அவளின் காதல் …சிறுகதை : ஏலையா க.முருகதாசன்
பேருந்து தரிப்பு நிலையத்தில் நான் போக வேண்டிய பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தன்.நான் போக வேண்டிய பேருந்து 952.பேருந்து தரிப்பிட மணிக்கூட்டைப் பார்த்தேன் எனது பேருந்து வருவதற்கு ஆறுநிமிடமிருந்தது.
263,979,957,955,954,94,98,90,எக்ஸ் 42 என எல்லா இலக்க பேருந்துகளும் இடதுபுறத்திலிருந்து வருவதைப் பார்ப்பதும் அப்படியே எனக்கு வலது பக்க பேருந்து நிலையத்தில் அவை நிற்கும் போது வலது பக்கமாக பார்ப்பதுமாக நான் நிற்கும் போது ஒரு பெண் தோளில் கைப்பையை தொங்கவிட்டபடி இடது கைவிரலால் சிகரட்டை வாயில் வைத்துப் புகையை இழுத்தவர்: சிகரட்டும் கையைத் தொங்கவிட்டபடி பஸ்தரிப்பு நிலையத்தை நோக்கி எனக்கருகாக வரும் போது தனக்கான பேருந்து வருவதைக் கண்டதும் சிகரட்:டை வீதியில் எறிந்துவிட்டு பேருந்தில் ஏறுவதற்காக விரைவாக நடந்தாள்.
அந்தச் சிகரட்டை அப்பொழுதுதான் மூட்டியிருந்திருக்கிறாள்.தலைப்பில் கொஞ்சம் மட்டும் எரிந்து புகைந்து கொண்டிருந்தது.அவள் வீதியில் எறிந்த சிகரட் புகைந்து கொண்டிருந்தது.ஒரு பேருந்தும் ஒரு காரும் அதை நசித்த போதும் அது எரிந்து புகைவிட்டுக் கொண்டிருந்தது.
சிகரட் புகைப்பதே உடல் நலத்திற்க கேடானது அதிலும் முழுச் சிகரட்டையே எறிந்து காசை வீணடித்துவிட்டாளே என்று எண்ணிக் கொண்டன்.எனது பேருந்து இன்னும் வரவில்லை.பேருந்தில் அந்தப் பெண ;ஏறிக் கொண்டாள்;.அவளுக்கு அப்படி என்னதான் அவசரம் இந்த பேருந்தை விட்டால் அடுத்து வரும் பேருந்தைப் பிடிக்கலாந்தானே என நினைத்த நான் அவளுக்கு அப்படி என்னதான் பிரச்சினை அதை அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் ஓடிப்போய்,அந்தப் பெண் ஏறிய 940 பேருந்தில் ஏறி அப்பெண்ணுக்கருகில் அமர்ந்து கொண்டன்.
எல்லா இடமும் இருக்கைகள் வெறுமனே கிடக்க எனக்கருகில் எதற்காக வந்திருக்கிறான் என்பது போல அந்த பெண் பார்;த்தாள்.அவள் சிகரட் புகைத்ததால் அவளின் அழகிய றோஸ் வண்ண இதழிலிலிருந்து சிகரட் புகை மணம் சாதுவாக வந்தது.அவளின் இதழ் ரோஜாப்பூ இதழைப் போல இருந்ததால் ரோஜாப்பூ இதழ்களிலிருந்தும் சிகரட் புகை வாசமும் வரலாம் என எண்ணிக் கொண்டன்.
எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.அவளின் கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காக அவளின் துடையில் மெதுவாகக் கிள்ளினன்.அவள் என்னை முறைத்துப் பாரத்து என்ன என்பது போல விழியுயர்த்தி விழியாலேயே ;கேட்டாள்:நான் அவளுக்கு என்ன பிரச்சினை என்பதை அறியும் முடிவிலிருந்ததால் அவள் கோபமாகப் பார்த்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மெதுவாகக் கதையைத் தொடங்கினன். சிகரட் புகைப்பதே உடலுக்குத் தீங்கானது,அதுவும் நீங்கள் தலைப்பில் மட்டுமே புகைந்த நிலையில் சிகரட்:டை வீதியிலை வீசி எறிஞ்சு போட்டு இங்கை வந்து உட்கார்ந்திருக்கிறியள் அப்படி என்னதான் அவசரம் என்றன்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொன்னன்.
