இலக்கியச்சோலை

தமிழ் பூர்வீகம் கொண்ட எட்டு வயது சிறுமி சிறந்த பெண் வீராங்கனை எனு‌ம் முடிசூடி மதிப்பளிக்கப்பட்டுள்ளார் .

எமது தமிழ் பூர்வீகம் கொண்ட எட்டு வயது ” போதனா சிவானந்தன் ஐரோப்பிய ரீதியிலான சதுரங்க ( Chess) போட்டியில் ( European chess tournament) சிறந்த பெண் வீராங்கனை ( Best female player)எனு‌ம் முடிசூடி மதிப்பளிக்கப்பட்டுள்ளார் .

ஐரோப்பாவின் குரோஷியா ( Croatia) நாட்டில் சென்ற வாரம் இடம்பெற்ற இந்த போட்டியில் , உலக தர வரிசையில் முன்னணியில் இருக்கும் பிரபல சதுரங்க( Chess) விளையாட்டு வீரர்கள் உட்பட 555 பேர் கலந்து கொண்டனர் .

இதில் இங்கிலாந்தில் இருந்து எமது தமிழ் பூர்வீகம் கொண்ட 8 வயது போதனா சிவானந்தன்( Bodhana Sivanandan) நெற்றியில் திருநீறு அணிந்த அழகுடன் கலந்து கொண்டார்.

தன்னைவிட 30 வயதிற்கு மேல் மூத்த உலக வீரர்களை குறித்த நிமிடத்திற்குள் போட்டி விதிமுறையின் கீழ் விளையாடி
புள்ளிகளை பெற்று கொண்டார் .

மிக அதிகமான மதிப்பு புள்ளிகளை பெற்று 555 பேரில் 73 வது இடத்திற்கு முன்னேறி ” சிறந்த சதுரங்க பெண் வீராங்கனை ” எனு‌ம் விருதை பெற்று முடிசூடினார் .

5 வயதில் இந்த சதுரங்க விளையாட்டில் பொழுது போக்காக விளையாட ஆரம்பித்ததாக அவரது தந்தை பெருமையுடன் தெரிவித்தார். இங்கிலாந்தின் பிரதமர் திரு ரிஷி சுனக் அவர்கள் அவரது வாசஸ்தல பூங்காவில் “போதனாவை” அழைத்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.