கட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 86 “ ! முருகபூபதி

இலங்கையிலிருந்த காலப்பகுதியில், மல்லிகை, வீரகேசரி வாரவெளியீடுமுதலானவற்றில் நூல்கள், சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதினேன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி என்றபத்தித்தொடரை ரஸஞானி என்ற புனைபெயருடன் எழுதிக்கொண்டிருந்தபோது,எனக்கு கிடைக்கும் நூல்கள், சிற்றிதழ்கள் பற்றியெல்லாம் எழுத நேர்ந்தது.

அந்தப்பழக்கம், அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தொடருகிறது.முன்னர் அவுஸ்திரேலியாவில் வெளிவந்த மரபு, அவுஸ்திரேலியா முரசு, தமிழ்உலகம், அக்கினிக்குஞ்சு , கலப்பை, உதயம் முதலான இதழ்களிலும், பின்னாளில்கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை, ஜெர்மனி தேனீ, இங்கிலாந்து வணக்கம்லண்டன், பிரான்ஸ் நடு, ஆகியனவற்றிலும் இலங்கை வீரகேசரி, தினக்குரல்,தினகரன், காலைக்கதிர், யாழ். ஈழநாடு , தீம்புனல் வார இதழ்களிலும் மற்றும்ஞானம், ஜீவநதி முதலான மாத இதழ்களிலும் நூல் அறிமுகக்குறிப்புகளைபடித்தோம் சொல்கின்றோம் என்ற தலைப்பில் தொடர்ந்தும் எழுதிவருகின்றேன்.

சில ஆக்கங்கள், இலக்கிய நண்பர் நடேசனின் வலைப்பூவிலும் பதிவேற்றம்கண்டுள்ளன.இதனைப்படிக்கும் வாசகர்கள் கணினியில் படித்தோம் சொல்கின்றோம் – முருகபூபதிஎன்று அழுத்தினால், தேவைப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்து படிக்கலாம்.இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் முன்னர் குறிப்பிட்டதையே மீண்டும் சொல்லவிரும்புகின்றேன்.

நான் இலக்கிய உலகில் திசைமாறிய பறவை !அதனால் தனிப்பட்ட முறையில் எனது ஆக்க இலக்கியத்திற்குத்தான் பெரும் பாதிப்புநிகழ்ந்தது.

சிறுகதை எழுத்தாளனாகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமாகியிருந்த நான்,எதிர்பாராத வகையில் செய்தியாளனாக மாறநேர்ந்தது. அதனைத் தொடர்ந்துசெய்திகளையும், மறைந்த ஆளுமைகளையும் வெளிவரும் புதிய நூல்களையும் அங்கம்வகித்த அமைப்புகள் தொடர்பான செய்திகளையும் எழுதநேரந்தமையால், படைப்புஇலக்கியத்திலிருந்து விலகிச்செல்ல நேர்ந்தது.

எனினும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்துள், ஏழு கதைத் தொகுதிகளையும், ஒருநாவலையும் ( பறவைகள் ) வெளியிட்டுவிட்டேன். கதைத் தொகுதிகளில் முதலாவதுவெளியீடு சுமையின் பங்காளிகள் தொகுப்பிற்கும், பறவைகள் நாவலுக்கும்இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றிருக்கின்றேன்.

தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி ஒருவரும், இலங்கையில் பேராதனை, கிழக்குபல்கலைக்கழக மாணவிகள் இரண்டுபேரும் எனது ஆக்க இலக்கிய நூல்கள்தொடர்பாக B. A. – MPhil பட்டத்திற்கான ஆய்வுகளையும்முடித்திருக்கின்றனர்.

தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மற்றும் ஒரு மாணவியும் எனதுஆரம்ப கால சிறுகதைகள் தொடர்பாக தனது B A. பட்டத்திற்கான ஆய்வைமேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இம்மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன்.படித்தோம் சொல்கின்றோம் என்ற எனது தொடர் பத்தியில், இதுவரையில் இலங்கை,இந்தியா மற்றும் மலேசியா , சிங்கப்பூர் உட்பட கனடா, அவுஸ்திரேலியா மற்றும்ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள் பலரதும் நூல்கள் பற்றி எழுதிவந்திருக்கின்றேன்.

நூறுக்கும் மேற்பட்ட படைப்புகள் இந்தத் தொடர்பத்தியில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனது வெளிநாட்டுப்பயணங்களின்போது எனக்குகிடைக்கும் நூல்களை நேரம் ஒதுக்கி படித்து, முடிந்தவரையில் எழுதிவருகின்றேன்.

அத்துடன் முன்னுரை கேட்டு வரும் நூல்களுக்குக்கும் எழுத நேர்ந்துள்ளது.நானும் முப்பது நூல்கள் எழுதிவிட்டேன். எனினும் எனது நூல்கள் பற்றி எத்தனைபேர்எழுதினார்கள்..? என்பது குறித்த சிந்தனை எதுவுமின்றி, அவ்வாறுஎழுதியவர்களுக்கு நன்றியை தெரிவித்தவாறு, இதுவரையில் நான் படித்தோம்சொல்கின்றோம் தொடரில் அறிமுகப்படுத்திய நூல்கள் – அவற்றை எழுதியவர்களின்பெயர் பட்டியலை இத்துடன் தருகின்றேன்.

01. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)

02. ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்.

03. இயக்குநர் மகேந்திரனின் (1939 – 2019) சரிதம் பேசும்சினிமாவும் நானும்.

04. ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ்

05. கேரள இலக்கியவாதி பாலச்சந்திரன் – சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள்— தமிழில் கே.வி. ஷைலஜா.

06. நடேசன் எழுதிய எக்ஸைல்.

07. தாமரைச்செல்வி எழுதிய வன்னியாச்சி.

08.  ஞானம் 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழ்

09. சிவனுமனோஹரன் எழுதிய மீன்களைத் தின்ற ஆறு.

10. சாத்திரி எழுதிய அவலங்கள்.

11. கானா பிரபா எழுதிய அது எங்கட காலம்.

12. தெய்வீகன் எழுதிய காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி.

13. நூலகர் செல்வராஜா எழுதிய ஈழநாடு – ஒரு ஆலமரத்தின் கதை.

14. நீர்வை பொன்னையன் எழுதிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள்.

15. யாழ். நல்லூரிலிருந்து வெளியான சிற்றிதழ் எங்கட புத்தகங்கள்.

16. எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை.

17. அஜித் போயகொட எழுதிய நீண்ட காத்திருப்பு.

18. தெணியான் எழுதிய பொற்சிறையில் வாடும் புனிதர்கள்.

19. தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம்.

20. தங்கத்தாரகை – இலங்கை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு காலவரலாறு!

21. ஞானம் 2020 ஏப்ரில் மாத இதழ்.

22. கலைவளன சிசு.நாகேந்திரன் எழுதிய

பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்றுஅகராதி.

23. சயந்தன் எழுதிய ஆதிரை.

24. கோமகன் தொகுத்திருக்கும் குரலற்றவரின் குரல்.

25. மனோ சின்னத்துரை எழுதிய கொரோனா வீட்டுக்கதைகள்.

26. அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்குநடத்தைகள்.

27. செ. கணேசலிங்கன் மொழிபெயர்த்த ஜேர்மன் நாவல்அபலையின் கடிதம்.

28. கி. லக்‌ஷ்மண ஐயர் எழுதிய சிப்பிக்குள் முத்து.

29. அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்.

30. அடிநிலை மக்களின் கல்விக்காக அமெரிக்கா கார்லோனியாவிலும் வடமராட்சிகரவெட்டியிலும் தோன்றிய விடிவெள்ளிகள்.

31. கருணாகரமூர்த்தி எழுதிய    அனந்தியின்    டயறி.

32. வேதநாயகி செல்வராசா எழுதிய நரைவழியோடிய அனுபவ மொழிகள்.

33. நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல்கையேடு.

34. காற்றுவெளி – மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்.

35. அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு.

36. நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் எழுதியஇந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.

37. கீதா மதிவாணன் மொழிபெயர்த்த  ஹென்றி லோஸனின் “ என்றாவதுஒரு நாள்

38. கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி எழுதிய சிந்தனைச்சுவடுகள்.

39. கலாநிதி செ. சுதர்சன் எழுதிய தாயிரங்கு பாடல்கள்.

40. கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்.

41. எஸ். கிருஷ்ணமூர்த்தி எழுதிய நோபோல் – திரைக்கண்.

42. அந்த்வான் து செந்த் – எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன்.

43. தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்.

44. ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை.

45. வி.எஸ். கணநாதன் எழுதிய சத்தியம் மீறியபோது.

46. அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை.

47. ஶ்ரீரஞ்சனி எழுதிய பின்தொடரும் குரல் – நான் நிழலானால் – உதிர்தலில்லைஇனி .

48. நடேசன் எழுதிய அந்தரங்கம்.

49. ராணிமலர் எழுதிய “அமரர் சின்னத்தம்பி சின்னையா செல்லையா வாழ்வும்பணிகளும். “

50. ஜீவநதி 136 ஆவது இதழ்.

51. கவியரசு கண்ணதாசன் எழுதிய வனவாசமும் – மனவாசமும்.

52. ஆழியாள் மொழிபெயர்த்த ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகை கற்றலும்கேட்டலும்.

53. காமெல் தாவுத் எழுதிய மெர்சோ: மறுவிசாரணை.

54. ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதிய காணாமல் போகவிருந்த கதைகள்.

55. மார்ட்டின் விக்கிரமசிங்காவின் – எங்கள் கிராமம் – தமிழில் இரா. சடகோபன்.

56. எச். எச். விக்கிரமசிங்க தொகுத்திருக்கும் பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம்வாழ்வும் பணிகளும் !

57. ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் அவரது மகள் சிவகாமியும் இணைந்து தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதிய சிந்துவின் தைப்பொங்கல் – Sinthu’ s Thai Pongal.

