கட்டுரைகள்

இலங்கை யாழ் கோட்டையும் அதன் தகவல் தடுமாற்றமும் ஏலையா க.முருகதாசன்

வரலாற்று நூல்களில் வரும் தகவல்கள்,தரவுகள் யாவும் உண்மையானவைதானா என்றசந்தேகம் வலுக்கத் தொடங்கிவிட்டது.

வரலாறு சம்பந்தப்பட்ட விடயங்களைச் சொல்பவர்களும் எழுதுபவர்களும் தமது மனம்போனபடி சொல்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.தம் இனத்தை,தம் மொழியை, தம் மதத்தை முதன்மைப்படுத்திச் சொல்லி பெருமைப்படடுக்கொள்வதற்காகவும்,பூரித்து நிற்பதற்காகவும் உண்மைகளை மறைத்து பக்க சார்பு கொண்டுஎழுதம் வரலாற்றாசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

எனது சரித்திர ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த சரித்திரச் சான்றுகளுக்கும்இப்பொழுது நான் அறிந்து கொள்ளும் தகவல்களுக்குமிடையில் வேறுபாடு இருப்பதைக் கண்டுஒரு தீர்க்கமான நிரூபணத்தக்காக நான் உண்மைகளைத் தேடி கல்வியாளர்களையும்அறிஞர்களையும் நாட வேண்டி இருக்கின்றது.

அண்மைக்காலமாக எனக்கு நன்கு அறிமுகமான ஆளுமைகளுடன் நான் கருத்த வேற்றுமைகொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை நல்ல பண்பு சான்றாகும்.வரலாற்று நேர்மை வேண்டும் என்பதைஆளுமையுடைய நண்பகர்கள் புரிந்து கொள்வார்கள் அதுதான் அறநாகரீகம் கொண்டதுஎன்பதை உணர்வார்கள் என்பதை நம்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் தமிழக்கொடி முகநூலில் சொல்லப்பட்ட,யாழ் கோட்டைபோர்த்துக்கீசரால் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்ட செய்தி அது சரியா என அறியபலருடன் தொடர்பு கொள்ள வைத்தது.

நான் கல்லூரியில் படித்ததற்கும் அக்காணொளியில் சொல்லப்பட்ட தவலுக்குமிடையில்வேறுபாடு காணப்பட்டதைக் கண்டேன்.உடனேயே அத்தகவலைச் சொன்ன நான் பெரிதும்மதிக்கின்ற பன்முக ஆளுமையாளரும் நவீன சிந்தனையாளருமான திரு:கே.எஸ்.துரைஅவர்களுக்கு நானறிந்த தகவலை அனுப்பிய போது அவர் இப்பொழுது கோட்டை இருக்கும்இடத்தில் முன்பு போர்த்துக்கீசரின் கோட்டை இருந்ததென்றும் அதனை ஒல்லாந்தார் அழித்துஅதில் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள் என்று விக்கிபீடியாவின் ஆதாரத்துடன்பதில் அனுப்பிளயிருந்தார்.அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

அதனோடு நான் நின்றுவிடாது யாழ் கோட்டையைக் கட்டியது யார் என பலரிடம் விசாரித்தபோது இப்பொழுது இருக்கும் யாழ் கோட்டை ஒல்லாந்தர் கட்டியதே பதிலைப் பலரிடமிருந்துபெற்றுக் கொண்டேன்.

எனது மனைவியிடமும் நீங்கள் படித்த போது இப்பொழுதிருக்கும் யாழ்ப்பாணக் கோட்டையையார் கட்டியதாக படித்தீர்கள் என்று கேட்ட போது அவரும் ஒல்லாந்தர் கட்டியதாகத்தான் தான்படித்ததாகச் சொன்னார்.

நான் படித்த போது எனது சரித்திர ஆசிரியர்கள் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதுஎன்றும்,அக்கோட்டை முதலில் காங்கேசன்துறையில் கட்டப்பட்டு அது இடிக்கப்பட்டு அந்தக்கற்களைக் கொண்டும் யாழ் கோட்டை கட்டப்பட்டதென்றும்,காங்கேசன்துறையிலிருந்து யாழ்கோட்டை வரையும் ஆட்களை நிரையாக நிற்க வைத்து ஒருவர் கை மாறி ஒருவர் கற்களைகடத்தினார்கள் என்ற செய்தியை சொல்லியிருந்தார்கள்;.

இச்செய்தி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.இதை வயல் வேலையின் போது எருக்கடகத்தையோ குப்பைக் கடகத்தையோ ஒருவர் தலை மாறி ஒருவர் எரு அல்லது குப்பைஅள்ளும் இடத்திலிருந்து வயலிருக்கும் இடத்திற்கு கொண்டு போவார்கள் அது போன்றதேகைமாறிக் கைமாறிக் கல் கொண்டு போவதாகும் என எண்ணினேன் அத சரியானதே.

