கதைகள்

நாய்கள் இப்படித்தான் பூனைகளின் தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன…….சிறுகதை – 46 – அண்டனூர் சுரா

வீரபாண்டிய கட்டபொம்மன், பாளையக்காரக் கோட்டையைக் கட்ட பாஞ்சாலங்குறிச்சியைத்தேர்வு செய்ததற்கு ஒரு காரணமிருந்தது.

ஒரு நாள் வீரபாண்டிய கட்டபொம்மன் காட்டில் வலம் வருகையில் ஒரு காட்சியைக்கண்டான். ஒரு பூனை ஒரு நாயை விரட்டிக்கொண்டிருந்தது. இதைக் கண்ட கட்டபொம்மன்இந்த இடம் வீரம் செறிந்தது, என்கிற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் ஒரு கோட்டையைக்கட்டினான்.

பூனை தேசம் அது. பூனைகள் வாழும் தேசத்தை பூனையின் தேசமென பூனைகளேபெயர் சூட்டிக்கொண்டன. பூனை தேசம் வனங்களும், புதர்களும், குன்றுகளும் சூழ்ந்தப்வளமாக இருந்தது.

தன் இனத்தின் பரிணாம வளர்ச்சிதான் புலி என்பதை பூனைகள் தெரிந்துவைத்திருந்தன. ஆனாலும் தான் வேறு புலி வேறு என்று வேறுபடுத்திக் கொள்ளுமளவிற்குபூனைகளுக்குப் போதுமான அறிவு இருந்தது. பூனைகள், தான் புலியைப் போலிருக்கிறோம் எனஒரு நாளும் புலி வாழ்க்கை வாழ்ந்ததில்லை. பூனையின் வாழ்க்கையைத்தான் அவைவாழ்ந்துகொண்டிருந்தன.

பூனையின் தாய்மொழி ‘மியாவ்’வாக இருந்தது. ‘மியாவ்’ மொழியை அவை மிகஉயர்வாகக் கருதின. அம்மொழி இல்லாமல் தன்னால் ஒரு காலமும் வாழ முடியாதுஎன்பதை அவை புரிந்துகொண்டன. அவை பேசும் மொழியை அதன் பிள்ளைகளுக்குச்சொல்லிக்கொடுத்தன. ‘மியாவ்’ என்கிற மொழியால் அவை இனத்தோடு கூடி வாழ்ந்தன.

ஒரு நாள் பூனையின் தேசத்திற்குள் நாய்கள் நுழைந்தன. நாய்கள் எப்பொழுதும் அடுத்தஎல்லைக்குள் வாலைச் சுருட்டிக்கொண்டு பயந்து பதுங்கி நுழையக்கூடியவை. அப்படியாகவே

பூனையின் தேசத்திற்குள்ளும் நுழைந்தன. நாய்களுக்கு உணவு இன்னதென்று இல்லை. அவைகண்டதைத் தின்று கண்ட இடத்தில் படுத்து உறங்குபவை.

நாய்களுக்குப் படுத்து உறங்க ஒரு வெட்டவெளி போதுமானதாக இருந்தது. அது தன்சுத்தத்தைப் பற்றி கவலைப்படவில்லை. எந்நேரமும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்குமா எனநாக்கைத் தொங்கவிட்டவாறு அலைந்து திரிந்தன. அப்படியாக அலையும் நாய்களுக்குஒன்றின் மீது முழு கவனமும் இருந்தது. தன் தாய் மொழியான ‘ லொள் லொள்…’ மொழியைமற்றவர்களிடம் பரப்ப வேண்டும் என்கிற கவனம் அது.

பூனைகளின் வாழ்க்கை தொன்மையானது. பூனைகள் நாய்களுக்கும் முந்தையது.

பூனையோடு மொழியும் பிறந்திருந்தது. மிதமான உணவைத் தின்னும் பழக்கத்தைக்கொண்டிருந்தன பூனைகள். சிறுநீர், மலம் கழித்தால் அதை மண்ணைக் கொண்டு மூடும்பழக்கம் பூனைகளுக்கு இருந்தது. நாய்களைப் போல அவை கண்டதைத் தின்று கண்டஇடத்தில் கக்கி வைப்பதில்லை. தன் உடம்பை நாக்கால் சுத்தப்படுத்திக்கொள்ளும் அவைபடுத்து உறங்குவதற்கு ஒரு சுகாதாரமான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளும் பழக்கத்தைக்கொண்டிருந்தது.