58. அ. யேசுராசா எழுதிய அங்குமிங்குமாய்….

59. சண்முகம் சபேசன் எழுதிய காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்.

60. ஞானம் 258 ஆவது இதழ் சிறுகதைகள்.

61. நூலகர் என். செல்வராஜா எழுதிய வீரகேசரியின் பதிப்புலகம்.

62. மருத்துவர் பஞ்சகல்யாணி எழுதிய அழகிய உலகம்.

63. அண்டனூர் சுரா எழுதிய பிராண நிறக்கனவு.

64. அ. முத்துக்கிருஷ்ணன் எழுதிய தூங்கா நகர் நினைவுகள்.

65. மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய அது ஒரு அழகிய நிலாக்காலம்.

66. ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் ரயில்.

67. கலைஞர் ஏ. ரகுநாதன் சிறப்பு மலர் – ஓர் ஒப்பனை இல்லாத முகம்.

68. மெல்பன் ‘சுந்தர்’ ‘ சுந்தரமூர்த்தி எழுதிய Dare to Differ.

69. ஆவூரான் சந்திரன் எழுதிய சின்னான்.

70. இ. தியாகலிங்கம் எழுதிய உறைவி.

71. முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு.

72. ஷோபாசக்தி எழுதிய ஸலாம் அலைக்.

73. சியாமளா யோகேஸ்வரன் எழுதிய கானல்நீர்.

75. நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு.

76. ராஜாஜி ராஜகோபலன் எழுதிய வழிப்போக்கனின் வாக்குமூலம்.

77. வித்துவான் வேந்தனார் எழுதிய குழந்தை மொழி.

78. ஜே.கே. எழுதிய என் கொல்லைப்புறத்து காதலிகள்.

79. கருணாகரன் எழுதிய வேட்டைத்தோப்பு.

80. கருணாகரமூர்த்தி எழுதிய பெர்லின் நினைவுகள்.

81. பேராசிரியர் அ. மார்க்ஸ் தொகுத்த கே. டானியல் கடிதங்கள்.

82. கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை எழுதிய  பாரதம் தந்த பரிசு.

83. ஸர்மிளா ஸெய்யத் எழுதிய உம்மத்.

84. எஸ். கிருஷ்ணமூர்த்தி எழுதிய மறுவளம்.

85. கே.எஸ். சுதாகரன் எழுதிய காட்சிப்பிழை.

86. சை. பீர்;முகம்மது எழுதிய பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும்.

87. கன்பரா  தமிழ் மூத்த பிரஜைகளின்  காவோலை.

88. தமிழ்  ஆவண  மாநாடு – ஆய்வுக்கட்டுரைக்கோவை.

89. பி. எச். அப்துல் ஹமீத் எழுதிய வானலைகளில் ஒரு வழிப்போக்கன் .

90. கானா  பிரபா  எழுதிய  பாலித்தீவு -இந்துத்தொன்மங்களை  நோக்கி.

91.   கே.எஸ். சுதாகரன் எழுதிய  சென்றிடுவீர்  எட்டுத்திக்கும்.

92. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய விழித்திருப்பவனின் இரவு.

93. நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம்.

94. வ.ந.கிரிதரன் எழுதிய குடிவரவாளன்.

95. பார்த்திபன் எழுதிய கதை.

96. சைனா கெய்ரெற்சி எழுதிய குழந்தைப்போராளி ( தமிழில்தேவா )

97. செ. பாஸ்கரன் எழுதிய முடிவுறாத முகாரி.

98. கலாநிதி செ. சுதர்சன் எழுதிய தாயிரங்குப்பாடல்கள்.

99. கருணாகரமூர்த்தி எழுதிய அனந்தியின் டயறி.

100. எம். வாமதேவன் எழுதிய நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின்மைந்தர்கள்.

101. ஜேம்ஸ் அகஸ்தி எழுதிய முகாமைத்துவமும் மனித மாண்பும் .

102. பேராசிரியர் சி. மௌனகுரு எழுதிய கூத்தே உன் பன்மை அழகு. – கூத்தயாத்திரை.

103. ரா. அ. பத்மநாபன் தொகுத்திருக்கும் சித்திர பாரதியும் கருத்துப்படங்களும் .

104.  ஜேகே எழுதிய கந்தசாமியும் கலக்சியும்.

105. செங்கை ஆழியான் எழுதிய யாழ்ப்பாணம் பாரீர் .

106. கவிஞர் அம்பி 90 மலர்

107. ஜெயமோகன் எழுதிய ஈழ இலக்கியம்.

108. நவஜோதி யோகரட்ணம் எழுதிய மகரந்தச்சிதறல்.

109. புஷ்பராணி எழுதிய அகாலம் .

110. பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி – அ. மார்க்ஸ் இணைந்து எழுதிய பாரதிமறைவு முதல் மகாகவி வரைபடித்தோம் சொல்கின்றோம் பத்தி எழுத்து மேலும் தொடரும்.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.