இப்பொழுது இருக்கும் யாழ் கோட்டையைக் கட்டியது ஒல்லாந்தர்தான் எனத் திடமானமுடிவெடுத்த பின்னரும்கூட திருப்திப்படாமல் இது பற்றி இன்னும் கொஞ்சம் விவாரிப்போம்எனத் தீர்மானித்து நான் முதலில் தொடர்பு கொண்டது எனது நீண்ட கால நண்பரும் யாழ்பல்கலைக்:கழகத்தின் கலைப்பட்டதாரியுமான திரு.பாக்கியநாதன் அவர்களையே. அவருடன்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கோட்டையைக்கட்டடியது யார் என்று கேட்ட போது அவர் என்னுடைய கேள்வியை எதிர்பார்க்கவில்லையோஎன்னவோ தெரியாது நல்ல கேள்வி ஐந்து நிமிடத்தில் பதில் சொல்கிறேன் என்று சொல்லிதொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

சுமார் ஐந்து நிமடங்களுக்குப் பின்னர் தொலைபேசி அழைப்பு மூலமாகத் தொடர்பு கொண்டஅவர் யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டியது ஒல்லாந்தர் என்றார்,நானும் அப்படித்தான்படித்தேன் என்றேன்.

அதற்குப் பிறகு கனடாவிலிருக்கும் அண்ணையிடம் அதே கேள்வியைக் கேட்க அவர் சிலவிநாடிகளின் தாமதத்திற்குப் பிறகு அதைக் கட்டியது ஒல்லாந்தர் என்றவர் அங்கிருநு;தபோர்த்துக்கீசரின் கோட்டை போர்த்தக்கீசருக்கு எதிரான ஒல்லாந்தரின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டு முழுமையாக ஒல்லாந்தருக்கான பிரமாண்டமான கோட்டையைக்கட்டினார்கள் என்றவர் ,கொஞ்சம் பொறுத்து ரெலிபோன் எடு விபரமாகச் சொல்கிறேன்என்றார்.

அவரும் நானும் நீண்ட நேரம் உரையாடினோம்.யார் உனக்குச் சரித்திர ஆசிரியராக இருந்தவர்என்றார் நான் பன்னாலையைச் சேர்ந்த திரு.பொன்னையா மாஸ்ரர் என்றேன்.கொஞ்சம் பொறுத்து ரெலிபோன் எடுத்தேன் கூகுகிளில் தேடி அந்தக் கோட்டை ஆரம்பத்தில்போத்துக்கீசரால் கட்டப்பட்ட பின்னர் ஒல்லாந்தரால் முற்றுமுழுதாக அழித்துக் கட்டப்பட்டதுஎன்றார்.

ஜேர்மனியில் மண் என்ற பெயரில் சஞ்சிகை நடத்தும் திரு.வ.சிவராசா அவர்களிடம் விசாரித்தபோது அவரும் ஒல்லாந்தரால் கட்டப்பட்டது என்றதுடன் 2009 ஆண்டில் ஒல்லாந்தரசால்அக்கோட்டையின் திருத்த வேலைகள் இடம்பெற்றன என்றார்.அத்துடன் அவர் மேலதிகத்தகவலாக யாழ்ப்பாணம் மருத்துவமனையிலிருந்து தெற்குப் பக்கமாக மணிக்கூட்டு கோபுரவீதிச் சந்தியில் யாழ் மத்திய கல்லூரிக்கருகில்இருக்கும் மணிக்கூட்டுக் கோபுரம் பிரித்தானியர்இலங்கையை ஆட்சி செய்யும் போது அவர்களால் கட்டப்பட்டதென்றும் அவர்களும் அண்மையஆண்டுகளில் அதனைத் திருத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.(இந்த மணிக்கூட்டுக் கோபுரவீதியில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கும் மருத்தவமனைக்குமிடையில் வீதியின் கிழக்குப்புறத்திலேயே குரு;மபசிட்டியைச் சேர்ந்தவரும் வாடைக்காற்று திரைப்படத் தயாரிப்;பாளரும்மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் சிறந்த ஓவியருமான திரு.குகதாசன் கொழும்புஸ்ரூடியோ என்ற பெயரில் புகைப்படம் எடுக்கும் நிலையத்தை நடத்தியிருந்தார்.

பிறகு மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றவரும் சங்கீத ஆசிரியையும் இப்பொழுது எனது நகரில்உள்ள தமிழாலயத்தில் தமிழ்மொழி கற்பிப்பவருமான திருமதி.ஜிக்கி சோதிலிங்கம்அவர்களிடத்தும் விசாரித்த போது அந்தக் கோட்டையை ஒல்லாந்தரின் கோட்டை என்றுதான்சொல்வார்கள்,அந்த இடத்தில் முன்பு போர்த்துக்கீசரின் கோட்டை ஒன்றும் இருந்திருக்கிறதுபோல என்றார்.

