அறைக்குள்ளிருந்து கடுக்காயப் பேதி மருந்தின் மணம் வந்ததையோகுப்பையில் பேதிமருந்து உரஞ்சிய சிரட்டை கிடந்ததையோ அவள் கணவனுக்குச்சொல்லவில்லை.என்னதான் கணவன் சமாதானப்படுத்தினாலும் மகளிடம் காணப்பட்டமாற்றத்தை தாயால் அசட்டை செய்ய முடியவில்லை.
நேற்று அவள் உண்மையாகவே சினேதியைப் பார்க்கத்தான் போயிருப்பாளோ இல்லாட்டில்அவளுக்குத் தெரிஞ்ச பொடியன்றை வீட்டுக்குப் போயிருப்பாளோ எனக் குழம்பிக்கொண்டிருந்தாள் நவமணி.
வகுப்புக்குள் வந்த புஸ்பகலாவின் கண்கள் மங்களேஸ்வரியைத் தேடின.அப்பொழுதுவகுப்புக்குள் மாணவர் சிலருடன் சக மாணவிகளானநீலலோஜினி,அருந்ததிதேவி,சர்வாம்பிகை,நாகேஸ்வரி,சந்திரகுமாரி,குணபூபதி,சிறீகௌரி எனஎல்லாரும் இருந்தனர் மங்களேஸ்வரியை மட்டும் காணவில்லை.
தனக்குத் தோய வார்க்கும் போது அம்மா கிணத்தடியிலை வைச்சுத் தன்னிலை ஐமிச்சப்பட்டுக்கதைச்ச கதையை மங்களேஸ்வரிக்குச் சொல்ல வேணும்.சொன்னால்தான் அவளும் நானும்சேர்ந்து மூடிமறைச்சு பொய் சொல்லலாம் என்று யோசித்தவள் அவள் இண்டைக்குவரமாட்டாளோ என்று பதட்டப்பட்டுக் கொண்டிருக்க, நீலலோஜினி என்ன அருந்ததி நீஎங்கோயோ போன இடத்தில மந்திலி வரவேண்டியது வந்திட்டுதாமே,அது சரி எங்கைபோனனி என்று புஸ்பகலாவைக் கடைக்கண்ணால் பார்த்து நக்கலடிப்பது போலகேட்க,என்னைத்தான் நீலலோஜினி சொல்கிறாள், என்னெண்டு நான் ஞானத்தின்ரைவீட்டுக்குப் போனது இவளுக்குத் தெரியும் அதுக்கிடையிலை யார் சொல்லியிருப்பினம் என்றுமங்களேஸ்வரி வருகிறாளா என ஸ்ராப்றூம் அருகே இருக்கும் பாதையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பிரகாசமடைந்தது.வந்து கொண்டிருந்ததுஞானம்.ஞானம் காய்ச்சலோடு வருவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.
ஞானமும் புஸ்பகலாவை எதிர்பார்க்கவில்லை.அவள் வகுப்புக்குள் நுழைஞ்சு தனது இடத்தில்இருக்கும் வரை அவனையே அவளின் கண்கள் பின் தொடர்ந்தன.
ஞானத்தைப் பார்த்து காய்ச்சல் சுகமா என்று புஸ்பகலா கேட்க,அவனும் ஓம் என்று தலையைஆட்டினான்.நீலலோஜினி ஞானத்தை விரும்பியதும் ஞானம் அவளின் காதலை ஏற்காமல்அலட்சியம் செய்ததால் நீலலோஜினிக்கு ஞானத்தின் மீது உள்காய்ச்சல் போல தீராதகோபமிருந்தது.
நீலலோஜினிக்கு தான்தான் மகாஜனாவின் பேரழகி என்ற எண்ணம் இருந்தது.தனக்குப்போட்டியாக புஸ்பகலா இருப்பதை நீலலோஜினி விரும்பவில்லை.
ஞானத்தையே பார்த்துக் கொண்டிருந்த புஸ்பகலாவின் தோளில் யாரோ வைவைப்பதைஉணர்ந்தவள் திரும்பிப் பார்க்க,வைத்த கையை எடுக்காமல் அருகில் மங்களேஸ்வரி நிற்பதைக்கண்டதும் அப்பாடா என்பது போல நிம்மதியடைந்த புஸ்பகலா மங்ளேஸ்வரியின் கையைப்பிடித்திழுத்து அவளையும் கூட்டிக் கொண்டு போய் வாங்கில் உட்காருனகின்றனர்
(தொடரும்)