பூனையின் தேசத்திற்குள் நுழைந்த நாய்கள் தன் வலிமையைக் காட்டி அதன் தேசத்தைஆளத்தொடங்கின. அதன் உடல்வாகு அதற்கு துணையாக இருந்தது. பூனையின் தேசத்திற்குள்நுழைந்த நாய்கள் தன்னைக் கண்டு பூனைகள் வாலைச் சுருட்ட வேண்டுமென கட்டளைஇட்டன.

நாய்கள் தன்னைச் சுற்றி எல்லைகள் வகுத்துக்கொண்டு, காது மடல்களைத் தலையில்அடித்தபடி அதன் மொழியில் பேசின.

‘ லொள்….’ ( இது நமது மொழி)

‘ லொள்…லொள்….’ ( நமது மொழி சிறந்த மொழி)

‘ லொள்…வவ்….லொள்…..’ ( நமது மொழி தெய்வீகமானது)

‘ லொள்…..வவ்…வவ்….லொள்….’ ( நமது தெய்வீக மொழி முதன்மையானது.)

‘ வவ்…வவ்….லொள்….வவ்….லொள்ள்….லொள்ள்…..’ ( இம்மொழியை நீங்கள் பேசினால்நீங்களும் எங்களைப் போல தெய்வீகப் பிறவியாகிவிடுவீர்கள்….)’

‘ லொள்….லொள்….வவ்….வவ்….’ ( எங்கள் மொழிகள் மட்டுமே சிறந்த மொழி. மற்றவைநீச மொழிகள்.)

நாய்கள் தினமும் வெட்டவெளியில் கூடி நின்று பலருக்கும் கேட்கும் படியாக இப்படிப்பேசிக்கொள்வது நாய்களின் அன்றாட வேலையாக இருந்தது. இந்த உலகை ‘ லொள்,லொள்…’மொழி மட்டுமே ஆள வேண்டும் என்பதில் அவை கவனமாக இருந்தன. அம்மொழியைப்பரப்பும் வேலையில் இறங்கின.

பூனைகளுக்கு அதன் மொழி ‘மியாவ்…’. உயர்வாக தெரிந்தது. அதன் தொன்மையும்,சிறப்பும் அவைக்குத் தெரிந்திருந்தது. அம்மொழியில் பேசுவதன் மூலம் உணர்வுகளைப்பரிமாறிக்கொண்டது.

‘ மியா..’ ( எமது மொழி இதுதான்)

‘ மியாவ்’ ( எமது மொழியில்தான் நான் பேசுவேன்)

‘ மியாவ்வ்’ ( எமது மொழியில் மட்டுமே நான் பேசுவேன்)

‘ ம்யாவ்..மியாவ்…’ ( பிற மொழிக்கு நான் அடிபணிய மாட்டேன்’

‘ ம்யாவ்…மியாவ்…..மியாவ்வ்…’ ( என் மொழி எனக்குச் சிறந்த மொழி)

பூனையின் தேசத்தில் பூனைகள் அதிகமாக இருந்தாலும் நாய்களின் ஆதிக்கவேமேலோங்கி இருந்தது. நாய்கள் ஓடி வருகையில் அதன் கண்ணில் படாமல் பூனைகள்ஏதேனும் ஒரு மரத்தில் ஏறி ஒளிந்துகொள்ள வேண்டும். நாய்கள் நடமாடும் பாதையில்பூனைகள் குறுக்கிடக் கூடாது. நாய்கள் நிற்கும் இடத்தில் பூனைகள் அதன் மொழியில்பேசிக்கொள்ளக் கூடாது. மீறி பேசினால் பூனைகள் நாய்க்கு இரையாக வேண்டும். தன்இனத்தைத் தானே சாப்பிடும் நாய்களுக்குப் பூனைகள் பிடிக்காமலிருக்குமா என்ன?

