பெருமதிப்புக்குரிய திரு.மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களுக்கு, ஏலையா க.முருகதாசன்
தங்களை இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது.ஆனால் தங்கள் தமிழிலக்கிய ஆளுமைபற்றிநிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனது வீடு தெல்லிப்பழை அம்பனைக் குறிச்சியில் மகாஜனாக் கல்லூரியின் அருகில்வீரகேசரி,தினக்குரல் ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியர் கலாகேசரிதிரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களின் அயல் வீடு.
நாங்கள்: 1968இல் அம்பனைக் கலைப்பெருமன்றத்தை ஆரம்பித்து அதன் செயல்பாடுகளில்ஈடுபட்டிருந்த போது திரு.ஆ.சிவநேசச்செல்வனும் அவருடைய தந்தையாராகிய பண்டிதர்திரு.ஆறுமுகம் அவர்களும் தங்களின் தமிழிலக்கியச் சேவை பற்றி அடிக்கடி விதந்துரைத்துக்கலந்துரையாடுவார்கள்.
மேற்படி மன்றத்தின் பன்முக விழாக்களில் பல ஊர்களிலிருந்தும் சமகாலத்தில் இருந்த தமிழ்ஆளுமையுடைய தமிழறிஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். சில வேளை நீங்களும்பங்குபற்றியிருக்னகலாம்.
இதைவிட தங்கள் காந்தளகம் புத்தகசாலையில் பணிபுரிந்து வரும் கலைமாமணிதிருமதி.சசிரேகா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜேர்மனிக்கு வருகை தந்து ஒரு புத்தகக்கண்காட்சியை இங்கு எமது சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்ஒழுங்கமைப்பில் நடத்தியிருந்தார்கள்..கலைமாமணி திருமதி.சசிரேகா பாலசுப்பிரமணியம்அவர்கள் ஒரு நடனக் கலைஞர் என்பதும் அவரின் நடனம் ஒன்று தாயக நிகழ்வு ஒன்றில்இடம்பெற்றிருந்தது.அந்த நிகழ்வுக்கு திரு.தொல்.திருமாவளவனும் வந்திருந்தார்.
மேலே கூறப்பட்டவை யாவும் நான் கொண்ட தங்களைப் பற்றிய அறிதலாகும்.தங்களிடம்இரண்டு கேள்விகள் உண்டு.ஒன்று கடந்த பொதுத் தேர்தலின் போது மறவன்புலவில் உள்ளகோவிலொன்றில் திரு.எஸ்.ஏ.சுமந்திரனின் படத்துடன்கூடிய போஸ்ரரை ஒட்டப்பட்டிருந்ததைஅதை அவர்தான் ஒட்டினார் என ஒரு அறிக்கை விட்டீர்கள், அது அவசரப்பட்டு விட்டஅறிக்கையென்று தாங்கள் நினைக்கவில்லையா?.
ஏனெனில் தங்களையும் திரு.சுமந்திரனையும் முரண்பட வைக்க இடையில் உள்ளவர்கள்கூடஒட்டியிருக்கலாம் அல்லவா,அக்கோணத்தில் தாங்கள் சிந்திக்கவில்லையா?.அல்லது தாங்களேஒட்டியிருக்கலாம் என்றுகூட சந்தேகம் கொள்ள இடமுண்டு.
திரு.சுமந்திரனை சமய ரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் அரசியல் கண்ணோட்டம் தவறென்றுஅறிஞராகிய தங்களுக்குக்கூடவா தெரியவில்லை.
இரண்டாவது காங்கேசன்துறை தையிட்டியில் அமைக்கப்பட்ட புத்தவிகாரைக்கு பாபர்மசூதிக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு மைத்திரிபாலசிறிசேனா முன்னிலையில் கதைத்து ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள்.அவ்வாறு எடுத்தோம்கவிழ்த்தோம் என அறிஞர்கள் பேசலாமா?.சிங்கள மக்களை இது எவ்வளவு ஆத்திரப்படுத்தும்என்பதையோ பாபர் மசூதி என்ற சொல்லைச் சொன்னதால் இஸ்லாமியருகு;கு எவ்வளவுஆத்திரத்தையம் வேதனையையும் உண்டாக்கும் என்பதை தாங்கள் தூரப் பார்வையுடன்பார்க்கவில்லையா.
ஐயா,காங்கேசன்துறை தையிட்டியில் ஒரு புத்தவிகாரை இருந்தது உணமையே.1968களில்இதுபற்றி கதைக்கப்பட்டது.தங்களுக்கும் இதுபற்றி நன்றாகவே தெரியும்.தமிழரும்பௌத்தத்தை தழுவினார்கள் என்ற உண்மைக்குப் பின்னால் இன்னொரு உண்மையும் உண்டு.சோழப் படையெடுப்பின் போது அப்படையெடுப்பை மூர்;க்கமாக எதிர்த்த சிங்கள கொவிகமஉயர்பிரிவினரை சோழப் படைகள் கைது செய்து வடபுலத்தில் கும்பல் கும்பலாக அடிமைகளாககுடியமர்த்தினார்கள் என்பதும் அதே பெயரின் திரிபு நிலை கொண்ட (நெடில் குறில்வித்தியாசம்) ஒரு பிரிவினர் காலப் போக்கில் தமிழராக மாறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்என்புதும் தங்களுக்கும் தெரிந்த வரலாறேயாகும்.
அவர்கள் வழிபாடு செய்த விகாரையே காங்கேசன்துறை தையிட்டியிலிருந்த விகாரை என்பதுதங்களுக்கும் தெரியும்.சிங்களவராக இருந்து தமிழராக மாறிய சிங்களவர் வாழ்ந்த இடங்கள்நீலாவத்தை,பத்தாவத்தை, சூராவத்தை,கொத்தியாவத்தை,புதுத்தோட்டம் என்ற அழுத்வத்தைஇன்னமும் இருக்கின்றன.காங்கேசன்துறைத் தையிட்டியிலும் அவர்களில் சிலர்இருக்கின்றார்கள்.( எழுத்தாளர் திரு.குரு.அரவிந்தன் தையிட்டியில் புத்த விகாரை இருந்ததுஉண்மை என்று சொல்லியிருக்கின்றார்.
காங்கேசன்துறை வேதாரண்யம் கப்பல் போக்குவரத்தை ஏற்று தாங்கள் துறைமுகத்தில் விழுந்துவணங்கியதைப் பார்த்:தேன்.ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கம்.