சில விநாடிகள் மௌனமாக இருந்தவள் எனது காசு எனது உடம்பு புகைச்சது எனது வாய் என்று என்னைப் பார்த்துச் சொன்ன அவள் அங்கையங்கை இடம் இருக்கத்தக்கதாக எதுக்கு எனக்குப் பக்கத்தில் வந்திருக்கிறாய் நீ எந்த நாட்டுக்காரன் என்றவள் கைப்பைக்குள்ளிருந்து சுவிங்கத்தைப் போட்டுச் சப்பியபடியே கதைக்கத் தொடங்கினாள்:.
அவள் வாயிலிருந்து சிகரட் புகை நெடி வருவதை நிறுத்தவே சுவிங்கத்தை சப்பிக் கொண்டிருந்தாள்.அது தரமான சுவிங்கமாதலால் அதன் வாசனை இரம்மியமாக இருந்தது:
சிகரட்டை வீதியில் எறிந்துவிட்டு வந்த அவசரத்துக்கான காரணத்தை அவளிடமிருந்து அறியாமல் விடுவதில்லை என்ற முடிவில் நான் உறுதியாக இருந்தபடியால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயத்துடன் நூன் சிறீலங்கன் தமிழ் என்று சொல்லியபடியே ஒரு அசாத்திய துணிச்சலுடன் மெதுவாக அவளின் கையைப்பிடித்து ஆதரவாக அவளின் கையை வருடிவிட்டன்.
அவள் கண்கள் மெதுவாகக் குளமாகி சூடான கண்ணீர்த்துளியொன்று எனது புறங்கையில் விழுந்தது.நிச்சயமாக இனித் தனது கடந்கால வாழ்க்கையைச் சொல்லுவாள் என அமைதியாக அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன்.
மெல்லச் சொல்லத் தொடங்கினாள்.கார்லும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள்.ஆரம்பத்தில் சக வகுப்பு மாணவன் என்ற நட்பு மட்டுமே எமக்கிடையில் இருந்தது.நாளடைவில் காதலர்களானோம்.அப்பொழுது எனக்கு பத்தொன்பது வயது .இப்ப எனக்கு முப்பத்தைந்து வயது.
எமக்கிடையில் காதலின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்க எப்ப நாங்கள் சந்தித்தாலும் எனது இதழ்களை இழுத்து முத்தமிடாமல் இருக்க மாட்டான்.நானும் அவனின் இதிழ்ச் சுவையை விரும்பினன்.
பக்கத்தில் யார் நிற்கிறார்கள் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டோம்.நாளடைவில் காதலினால் ஏற்பட்ட இதழின் சுவை உடலின் உஸ்ணமும் காமத்தை நாடி நின்றது.
படித்து முடித்து ஒரு வேலையைத் தேடும்வரை ஒரு மாணவியாகிய நான் கருத்தரிக்கக்கூடாது என்பதில் கார்ல் கவனமாக இருந்தபடியால் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டோம்.
கல்லூரிப் படிப்பு முடிந்து பல்கலைக் கழகத்திற்கும் போனோம். ஆனால் கார்லும் நானும் ஒரே பாடத்தைப் படிக்கவில்லை.அவர் நிதி சம்பந்தப்பட்டப் படிப்பையும்,நான் வணிக முகாமைத்துவப் படிப்பையும் படித்தோம்.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் கார்ல் அமெரிக்காவுக்குப் போய் ஒரு வருடம் வேலை செய்யப் போகிறேன்,பிறகு ஜேர்மனிக்கு வந்து வேலைச் செய்யப் போகிறேன் என்று சொன்னதுடன் ஜேர்மனிக்கு வந்ததும் திருமணம் செய்வோம் என்றான்.நானும் அதற்குச் சம்மதித்தேன்.
அவன் அமெரிக்காவுக்கு போகும் முன்னரே ஒரு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தது.கார்லுக்கு பெரிய சந்தோசம்.
