கதைகள்

நடுகைக்காரி 62…. ஏலையா க.முருகதாசன்

கணவனை கூட்டிக் கொண்டு அடுப்படிக்குள் போன ஞானத்தின் தாய் சண்முகவல்லி ,அந்தப்பிள்ளை தனது சினேகிதியை வருத்தம் பார்க்கப் போறன் என்று தாயிடம் பொய்சொல்லி,தாயிடமே கொர்லிக்ஸ் போத்தலையும் வாங்கிக் கொண்டு ஞானத்தை வருத்தம்பார்க்க வந்திருக்குது.அப்படியென்றால் அந்தப் பிள்ளைக்கு ஞானத்திலை விருப்பம்இருக்குதென்றுதானே அர்த்தம்.

அது மட்டுமில்லை என்னிடமே உங்கடை மகனை விரும்புகிறன் என்றும் வெளிப்படையாகத்துணிச்சலாகச் சொல்லுகிறாள்.இப்படி யார் சொல்லுவினம். பொம்மபிளைப் பிள்ளைஆம்பிளைப்பிள்ளையை விரும்பினாலும் சரி ஆம்பிளைப்பிள்ளை பொம்பிளைப்பிளைப்பிள்ளையள் விரும்பினாலும் சரி இப்படி யாருமே வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.

ஆனால் இந்தப் பிள்ளை வித்தியாசமாயிருக்குது,எனக்கென்றால் ஒரு விசயம் விளங்குதுஞானத்துக்கும் அந்தப் பிள்ளையிலை விருப்பம் இருக்குது போல,ஏதோ அவையின்ரைதலைவிதிப்படி நடக்கட்டும் என்று ஞானத்தின் தாய் சண்முகவல்லி சொல்ல,நாங்கள்இதைப்பற்றிக் கனக்க யோசிக்கத் தேவையில்லை.அவையிரண்டு பேரும் படிக்கினம்இனித்தான் எஸ்.எஸ்.சி சோதனையே எடுக்கப் போயினம் இன்னும் இவன் பாஸ்பண்ணிஉத்தியோகத்துக்கு போறதுக்கோ இல்லாட்டில் எச்.எஸ்.சி படிச்சு முடிச்சு யூனிவேர்சிட்டடிக்குப்போறதுக்கோ எவ்வளவு கால நேரம் இருக்குது,நாங்கள் கண்டும் காணாமல் இருப்பதுதான்இப்போதைக்கு நல்லது என்று ஞானத்தின் தகப்பன் சுப்பையா அடுப்படிக்குள் இருந்துமனைவிக்குச் சொல்லுகிறார்.

அதற்குப் பிறகு அந்தக் கதையை அவர்களிருவரும் எடுக்கவில்லை.இரவுச் சாப்பாடு செய்வதில்ஞானத்தின் தாய் கவனம் செலுத்த தகப்பன் கிழக்குப் பக்கத்து காணிக்குள்ளை இருந்தவெற்றிலைத் தோட்டத்திற்கு போகிறார்.

சுப்பையாவின் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் இளையதம்பி ஆடு வளர்ப்பதால்சுப்பையாவின் வெற்றிலைத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடிக்கு நடப்பட்டிருக்கும்முள்முருக்கம் குழைகளை வெட்டி எடுப்பதற்கு சுப்பையாவிடம் கேட்டிருந்தார்.அதற்குசுப்பையாவும் சம்மதித்திருந்தார்.

முள்முருக்கம் குழைகள் வெட்டுவதில் ஒரு நுட்பம் வேண்டும்.கூராய்த் தீட்டிய கொக்கைச்சத்தகம் கட்டிய கொக்கைத் தடியால் ஒரே இழுவை வெட்டில் குழைக் கொப்ஐப வெட்டவேண்டும்.வெட்டிவிழுகிறங கொப்புகள் வெற்றலைக் கொடிகளை முறிச்சுக் கொண்டு கீழேவிழாதவாறு வெட்டிய வேகத்தில் அப்படியே கொக்கைத் தடியால் வெற்றிலைக் கொடி இல்லாதஇடைவெளி பார்த்து விழுத்த வேணும்.இளையதம்பிக்கு அது கைவந்த கலை.அதனாலைதான்முள்முருக்கம் குழையை வெட்டுவதற்கு சுப்பையா ஒப்புக் கொண்டிருந்தார்.

அவதானக் குறைவுடன் வெட்டி வீழ்த்தினால் கொடியை முறிப்பதுடன் வெற்றிகைளையும்கிழித்துவிடும்.அப்படிக் கிழியம் வெற்றிலைகளை பாக்குக்கும் போட்டுச் சப்ப மாட்டார்கள்குப்பையில் எறிந்து விடுவார்கள்.வெற்றிலையை லக்சுமிக் கடவுளுக்குச் சமனாகப் வெற்றிலைத்தோட்டக்காரர்கள் போற்றுவார்கள்.