ஒரு நாய் இன்னொரு நாயிடம் சொன்னது. நம் மொழியை நாம்தான் தெய்வீக மொழிஎன்றும் உன்னத மொழியென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் மொழியை நாம் மட்டும்பேசுவதால் என்ன பெருமை வந்துவிடப்போகிறது. நாம் ஆள்வது பூனையின் தேசம்.

பூனையின் தேசத்தில் பிரதான மக்கள் பூனைகள்தான். நாம் பேசுகின்ற மொழியைபூனைகளையும் பேச வைத்தால் மட்டும்தான் உலகின் சிறந்த மொழி ‘லொள்…’ என்பதைநிலைநாட்ட முடியும் என்று கூறியது. இதை அனைத்து நாய்களும் ஆமோதித்துஏற்றுக்கொண்டன.

ஒரு நாள் நாய்கள் ஒன்றுதிரண்டு பூனைகளின் குடியிருப்பிற்குள் நுழைந்தன. பூனைகள்தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்துகொண்டன. ஒரு நாய் ஒருபூனையைப் பார்த்து சொல்லியது. ‘லொள்…’ ‘ லொள்….வவ்..’

பூனைக்குச் சிரிப்பு வந்தது. தன் மீசையை ஒரு முறை தன் கால்களால் நீவிவிட்டுக்கொண்டது. மொழிப் பெருமைப் பேசும் அந்நாயிடம் பூனை சொன்னது, ‘ மியாவ்…’

நாய்களுக்குக் கோபம் வந்தது. எங்கள் ஆட்சிக்குட்பட்ட தேசத்தில் எமதுமொழியில்தான் பேச வேண்டும், என நாய்கள் ஊளையிட்டன. தன் அகோரப் பற்களைக் காட்டிமிரட்டின. பூனைகள் அதற்குரிய பதுங்கலுடன் அதன் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறின.

‘ம்மியாவ்.’

‘ லொள்….’ என்றது நாய்.

‘ மியா..’ என்றது பதிலுக்குப் பூனை.

‘ லொள்…லொள்….’

‘ மியாவ்’

‘ லொள்…வவ்….லொள்…..’

‘ மியாவ்வ்’

‘ லொள்…..வவ்…வவ்….லொள்….’

‘ ம்யாவ்…’

‘ லொள்….வவ்….லொள்….லொள்…வவ்…வவ்…..’

‘ ம்யாவ்…மியாவ்…..மியாவ்வ்…’

‘ வவ்…வவ்….லொள்….வவ்….லொள்ள்….லொள்ள்…..’

‘ மியாவ்…ம்ம்யாவ்….ம்ம்யாவ்வ்….’

‘ ல்லொள்….லொள்….வவ்….வவ்….’

‘ ம்யாவ்…மியாவ்…..மியாவ்வ்…’

‘ ல்லொள்….லொள்….வவ்….வவ்….’

மொழி பெருமை பேசும் நாய்கள் மீது பூனைகளுக்குக் கோபம் வந்தது. அதன் மீசைகள்துடித்தன. தன் கைகளால் மீசையை முறுக்கிக்கொண்டன. நாசி விடைத்தன. அவைஉட்கார்ந்திருந்த உயரத்திலிருந்து எல்லா பூனைகளும் ஒரு சேரக் குதித்தன. பூனைகளின்குதிப்பால் அவ்விடம் புழுதிக் காடானது. நாய்கள் அதன் கோரப் பற்களைக் காட்டி பூனைகளைமிரட்டின. பூனைகள் பயங்கொள்ளவில்லை. அதன் கால்விரல் நகங்களை நீட்டி நாய்கள் மீதுபாய்ந்தன.

உயரத்திலிருந்து குதிக்கும் பொழுதே பாதி மிரண்டு போயிருந்த நாய்கள் தன் மீதுபாயத் தொடங்கியதும் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட்டமெடுத்தன. பூனைகள் நாய்களை

விடுவதாக இல்லை. தன் தேசத்திலிருந்து நீண்ட தொலைவிற்கு நாய்களை விரட்டியடித்தபூனைகள் மரத்தின் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, அதன் மொழியில் உரக்கப்பேசிக்கொண்டன.

‘மியா..’ , ‘ மியாவ்’, ‘ மியாவ்வ்’, ‘ ம்யாவ்..மியாவ்…’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.