எனக்கு வேலை கிடைத்து ஒரு மாதத்திற்கு பிறகு கார்லுக்கும் அமெரிக்காவில் வேலை கிடைத்தது.அடுத்த நாள் பயணமாக இருந்த நிலையில் இன்று ஒரு நாள் முழுக்க விடுதியில் தங்குவோமா என்று கேட்டு எனது சம்மதத்துடன் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு அறையைப் பதிவு செய்து ஒரு நாள் முழுக்க அங்கேயே தங்கினோம்.
நம்மிருவருக்குமான அந்த அறைச் சூழ்நிலை இதமாக இருந்தது.அன்றும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டோம்.உடலுறவு மகிழ்ச்சியைவிட இனி கார்லை ஒரு வருடத்துக்கு பார்க்க முடியாதே என்ற கவலை என்னை வாட்டியது.
அடுத்த நாள் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பும் போது என்னையும் அறியாமல் குமுறிக் குமுறி அழுதன்.அவன் என்னைத் தேற்றினான்.ஒருவாறு அவனையனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்த நான் அன்றிரவு நித்திரை கொள்ளவே இல்லை.
தலையணையை கண்ணீர் நனைத்துக் கொண்டே இருந்தது.எனக்கும் கார்லுக்கும் இருந்த உறவை அப்பா அம்மா அறிந்திருந்தார்கள்.எனது கார்லை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு வந்த நான் அறைக்குள் போய் முடங்கிக் கிடந்ததைக் கவனித்த எனது அம்மா காலடி ஓசைகூட கேட்காதளவிற்கு மெதுவாக நடந்து வந்து கட்டிலில் அமர்ந்து ஆதரவாக எனது தலையைத் தடவிவிட்டவர் சரி இப்ப என்ன நடந்து போச்சு ஒரு ஆறுமாதம் கழித்து விடுமுறை எடுத்துக் கொண்டு போய் ஒரு இரண்டு கிழமை இருந்திட்டு வரவேண்டியதுதானே,முன்புதான் அமெரிக்கா என்றால் அதன் தூரத்தை நினைத்து மலைப்பாக இருக்கும்:இப்ப அப்படி இல்லைத்தானே என்றவள் கோப்பி கொண்டு வந்து தாறன் குடிச்சிட்டு நிம்மதியாகப் படு,பெரிய உத்தியேர்கத்தில் அதுவும் 500 பேர் கொண்ட தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்கிற நீ இப்படி திடமனமில்லாமல் அழலாமா என்று ஆறுதல்படுத்திவிட்டு கோப்பி கொண்டு வருவதற்காக எழுந்து போனாள்.
எனது மனநிலையில் மெதுவாகக் கடந்த மாதங்கள் என்னை நான் ஆற்றுப்படுத்தியதால் மாதங்கள் வேகமாகச் சென்றன போல் உணர்ந்தன்.
இரண்டு வருடங்களில் நான்கு முறை அமெரிக்காவுக்குப் போய் ஒவ்வொரு முறையும் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு வந்தன்.
ஓவ்வொரு நாளும் கார்லோ அல்லது நானோ தொலைபேசியில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஒரு மணித்தியாலம் வரை கதைப்போம்.
நாளடைவில் கார்ல் தொலைபேசி எடுப்பது குறைந்து கொண்டே வந்தது.நான் எடுத்தாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.நாள் செல்லச் செல்ல முற்றுமுழுதாக கார்ல் என்னை ஒதுக்கிவிட்டார் என்பதை உணர்ந்தேன்.
அது எனக்குப் பெருந் தாக்கமாக இருந்தது.கடைசியாக அவனைப் பார்த்து என்னை வெறுப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்டுவிடுவது என முடிவெடுத்த நான் கார்லைத் தேடி அமெரிக்காவுக்குப் போனன்.
வீட்டு மணியை அடித்தவுடன் கதவைத் திறந்த பெண் யார் நீங்கள்:என்று கேட்டவள் தன்னைத் திருமதி கார்ல் என அறிமுகப்படுத்தினாள்.கார்லை திருமணம் செய்துவிட்டீர்களா என அப்பொழுது கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டன்.