கிழமைக்கு இரண்டுதரம் சுண்ணாகச் சந்தைக்கு கொண்டு போய் விற்பதற்காக சுப்பையரும்ஞானமும் வெற்றிலை கிள்ளுவார்கள்.சண்முகவல்லியும் கிள்ளுவார்.ஆனால் மாதச் சுகயீனம்வரும் நாட்களில் வெற்றிலைத் தோட்டத்துக்குப் போகமாட்டார்.

அதனாலைதான் இன்றைக்க புஸ்பகலா தங்கடை வீட்டுக்கு வந்த போது அவளுக்குப் பீரியட்வர,வெற்றிலைத் தோட்டம் போகவிருந்தவளை சண்முகவல்லி தடுத்து நிறுத்தினாள்.

சுப்பையா வெற்றிலைத் தோட்டத்துக்கு போன போது இளையதம்பி முள்முருக்கம் குழையைவெட்டிக் கொண்டிருந்தார்.முள்முருக்கம் குழையைக் கிடாய்கள் சாப்பிட்டால் கிடாய்களின்சதைகள் உருண்டு திரளும் என்பது மட்டுமல்ல மயிர்கள் எண்ணை வைச்ச மாதிரிமினுமினுப்பாக இருக்கும்.

இளையதம்பி வளர்க்கிற இரண்டு கிடாய்களில் ஒன்று கவுனாவத்தை வைரவர் வேள்விக்கும்மற்றது பிராம்பத்தை வைரவர் வேள்விக்கும் என்று நினைச்சு வளர்க்கிறார்.

இளையதம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த சுப்பையா, வீட்டுக்கு வந்து கால்கைமுகம் கழுவுp நெற்றிநிறைய திருநீற்றைப் பூசியவர் அறையை மெல்லத் திறந்து மகனை எட்டிப்பார்த்தவர் ஞானத்துக்கு கிட்டப் போய் அவனுடைய நெற்றியில் கையை வைச்சு இன்னமும்காய்ச்சல் காய்கிறதா என அறிய முற்படுகையில் தகப்பனின் கைபட்ட வேகத்தில் கண்முழித்தஞானம் என்னப்பா என்று கேட்க இல்லைக் காய்ச்சல் காயுதோ என்று பார்த்தனான் இப்பகுறைஞ்சிருக்குது என்று நினைக்கிறன் சரி கண்ணை மூடிக கொண்டு படு என்று சொல்லிக்கொண்டே அறையைவிடடுப் போகிறார்.

இரவுச் சாப்பாடாக செமிபாடு சுலபமாக இருக்க வேண்டுமென்பதற்காக குத்தரிக் கஞ்சியைக்காய்ச்சி ஒரு சிறிய எனாமல் சருவச்சட்டியில் ஞானம் படுத்திருந்த அறைக்குக் கொண்டு போனஞானத்தின் தாய் தரையில் உட்கார்ந்து அவனை எழுப்பிக் கஞ்சியைக் குடிக்கக்கொடுக்கிறாள்.அவன் எழுந்து குடிச்சுக் கொண்டிருக்க மகனின் நெற்றியில் கைவைச்சுப்பார்த்து தலையைக் கோதி விடுகிறாள்.

இன்னும் நீ எஸ்.எஸ்.சி சோதனையே எடுக்கவில்லை அதுமாதிரித்தான் அந்தப் பிள்ளைபுஸ்பாவும் சோதனை எடுக்கவில்லை.இரண்டு பேரும் சோதனை எடுத்துப் பாஸ்பண்ணவேணும்,இரண்டு பேற்றை வயதும் சிக்கலான வயது,அந்தப் பிள்ளை வெளிப்படையாக ஒருவிசயத்தைச் சொல்லிப் போட்டுப் போயிட்டாள்,அது விதியிருந்தால் நடக்கும்.அந்தப்பிள்ளையிலை உனக்கும் விருப்பம் என்று எங்களுக்குத் தெரியும் கொப்பாவும் நானும் உங்கடைகாதலுக்கு எதிராக நடக்கமாட்டம்.

ஆனால் நீங்கள் இரண்டு பேரும் உங்கடை படிப்பு குழம்பிப் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,படிப்பும் குழம்பி சோதனையிலும் பாஸ்பண்ண முடியாமல் போனால் எங்கடைகவலையைவிட நீங்கள் இரண்டு Nபுருந்தான் கூடக் கவலைப்படுவியள்.எங்களுக்கும் அந்தப்பிள்ளையிலை விருப்பந்தான் எதுக்கும் யோசித்து நட அந்தப் பிள்ளைக்கும் சொல்லு என்று ஒருபிரசங்கத்தையே ஞானத்தின் தாய் நடத்தி முடிக்க அமைதியாகக் கேட்டபடி கஞ்சியைக் குடித்தஞானம் சரி அம்மா நீங்கள் யோசிக்காதையுஙகோ நான் சோதனையிலை டிஸ்ரிங்சன்கிறடிட்டோட பாஸ் பண்ணுவன் என்று ஞானம் சொல்ல,சரி,நீ படுத்து நல்லாய் நித்திரையக்கொள்ளு என்று ஞானத்தின் தாய் எழுந்து போகிறாள்.

