கட்டுரைகள்

ஈராக் -ஆப்கான் போரின் படிப்பினை: காசா போரில் இஸ்ரேல் கற்கும் பாடம் ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் குறைந்தளவு நில ஆட்சி அதிகாரத்தை கொடுக்க இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக இஸ்ரேலின் இருப்பு என்பது, மேற்குக் கரையிலும் காஸாவிலும் ஒரு நட்புள்ள சக்தியை உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது)

ஹமாஸுக்கு எதிரான போரில்இஸ்ரேல் வெற்றியடையலாம். ஹமாஸை அழித்ததின் பின், போரின்நீண்டகால வெற்றி என்பதுஅமைதியான எதிர்காலத்தை உருவாக்கவிரும்பும் பாலஸ்தீனியர்களுக்கு நிலஅதிகாரம் இஸ்ரேலால் அளிப்பதிலேயேதங்கி உள்ளது.

2005 இல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியதில் இருந்து, இதுவரை நான்கு பெரிய மோதல்களைக் கண்டுள்ளது. 2008, 2014, 2021 மீண்டும் இப்போதய 2023 காசா சண்டையை இரண்டாம் உலகப் போருக்கு ஒப்பிட்டு எதிர்நோக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தற்போதய போரில் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்ட முரண்பாடுகளை இஸ்ரேல் எதிர்கொள்கிறது. போரில் வெற்றியடைந்தாலும் அது கடினமான சங்கடத்தை வருங்காலத்தில் எதிர்கொள்ளும் எனவும், மேலும் இந்த அவசரமான போரிலிருந்து பல அபாயம் உள்ளது என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, இறுதியில் அதன் உள்நாட்டு அரசாங்கங்களை மீண்டும் கட்டமைக்க முயன்றபோது பலத்த சிக்கலில் சிக்கியது. இஸ்ரேலியர்களுக்கு இங்கே இதே போன்ற பிரச்சனை உள்ளது என்று இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸை முடிவுக்குக் கொண்டு வருதல்:

இஸ்ரேல் ஹமாஸை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து,அதில் வெற்றி பெற்றாலும், அதன் காசாவில் தலைமைத்துவத்தை மாற்றியமைப்பது மற்றும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதை தெளிவாக இஸ்ரேல் வெளிப்படுத்தத் தவறியுள்ளது.

ஆயினும் பல இஸ்ரேலியர்கள் ஹமாஸை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி நினைப்பதற்கு அப்பால், காசாவில் ஒரு நிச்சயமற்ற எதிர்காலம் உள்ளது என்பதை அறிகின்றனர்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கையின் படையெடுப்பு என்பு நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் காசா போர் அவசரமான

இஸ்ரேலின் போர் வெற்றிக்கு

இராணுவ மூலோபாயத்தில் இராணுவ வல்லுநர்கள் தவறிழைத்ததாக கூறுகின்றனர்.

உண்மையில் 9/11 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த போர்களில் இருந்து மிக முக்கியமான படிப்பினைகளை பலர் கற்க மறந்து விட்டனர். சண்டை முடிந்தவுடன் காசாவில் யாரிடம் பாதுகாப்பை வழங்கப் போகிறார்கள் என்பது இஸ்ரேலிடம் உள்ள மிகப்பெரும் கேள்வியாகும்.

காசா இராணுவ மயமாக்கல் :

இப்போரில் பல மசூதிகள் இடிக்கப்பட்டன. சாலைகள் உடைந்தன. அகதிகள் மையங்கள் இடிந்து விழுந்தன. மருத்துவமனைகள் இருளில் மூழ்கி, போதிய தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீன சிவிலியன் இலக்குகள் மீது

அதிக பலத்துடன் தாக்குவதால், ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் மிஞ்சியுள்ள ஒவ்வொரு ஹமாஸ் போராளிகளையும் அழித்து வரும் நிலையில், இஸ்ரேலின் விமானப் படை அந்த பகுதிக்கு எதிராக இடைவிடாத குண்டுவீச்சை நடாத்துகிறது.

ஹமாஸை முழுவதுமாக அழிப்பதே அவர்களின் நோக்கம் என்பதில் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெளிவாக உள்ளனர். ஆயினும் அதன் பின்னர் காசாவை யார் வழிநடத்துவார்கள் என்பது எவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.