கார்ல் என்னைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டார்: என்ற அந்தப் பெண் சொல்லிவிட்டு மீண்டும் நீங்கள் யார் என்று கேட்டாள்.நான் அவரோடு ஜேர்மனியில் ஒன்றாகப் படித்தவள் என்பதை மட்டுமே சொல்லிவிட்டு கார்ல் வீட்டில் இல்லையா என்றதற்கு அவர் வேலை விசயமாக கலிபோர்னியாவுக்குப் போய்விட்டார் வர மூன்று நாட்களாவது செல்லும் முதலிலை உள்ளே வாருங்கள் அவரைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறியள் ஒரு கோப்பியாவது குடித்துவிட்டுப் போங்கள் என்று அழைத்தாள்.
வேண்டாம் என்று சொல்லி முகத்தை முறிக்கக்கூடாது என்று நினைத்த நான்; வீட்டுக்குள் போய் அமைதியாக உட்கார்ந்திருந்தன்.கார்லின் மனைவி கோப்பி கொண்டு வந்து தந்தாள்.குடித்துக் கொண்டே தான் எவ்வாறு சந்தித்தேன் என்ற விபரங்களைச் சொன்னவள்,கார்ல் இதுவரை எந்தப் பெண்ணோடும் தொடர்பு கொள்ளவில்லையென்று சொன்னான்.அவர் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக இருக்கத் தீர்மானித்துவிட்டார்.தான் மூன்று மாதக் கர்ப்பிணி என்றும் சொல்லி முடித்தாள்.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன்.கார்ல் என்னைக் காதலித்ததையும் உறவு கொண்டதையும் சொல்லி என்னதான் ஆகப் போகின்றது.ஆண்களின் மனநிலை இதுதானோ என நினைத்த நான் முகத்தில் எதுவுமே காட்டிக் கொள்ளாமல் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்து வந்துவிட்டன்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய நான் இனி நான் எப்படி வாழ வேண்டும் என சிந்திக்கத் தொடங்கினன்.நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தன் மீண்டும் மாதங்கள் மெதுவாகப் போவது போல இருந்தது.
மீண்டும் ஒரு ஆண்துணையைத் தேட எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை. நான் வேலை செய்கிற தொழிற்சாலையில் ஒரு அதிகாரி எனது நட்பை விரும்பினார்.வேலை சம்பந்தமாக போகுமிடமெல்லாம் என்னையும் உதவியாளராக அழைத்துக் கொண்டு போவார். அவருக்கும் எனக்கும் வேலை சம்பந்தமான நட்பு மட்டுமேயிருந்தது.கார்லிடம் அனுபவித்த உடல்சுகம் அத்தோடு முடிந்தது என முடிவெடுத்துக் கொண்டன்.இனி அது வேண்டாம் என வேலையிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினன்.
இப்படியே பதினான்கு வருடங்கள் ஓடி மறைந்தன.விடுமுறை காலங்களில் தோழிகளுடன் சேர்ந்து வேறு வேறு நாடுகளுக்குப் போய் வந்தேன்.ஆண் நண்பர்களும் எம்மோடு வருவார்கள். ஆனால் நட்புக்கென்று ஒரு எல்லை இருக்கின்றது.அந்த எல்லையைத் தாண்ட நான் யாருக்குமே அனுமதி கொடுக்கவில்லை.
இன்று இப்பொழுது கடையில் நான் பொருட்களை எடுத்து வண்டிலுக்குள் போட்டுக் கொண்டிருக்கும் போது தொலைபேசியொன்று வந்தது.யாராக இருக்கும் என காதில் வைத்த போது நான் கார்ல் ஓபகவுசன் நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் இருக்கிறன். எனக்கு நுரையீரல் கான்சர் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேனோ தெரியாது என்னைப் பார்க்க வருவியா என்று குழந்தை போல் கார்ல் கேட்டான்.இதைச் சொல்லிவிட்டு அவள் கோவிக் கோவி அழுதாள்,தான் பேருந்துக்குள் இருக்கிறேன் என்ற சூழ்நிலையை மறந்து அழுதாள்.பயணிகள் என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தனர்.
அவள் ஏறிய பேருந்தில் ஏறி அவளுக்கருகில் உட்கார்ந்து அவளின் தொடையைக் கிள்ளிக் கதை கேட்ட நான் இப்ப அந்த அவனல்ல நான்.அவளின் கதையைக் கேட்ட அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் நண்பனாகவிருந்தன்.