காலமை ஏழு மணியிருக்கும் ஞானம் துவாயையும் எடுத்துக் கொண்டு கிணத்தடிக்குப்போவதைக் கண்ட அவனின் தந்தை சுப்பையா,நேற்றக் காய்ச்சல் என்ற படுத்திருந்தவன்,இப்பஎழும்பிக் குளிக்கப் போகிறானே,காய்ச்சலோடை குளிச்சால் மறுதலிச்சிடுமே என்றுபதட்டப்பட்டவர் இஞ்சரப்பா செல்வம் குளிக்கப் போகிறான் என்னெண்டு கேளு என்றுஅவசரமாகச் சொல்ல வேகமாக கிணத்தடிக்குப் போன ஞானத்தின்ரை தாய்,தம்பி என்ன விசர்வேலை பார்க்கிறாய் காய்ச்சலோடை குளிக்கப் போறியா என்று பயந்தபடி கேட்க அம்மாகாய்ச்சல் விட்டிட்டுது,அதோடையம்மா இன்னும் ஒரு மாசத்தாலை எஸ்.எஸ.சி; சோதனைவரப்போகுது கொலிஜ்யுக்குப் போகாமல் நின்றால் பாடங்களை படிக்கேலாது,எனக்குஒன்றுமில்லையம்மா பயப்படாதையுங்கோ என்று ஞானம் சொல்லிவிட்டு குளிக்கத்தொடங்குகிறான்.அவன் காய்ச்சல் என்று சொல்லி கொலிஜ்யுக்குப் போகாமல் படுத்தபடிவீட்டிலேயே நிற்கலாம்,ஆனால் புஸ்பகலா அவனுடைய உடல் முழுவதிலுமேபரவிநின்றாள்.அவளைப் பார்:க்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்க வேணும் என்று அவனுடைய மனமும் மூளையும்சொல்லிக் கொண்டேயிருந்தது.அவளைப் பார்ப்பதில் அவனுக்கப் பரவசம் இருந்தது.புஸ்பகலா தன்னை வருத்தம் பார்க்க வருவாள் என்று அவன் கொஞ்சமும்எதிர்பார்க்கவில்லை,அவள் வந்தது அவனுக்க ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியைப் பரவசத்தைக்கொடுத்தது.

ஆனால் அவன் அதைக் காட்டிக் கொள்ளவேயில்லை.அவளின் உயரமான கம்பீரமான அழகில்மயங்கிக் கிடந்தான்.அவளின் தொத்துப் பல்லும் அவளின் கன்னக்குழியும் அவன் மனதைஆட்டிப் படைத்தது.

அதே காலமை ஏழு மணியிருக்கும் அறையைவிட்டு வெளியே வந்த புஸ்பகலா அம்மாகிணத்தடிக்கு வந்து மூன்றுவாளி தோய வாரம்மா என்று தாயைக் கூப்பிட,என்னடி வீட்டுத்தூரம் வந்து இண்டைக்கு இரண்டு நாள்தானே ஆகுது ,இப்ப தோய்ஞ்ச்சிட்;டு என்ன செய்யப்போறாய் நாளைக்குத் தோயலாம் பேசாமலிரு என்று சொல்ல,அம்மா நான் சும்மா தோயேலைநான் கொலிஜ்யுக்குப் போகப் போறன் வாம்மா வந்து கெதியிலை தோய வார் என்று புஸ்பகலாதாயக்குச் சொல்ல உனக்கு என்ன மூளைகீளை கழண்டுப் போச்சுதா இந்தக் கூத்தடிக்கிறாய்என்று தாய் அவளைக் கொஞ்சம் கடுமையாகப் பேச,அம்மா சொன்னால் கேக்கமாட்டியளாஇப்ப கன பிள்ளையள் ஒரு நாளுக்கே குளிச்;சிட்டு வாறவை,தோய்ஞ்சு போட்டு பாதுகாப்பாகபோறதில்லை ஒரு பிரச்சினையுமில்லை என்று சொல்கிறாள்.

புஸ்பகலாவின் மனதில் ஞானம் இண்டைக்கு கட்டாயம் வகுப்புக்கு வருவான் என்றுதோன்றவே தாயை ஆக்கினைப்படுத்தி கிணத்தடிக்குக் கூட்டிக் கொண்டு போகிறாள்.

இவளாலை பெரிய கரைச்சலாக் கிடக்குது சொன்னாலும் கேட்கிறாள் இல்லை,விடியக்காத்தாலை எழும்பி நின்று இவளஇ படுத்திறபாடு என்று புறுபுறுத்தபடியே மகளுடன்கிணத்தடிக்குப் போய்க் கொண்டிருந்தாள் புஸ்பகலாவின் தாய்.

அம்மா இப்ப விடியக்காத்தாலை இல்லை,இப்ப நேரம் ஏழேகாலம்மா என்று சொல்லியவள்கிணத்தடிப் பானாவின் நடுவில் முழங்காலை ஊன்றியபடி இருக்கிறாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.