திருமதி.நிவேதா உதயராயன் இட்ட கருத்துப் பதிவில் இதுவரை யாருமே அறிந்திராத ஒருதகவலைத் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் கோட்டை இருக்கும் இடத்தில் அல்லது அதைச் சுற்றியுள்ளஅயலில் போத்துக்கீசரால் கட்டப்பட்ட பெங்சூட்டர் என்ற பெயரிலும் பைல் என்ற பெயரிலும்;இரண்டு சிறு கட்டிடங்கள் கோட்டைகள் பெயர் கொண்டவையாக இருந்தன,அவைஇப்பொழுது இல்லை அவை அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இப்பொழுதிருக்கும் கோட்டைஒல்லாந்தருடையதுதான் என்பதான விரிவைச் சொல்கின்ற கருத்தொன்றை எழுதியிருந்தார்.

திரு.பொன்னையா புத்திசிகாமணி என்ற எழுத்தாளரும் யாழ்ப்பாணத்தில் இப்பொழுதிருக்கும்கோட்டை ஒல்லாந்தருடையதே என இறுதிக் கருத்தைத் தெரிவிந்திருந்தார்.

இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.எழுத்தாளரும் எனது முகநூல் நண்பருமானயாழ்ப்பாணம் கொழும்புத்துறையிலிருக்கும் திரு.அத்தனாஸ் யேசுராசா அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்ட போது அவர் அது ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை என்றதுடன் சிலஆண்டுகளுக்கு முன்பு ஒல்லாந்தரசே அக்கோட்டையின் திருத்த வேலைகளைச் செய்திருந்தனர்எனக் கருத்திட்டிருந்தார்.

இன்னும் விசாரிப்போம் என்று நினைத்த நான் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின்தலைவரான திரு.பொ.சிறீஜீவகனிடம் விசாரித்த போது அவர் அந்தக் கோட்டையைஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை என்றுதான் சொல்வார்கள் என்றார்.

பின்பு ஜேர்மனியில் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியவரும், குறும்படங்கள்,நாளையநாம் என்ற தொடர் நாடகம் போன்றவற்றை தயாரித்தவரும் இப்பொழுது நாளைய மாற்றம்என்ற முழுநீளத் திரைப்படத்தைத் தயாரித்து முடித்தவருமான திருமதி.சிபோஜி சிவகுமாரன்அவர்கள் ஒரு பதிவிட்டு அது தொடர்பாக நீண்ட நேரம் என்னுடன் உரையாடிய போது தான்கூகிளில் தேடிப் பார்த்த போது 1625இல் அதைப் போர்த்துக்கீசர் கட்டியதாக ஒரு தகவல்இருக்கிறது என்றார்,தொடர்ந்து எமக்கிடையில் உரையாடல் நீண்ட போது இப்பொழுதுவரலாறுகளில் (யாழ் ஒல்லாந்தர் கோட்டை பற்றியதைத் தவிர்த்து) எங்கு உண்மைஇருக்கிறது,எழுதுபவர்களும் ஒவ்வொருவரும் தமது மனப்போக்கில் நடுநிலையற்ற சார்புநிலையில் ஆதிக்க நிலைநின்று எழுதுகிறார்கள் என்றார்.

நான் படித்த போது யாழ்ப்பாணத்தில் இப்பொழுதிருக்கும் கோட்டை ஒல்லாந்தரால்கட்டப்பட்ட விபரத்தை அவரிடம் கூறினேன்.உரையாடலின் தொடரில் அவர் வியப்புக்குரியஇன்னொரு விடயத்தையும் சொன்னார்.

தான் பேர்லினில் சிறுமியாக இருந்த போது தயயார் தம்பியாருடன் தமிழ்நாட்டுக்குச் சென்றுஅங்கு ஒரு வருடம் படித்ததாகவும்,படிக்கும் போது ஆங்கில ஆசிரியை ஒல்லாந்து நாட்டைப்பற்றி விபரிக்கும் போது ஒல்லாந்து ஒரு தீவு என்று சொல்ல தான் அதை மறுத்து ஒல்லாந்துதீவல்ல என்று சொல்ல,உனக்கென்ன தெரியும் நீ சிறுமி நான் ஆசிரியை நான் எவ்வளவுபடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று அவர் கோபத்துடன் சொல்ல தானும் அவரும்வாக்குவாதப்பட்டு இறுதியில் அவர் பலரிடம் கலந்துரையாடிய பின் ஒல்லாந்து ஒரு தீவல்லஎன்பதை ஆசரியை ஒப்புக் கொண்டார் என்றார்.

மாணவியாக அங்கு கல்விகற்ற திருமதி.சிபோஜி சிவகுமாரன் மறுத்துப் பேசாதிருந்தால்மற்றைய மாணவர்கள் ஒல்லாந்து ஒரு தீவு என்று ஒரு குறிப்பிட்ட காலமாவது நம்பிக்கொண்டிருப்பார்கள்.

ஆக,இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரான 2099 இல் யாழ்ப்பாணக்கோட்டையை ஒல்லாந்தரசு திருத்திக் கொடுத்ததன் காரணத்தால் இப்பொழுதிருக்கும்யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தராலேயே கட்டப்பட்டது என்பது நிரூபணமாகிறது.போகிற போக்கில் வரலாறுகள் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சொல்லும் போது அதுவேஉண்மையாகி விடுவதும் உண்டு.எனவே தெளிவாகச் சொல்லப்படுதலே சிறப்பானதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.