இலக்கியச்சோலை

சிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது

சிவகுமார் ஓவியம் வரைவார் என்பதை தெரிந்த சிவாஜி தன் அம்மா படத்தை வரைந்து தர சொல்லி கேட்டிருந்தார். காலப்போக்கில் சிவகுமார் அவர்கள் அதை மறந்துவிட்டார். மீண்டும் ஒரு முறை சிவகுமாரை சிவாஜி சந்திக்கும் போது, ” கவுண்டரே ! என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே… மறந்துட்டியா ? அம்மா ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா…” என்று சிவாஜி சொல்லும் போதே மனதை கசியவைக்கிறார்.

‘இனி ஒரு சுதந்திரம்’ படம் பார்த்த சிவாஜி, ” உன் படம் பார்த்தேன். பிரம்மாதமா பண்ணியிருக்க. ‘கப்பலோட்டிய தமிழன்’ உயிரை கொடுத்துச் செய்தேன். தமிழ் நாட்டு ஜனங்க எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்கும்க் குழைச்சிட்டிருக்காங்க” என்று சொல்லும் போது, படம் தோல்வி அடையும் என்பதை எந்த நடிகனும் இவ்வளவு வெளிப்படையாக நடித்தவரிடம் சொல்ல மாட்டார்கள். இதில் அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் தெரிகிறது.

‘உறுதிமொழி’ படப்பிடிப்பில் தன் மகன் பிரபுவை பார்க்க குடும்பத்தோடு வந்த போது, ‘கவுண்டரே ! சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்” என்று குரல் தடதமுக்க சொல்ல, ” அண்ணே ! என்ன பேச்சு பேசுறீங்க..! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுல தான் நாங்க விளையாடுகிறோம். எந்த கொம்பனும் இந்த தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிக்க முடியாது ?”, என்றார் சிவகுமார்.

அப்படியா நினைக்கிறே ?

“இது என் தாய்மேல் சத்தியம் ! தொழில் மேல் சத்தியம் ” என்றார் .

“எல்லாரும் அப்படி நினைப்பாங்களா ?” சிவாஜி கேள்வி சிவகுமாரை கண் கலங்க வைத்துவிட்டது.

சிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது.

சீங்கப்பூரில் மயங்கி விழுந்த சிவாஜி சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புது ரத்தம், புது பொழிவுடன் திரும்பினார். அப்போது சிவகுமார் தன் குடும்பத்துடன் சிவாஜியை பார்க்க செல்கிறான். ஒரு நாற்காலியை எடுத்து சிவாஜி அருகே அமர்கிறார்.

“நாமெல்லாம் ‘Once Upon a time Actor’ சிவா ! எல்லாம் முடிஞ்சு போச்சு. நம்பலை இப்போ யார் ஞாபகம் வச்சிருக்கா…! சிங்கபூர்ல பாரு அஞ்சாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான். அஞ்சாயிரம் பேரு விசில் அடிக்கிற்ன்.”

“தங்கபதுமை… ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே’ போட்டா அவனவன் சாமி ஆடுறான். ‘தங்கபத்தம்’ அரங்கமே குலுங்குது !”

“சிவா ! வாட் என் ஃபைன் மூவமெண்ட் ! உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல ? இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் ?” என்று சிவாஜி சொன்ன போது கண்ணில் நீர் முட்டி தள்ளியது.

#நண்பர் ஒருவரின் பதிவு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.