கட்டுரைகள்

அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-91 விளம்பரம் தேடும் அரசியல் வேண்டாம் ………. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு எனும் அமைப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வடக்கு கிழக்குத்தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டி நூறு நாள் செயல் முனைவைமுன்னெடுத்து அதன் நிறைவு நாளன்று வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக,

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாதசமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுவேண்டும் எனும் கோரிக்கையை மக்கள் பிரகடனம்ஆக வெளியிட்டிருந்தது.

தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்று கடந்த எழுபத்தைந்து வருடங்களாக இந்தக் கோரிக்கைதானேமுன்வைக்கப்பட்டது. மட்டுமல்லாமல் எல்லாத் தேர்தல்களிலும் இந்தக் கோரிக்கையைஆதரித்துத்தானே வடக்கு கிழக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தும் வந்தார்கள்.

ஆனால், அந்த இலக்கு அடையப் பெறவேயில்லை. ஆனாலும், அந்த இலக்கை அடைவதற்கானஆரம்பப் புள்ளியாக 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பெற்ற13 ஆவது திருத்தம் அமைந்தது. அதனை அரசியல் அறிவுபூர்வமாகத் தமிழர் தரப்புபயன்படுத்தாமல் தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளியது போல அதனைஉதறித் தள்ளியது தமிழர் தரப்பின் தவறே தவிர, அதற்கு வேறு எவர் மீதும் விரல் நீட்டுவதுநேர்மையாகாது. இதனை இப்பத்தி ஏற்கனவே பல தடவைகள் விளக்கியுள்ளது.

நிலைமை இப்படியிருக்கும்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம்நடாத்திய நூறு நாள் செயல் முனைவும் செத்த பாம்பை மீண்டும் அடிப்பது போல அவ்வமைப்புச்செய்த மக்கள் பிரகடனமும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இவையெல்லாம் வெறுமனேவிளம்பரங்களே தவிர வேறில்லை.

இப்போது என்னவென்றால், 08.11.2023 அன்று யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில்,இலங்கையில் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சிக் (சமஸ்டி) கோரிக்கையின் தோற்றம்தொடர்பான கண்காட்சி மற்றும் வரலாற்றுத் தெளிவூட்டல் எனும் நிகழ்வினை மேற்படி வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு நடாத்தி,

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடன் வாழ முடியும்என ஊடகஅறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

இக்கோரிக்கை நியாயமானதுதான். இதனைத் தவறு என்று எவரும் கூற முடியாதுதான். ஆனால்இந்த இலக்கை நோக்கிச் சாத்தியமான வழிகளிலெல்லாம் முன்னேறக்கூடிய களச்செயற்பாடுகள்எதனையும் மேற்கொள்ளாமல், வாய்ப்பாடு போல காலத்திற்குக் காலம் இதனை மனப்பாடம்செய்யும் ஏட்டுச் சுரக்காய் செயல்பாடுகளால் எதுவுமே ஆகப்போவதில்லை. தமக்கானபொருத்தமான தீர்வுத் திட்டம் எதனையும் இந்த தமிழர் தரப்பு தலைமைகள் எந்தக் காலத்திலும்வென்றுதரமாட்டார்கள் எனத் தமிழ் மக்கள் எண்ணத்தலைப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்மக்கள் மத்தியிலே இவர்கள் மீதான நம்பிக்கையீனம் வலுப் பெற்றுக் கொண்டுவருகிறது.

வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கைகளும்தனித்தனியே அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்களின் எண்ணிக்கைகளும் மழைக்குமுளைக்கும் காளான்களைப் போல நாளொரு வண்ணமும் பொழுதொரு வகையிலும் கூடிக்கொண்டே வருகின்றனவே தவிர, வேறெதுவும் உருப்படியாக நடைபெறவேயில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் மீதும் தமிழ் அரசியல்வாதிகளின் மீதும் அவர்கள் எந்தக் கட்சியைச்சேர்ந்தவர்களாயினும் சரி மக்கள் நம்பிக்கையிழந்து சலிப்பும் விரக்தியும் வெறுப்புமுற்றேகாணப்படுகின்றனர்.

தமிழ் அரசியல் கட்சிகளினதும் அரசியல் சார்ந்த அமைப்புகளினதும் கூட்டுச் செயற்பாடு(Collective Action) மட்டுமே ஏதாவது பலனைக் கொண்டுவரும். அத்தகையதொரு செயற்பாட்டின்மீதுதான் மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.

நோயாளி ஒருவனுக்கு அளிக்கப்படும் முதல் உதவிச் சிகிச்சை போலப் 13 ஆவது திருத்தத்தைமுழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான யதார்த்த பூர்வமான அரசியல்அணுகுமுறைகளை அனைவரும் இணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடு மூலம் ஆரம்பிக்கவேண்டும். தேங்கிக் கிடக்கும் தமிழ்த் தேசிய அரசியலை ஓடச் செய்வதற்கு இவ் வாய்க்கால்வெட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

இதன் அடிப்படையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உடன் என்ன செய்யவேண்டுமென்றால், கடந்த 08.05.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13 ஆவதுதிருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான ஆலோசனைகள் அடங்கியவழிவரைபடத்தைக் கையளித்து அதனை நிறைவேற்றி வைப்பதற்கான பகீரதப்பிரயத்தனத்தில்கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் அமைதியாக உழைத்துக் கொண்டிருக்கும், அகில இலங்கைதமிழர் மகாசபையின் தலைவரான எந்திரி காசிலிங்கம் விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராககொண்ட அதிகாரப் பகிரவுக்கான இயக்கத்துடன் இணைந்து இயங்குவதற்கு மேற்படிவடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுஇதைய சுத்தியோடு களமிறங்க வேண்டும். வடக்கு கிழக்கில்உள்ள சிவில் அமைப்புகள் யாவும் இத்தகைய செயற்பாட்டில் சங்கமிக்கவும் வேண்டும்.இதுவொன்றே செயற்பாட்டுத் திறன் மிக்க மாற்று அரசியலொன்றினை மேலெழவைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.