அதற்கு மேல் அவளும் எதுவும் கதைக்கவில்லை.நானும் எதுவும் கேட்கவில்லை.ஆஸ்பத்திரியடி வந்துவிட்டது நான் இறங்கப் போகிறன் என்று அவள் எழ நானும் வாறன் என்று எழுந்து அவளுடன் ஆஸ்பத்திரிக்குப் போனன்.
கார்ல் படுத்திருந்த அறைக்குள் போனதும் கார்ல் மெலிந்து சோர்ந்து போய் படுத்திருந்ததைக் கண்டவள் கார்ல் என் உயிரே என்று நாக்குழற கட்டிலடிக்கு விரைந்து போய் அவனின் கைகள் இரண்டையும் எடுத்து கண்களில் ஒத்தினாள்.கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
அவளின் கண்ணீர் கார்லின் கன்னத்தில் விழுந்து அவனின் கழுத்து வரை சென்றது.அந்தக் காட்சி எனது கண்களையும் குளமாக்கியது.கட்டிலின் கால்மாட்டுக் காம்பியைப் பிடித்தபடி அவர்களிருவரையம் பார்த்துக் கொண்டிருந்தன்.
கார்லிடம் அவள் கொண்ட காதல் முற்றுமுழுதாக கருகவில்லை.காதல் வேரில் பச்சையிருந்து அது மீண்டும் துளிர்விடுகின்றது.அதை நான் கண்டு கொண்டன்.
தனக்கு கான்சர் என்று அறிந்ததும் தனது மனைவி தன்னை விவாகரத்துச் செய்துவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துவிட்டாள் என்று கார்ல் சொன்னான்.
நோயில் வாடிய நான் உன்னைத் தேடி வந்திருக்கிறன். என்னுயிர் உன் மடியில்தான் போக வேண்டும் அதுதான் எனது கடைசி ஆசை என்றான் கார்ல்.
கார்ல் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு அவள் துடித்துப் போனாள்.எதுவுமே சொல்லாது விக்கித்து நின்றாள்.அளவுக்கு மீறியு சிகரட் புகைத்தலால்தான் எனக்கு கான்சர் வந்ததென்று மருத்துவர்கள் சொன்னார்கள்.நீயும் அதைச் செய்யாதே என்றான் கார்ல்.அவன் சொன்னதும் அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
வீதியில் எறிந்த சிகரட்டை அவள் பார்வை ஞாபகப்படுத்தியது.யார் இவர் என்று என்னைப் பார்த்துக் கேட்டான் கார்ல்.அவர் ஒரு வழிப்போக்கன்.என்னோடு பேருந்தில் வந்தவர்.இலங்கையைச் சேர்ந்த தமிழன்.அவருக்கு எனது கதையைச் சொல்லிக் கொண்டு வந்தனான்.உங்களைப் பார்க்க வேண்டும் என்று அவரும் வந்துவிட்டார்.அவள் சொல்லி முடித்ததும்.யாருமே எதிர்பாராத கேள்வியைத் தனது காதலியிடம் கேட்டான் கார்ல்.
நீ அவனைக் கல்யாணம் செய்யலாந்தானே என்றான்.அவள் அதை உடனடியாகவே மறுத்தாள்.ஏன் அவன் தமிழன் என்பதற்காகவா மறுக்கிறாய். ஏன கார்ல் சொல்லி முடிக்க முந்தி இல்லை இல்லை அதுக்கில்லை உங்களைக் காதலிச்சதும் உங்கள் உட்மபுக்காக வாழ்ந்ததும் போதும்.அவர் நல்ல நண்பராக இருப்பார் என்று அவள் சொன்னாள்.
அவர்களிடம் விடைபெற்று ஆஸ்பத்திரியைவிட்டு வந்த நான் ஐரோப்பியரின் காதலைப் பற்றி இவ்வளவு காலமும் சொன்னவற்றை அந்த இரு காதல் சோடிகளும் பொய்யாக்கியதைக் கண்டன்.
அவர்களிடத்திலும் தூய்மையான காதல் உண்டென்பதைக் கண்டன்.நல்ல நண்பி கிடைத்த நிம்மதியில் நடந்து கொண்டிருந்தன்.