அண்மையில் பிரதமர் நெதன்யாகு தன் ஆலோசகர்கள் மத்தியில் பேசுகையில் இஸ்ரேலிய துருப்புக்கள் ஹமாசை அழித்து, குறைந்தபட்சம் இராணுவமயமாக்கப்படும் வரை காசாவில் இருக்கும் என்று பரிந்துரைத்தார். இந்த செயல்முறை பல மாதங்கள் ஆகலாம் என்பதுடன், பாலஸ்தீன பொது மக்களால் ஆரம்பிக்கப்படும் கிளர்ச்சியை அவர்கள் எதிர்கொள்ளவும் கூடும்.

இஸ்ரேல் எவ்வளவு காலத்திற்கு காசாப் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கும் அல்லது இறுதியில் அவர்கள் அதை அமைதி காக்கும் படை அல்லது வேறு அதிகாரத்திற்கு மாற்றுவார்களா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

ஈராக் -ஆப்கான் அமெரிக்கப் போர் படிப்பினைகள்:

இஸ்ரேல் படைகள்( IDF) தனது ஹமாஸ் போரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர்களில் இருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்கிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

2003இல் ஈராக்கை ஆக்கிரமிப்பதன் விளைவுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை தனிப்பட்ட முறையில் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போரில் தெளிவற்ற வழிகாட்டலால் இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் போரின் இலக்குகள் என்ன என்பதை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் நிகழ்கின்றன. மேலும் நூறாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிப்பதாக நம்பப்படும் காசா நகரில் 30,000 ஹமாஸ் போராளிகளை தாக்குவதற்கு இஸ்ரேலிய துருப்புக்கள் நகரும் போது இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக ஏறும்.

விருப்பமான போர் அல்ல :

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் என்பது இஸ்ரேலுக்கு விருப்பமான போர் அல்ல எனவும் கூறப்படுகிறது. அக்டோபர் 7 தாக்குதல்களை தடுக்க, காசா மீதான ஹமாஸின் கட்டுப்பாட்டை ஒடுக்க இஸ்ரேலியர்கள் ஒருவித நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும்,

இஸ்ரேலியத் தலைவர்கள் தங்கள் ஹமாஸ் சண்டையை இரண்டாம் உலகப் போருடன் நேரடியாக ஒப்பிட்டுள்ளனர். பிரதமர்

நெதன்யாகு அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதல்களை 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குள் அமெரிக்காவை இழுத்த பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுள்ளார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் அமெரிக்கா எதிர்கொள்ளாத புவியியல் சவால்களை காஸாவில் இஸ்ரேல் எதிர்கொள்கிறது. இறுதியில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது அறிந்ததே.

அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் பிரதமர் நெதன்யாகு ஆற்றிய உரையில், 1945 ஆம் ஆண்டு போரின் முடிவில் பிரிட்டிஷ் குண்டுவீச்சு நடவடிக்கையை அவர் சுட்டிக்காட்டினார். ஆங்கிலேய விமானப்படை திட்டமிட்ட இலக்கைத் தவறவிட்டு பள்ளியைத் தாக்கியது. ஹமாஸ் இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களின் விளைவாக பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதை நியாயப்படுத்த நெதன்யாகு இரண்டாம் உலகப் போரில் மேற்கத்திய இராணுவ நடவடிக்கைகளை ஒப்பிடுகிறார்.

அது போர்க்குற்றம் அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமர் வாதிடுகின்றார்.

இரண்டாம் உலகப் போரில் 45 மில்லியன் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னரே போர் பிராந்தியங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்புகளை நிவர்த்தி செய்ய ஐநாவால் புதிய ஜெனிவா கோட்பாட்டை உருவாக்க வழிவகுத்தது.

பாலஸ்தீனியர்களுக்கு விரும்புவதைக் கொடுக்க வேண்டும்

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றியடையலாம்.

இஸ்ரேல் இந்த முரண்பாடுகளை முறியடித்து, ஹமாஸை அழித்து போரின் நீண்டகால வெற்றி என்பது அமைதியான எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலேயே தங்கி உள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் விரும்புவதைக் கொடுக்க இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக இஸ்ரேலின் இருப்பு என்பது, மேற்குக் கரையிலும் காஸாவிலும் ஒரு நட்புள்ள அரசை உருவாக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது சாத்தியமா எனும் கேள்விகளுக்கு அப்பால், இஸ்ரேலியர்கள் ஆக குறைந்தளவு அதிகாரத்தை பாலஸ்தீனியர்களுக்கு கொடுக்காவிடின், எதிர்காலத்தில் இது போன்ற போரும், வன்முறைகளும் தொடர்ந்து நிகழ சாத்தியங்கள் அதிகமாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.