கட்டுரைகள்

நியூசிலாந்தில் புதிய ஆட்சி: புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன்! மவோரி மக்களின் சிறப்பு உரிமைகள் நீக்கப்படுமா ? – ஐங்கரன் விக்கினேஸ்வரா

நியூசிலாந்து பொதுத் தேர்தலில்

வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அரசாங்கம் அமைத்து வெற்றி அடைந்துள்ளன. இதனையொட்டி பழங்குடி இன மவோரி (Māori People) மக்களுடனான உறவுகளில் பிரச்சினைகள் அந்நாட்டில் தோன்றத் தொடங்கியுள்ளன என மவோரி பழங்குடியின மக்கள் அச்சந் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினைகளால் அந்நாட்டில் இனப்பிளவுகளை உருவாக்க வலதுசாரிக் கட்சிகள் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2020ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி முன்னர் மகத்தான வெற்றி பெற்றது.

இளம் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா:

நியூசிலாந்தின் பெண் பிரதமராக, 2017ல் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் 37வது வயதில் தேர்வு செய்யப்பட்டார்.

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்ற அவர், குடும்ப சூழல் காரணமாக தன் பதவியை கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.

ஆயினும் முன்னாள் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தமைக்கு வேறு பல குற்றச்சாட்டுக்குகளும்

அறிவிக்கப்பட்டது. அவரது ஆட்சியில் கொரோனா தொற்று நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்தார். இந்த நிலையில் நெருக்கடிகள் அதிகரிக்கவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக பொறுப்பேற்றார். ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகள் வலதுசாரி அரசாங்கங்களைத் தேர்ந்தெடுத்த நேரத்தில் நியூசிலாந்து முற்போக்கான கொள்கைகளுடன் தனித்து நின்றது.

மூவாண்டுகள் கழிந்த நிலையில், அந்நாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராகவும் பழங்குடி இனமான மவோரி மக்களுக்கு ஆதரவாகவும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி, எதிர்ப்பு கிளம்பியது.

தொழிலாளர் கட்சியின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நேற்று நியூசிலாந்தில் நடந்தது.

இதில், தொழிலாளர் கட்சி, தேசிய கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலை தொடர்ந்து, அதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், தேசிய கட்சி 40 சதவீத ஓட்டுகளை பெற்றது.

அடுத்ததாக தொழிலாளர் கட்சி, 25 சதவீத ஓட்டுகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, சுதந்திரவாத ஏ.சி.டி., கட்சியுடன் கூட்டணி வைத்த தேசிய கட்சி, அங்கு ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து, நியூசிலாந்தின் புதிய பிரதமராக தேசிய கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon)பதவியேற்று உள்ளார். தொழிலதிபரான இவர், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றியவர்.

நடந்த முடிந்த தேர்தலில் இனவாதம் மிகவும் வெளிப்படையாகத் தெரிவதாக மவோரி பழங்குடியினத் தலைவரான நைடா கிளாவிஷ் கூறினார்.

வலதுசாரி ஏசிடி (ACD) கட்சி, பாப்புலிஸ்ட் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும், தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின்கீழ் மவோரி இன மக்களை நாட்டின் மக்களாக அங்கீகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எதிரான கொள்கைகளை ஊக்குவித்து வருவதாக அவர்கள்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், அக்குற்றச்சாட்டுகளை அவ்விரு கட்சிகளும் மறுத்துள்ளன. தங்கள் கொள்கைகள் இனவெறியைத் தூண்டும் கொள்கைகள் அல்ல எனவும் மாறாக அவை அனைத்தும் நியூசிலாந்து மக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதற்கானவை எனவும் அக்கட்சிகள் தெரிவித்தன.

மேலும், மவோரி இன மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளால் பழங்குடியினர் அல்லாத குடிமக்கள் தங்களுக்கான சலுகைகளை இழக்க நேரிடுகிறது என்றும் அவை கூறியுள்ளன.

இந்த தேர்தலில் வாக்குறுதிகளாக பணவீக்கம் மற்றும் அண்ணிய செலாவணி கட்டுப்பாடு, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு, கல்வி, தொழில் ஆகியவற்றை மேம்படுத்துவதாக தொழிலாளர் கட்சி

தனது பிரச்சாரத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது.

இதனை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி நாட்டின் அரசியல் திட்டங்கள் வகுப்பதில் பூர்வக்குடிகளின் பங்கு, வரி குறைப்பு, இலவச மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்தது.

நியூசிலாந்து புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் :

தற்போது நியூசிலாந்து பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சனின் முதல் முன்னுரிமை, முந்தைய அரசாங்கம் விதித்த சிகரட், புகையிலை கட்டுப்பாடுகளை நீக்குவதாகும். குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது.

நியூசிலாந்தில் தேசிய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய அரசின் பதவியேற்றுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் முன்னைய பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆயினும் அவரது ஆட்சிக்காலம் 9 மாதங்கள் கடந்தநிலையில் நாட்டின் 54-வது நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் போட்டியிட்டார். இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை குறைவு என்பதால் கூட்டணி கட்சி எம்.பி.க்களை சார்ந்து களம் இறங்கினர்.

கடந்த மாதம் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய அரசு பதவியேற்றுள்ளது.

பிரதமராகும் தொழில் அதிபர் :

கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (வயது 53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஜெனரல் கிண்டி கைரோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் லக்சன், தான் ஏற்றிருக்கும் பிரதமர் பதவியானது, அருமையான பொறுப்பு என்றும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் கூறினார்.

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஆட்சியின் 100 நாள் செயல் திட்டத்தை விரைவில் தயார் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

அத்துடன் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகளுக்குள் வரி குறைப்புகள் மற்றும் 500 போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதாக லக்சன் உறுதி அளித்துள்ளார்.

பூர்வகுடிகள் மாவோரிகள் (Māori):

நியூசிலாந்தில் முதலில் குடியேறியவர்கள் கிழக்குப் பொலினீசியாவிலிருந்து வந்த பொலினீசியர்களாவர்(Polynesians). மரபணுவழி மற்றும் தொல்லியல் சான்றுகள் இவர்கள் மெலனீசியாவில் இருந்து குடிபெயர்ந்து அங்கிருந்து கிழக்கில் பயணித்து சொசைட்டி தீவின் வழியே இங்கு வந்தடைந்தனர். இது கி.பி 1280இல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இவர்களின் வழித்தோன்றல்களே மாவோரிகள் எனப்பட்டனர். இவர்கள் தங்களுக்கெனத் தனித்த பண்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தனர். நியூசிலாந்தின் கிழக்கே உள்ள மிகச்சிறிய தீவான சதாம் தீவுகளில் குடியேறியவர் மொரியோரி மக்கள் எனப்படுகின்றனர். மொழிச் சான்றுகளின்படி இவர்கள் கிழக்கில் பயணித்த மாவோரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்களே எனக் கருதப்படுகின்றது.

இங்கு குடியேறியவர்கள் இங்கிருந்த 1500களில் அற்றுவிட்ட பறக்காத மோவாவை வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். பயிரிடப்படக் கூடிய பகுதிகளில் குடியேறியவர்கள் சேம்பு, வற்றாளைக் கிழங்குகளை வேளாண்மை செய்யத்தொடங்கினர்.

தற்போது நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களான மாவோரிகள் (Māori) கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி மொழியைப் பேசுகிறார்கள். 19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன.

ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

தமிழர்களும் மாவோரிகளும் :

மாவோரிகள் தங்கள்து முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருதுகோள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு. இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.