கட்டுரைகள்
பாலியலும் மற்ற பேய்களும்!… 3 …. நெருக்கத்துக்கும் காதலுக்கும் இந்தியாவின் சிக்கலான உறவில் தேடல்!!… சங்கர சுப்பிரமணியன்.
மக்கள் பெறவேண்டிய பாலியல் கல்வி பெறும் சந்தர்ப்பத்தைக் களவாடுவதைத் தவிர்த்து அவர்கள் சொந்த உடலின் மேல் அவர்கள் சுய உரிமையை பெற்றிருக்க வகைசெய்தல் வேண்டும். சமூகமாக நாம் மனிதர்களை குற்றத்தையும் அவமானத்தையும் ஏற்று நடக்கவும் திட்டமிடாத அல்லது பலவந்தாக கருவுறும் அதிர்ச்சிக்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளோம். இந்த குறைபாடுகள் முடிவற்றவை!”
மக்களை பாலின உறவுக்கானவர்களாக மட்டும் பார்ப்பது இந்த சமூகம் எந்த அளவுக்கு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பதாக அரோரா என்பவர் கருத்து சொல்கிறார். ஆண்மையற்றவன் போன்ற வார்த்தைகள் அதிகப்படியான அழுத்தத்தை ஒருவரின் உடலுறவு செயல்திறனில் விளைவிக்கிறது. வார்த்தைகளைக் கொண்டு மொழிபெயர்ப்பது போதுமான ஆண்மை இல்லை என்பதாகும், ஆண்மையற்றவன் என்பது குடும்பத்தினரின் பழிச்சொற்களில் ஒன்று அல்லது உடலுறவு ஈடுபாடு சம்பந்தப்பட்ட பேச்சுவழக்கு சொல்லாகும். இதுபோன்ற பல சொற்கள் பெண்களின் பண்பிலும் பாலியல் நடத்தையிலும் கடுமையாக சுமத்தப்பட்டு எப்போதும் கண்டிப்பான சமூக கண்காணிப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரய்யன் (அவளும் மற்றவர்களும்) என்ற மும்பையிலுள்ள படைப்பாளியான திருநங்கை, இந்திய சமூகத்தால் பழக்கிய தீய வழிகளான வேறுபடுத்துதல் இயல்பான மனிதத்தன்மைக்கே எதிரானது என்கிறர். “பாரம்பரிய சமூகத்தில் பால்புதுமையினராக (Queer) வழ்வது, சமூகம் உங்களைப்பற்றி உங்களிடம் என்ன சொல்கிறது என்பதை நம்பி சுயவெறுப்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறீர்கள் என்று சொல்கிறார். உங்கள் பெற்றோர் உங்களிடம் “ஹிஹ்ரா(திருநங்கை)” என்றால் கெட்டவார்த்ததை என்று உங்களிடம் சொல்கிறார்கள், ஆங்கிலேயர்கள் வந்தனர் “ஹிஜ்ரா” எல்லோரும் குற்றவாளிகள் என்றனர், பாலிவுட் உங்களிடம் ஹிஜ்ரா என்றால் வில்லன்கள் என்றும் குழந்தையை கடத்துபவர்கள் என்றும் சொல்கிறது, கபில் சர்மா ஒரு ஹிஜ்ரா நபரைப் பர்த்து சிரிப்பது சரி என்று சொல்கிறார்.” மேலும் தன்னைத்தானே ஏற்றுக்கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கும்போது அன்பைத் தேடுவதும் அர்ப்பணிப்பும் பலருக்கு மிகவும் அதிக சவாலாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். வடக்கு கொல்கொத்தாவிலுள்ள சோனாகாச்சி என்ற ஆசியாவிலேயே பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று பெருமைப் பட்டுக் கொள்ளமுடியாத பகுதியிலுள்ள பாலியல் தொழிலாளிகளின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக தர்பார் மகிள சமன்வாய கமிட்டியின் தொடர்பு அதிகாரியான மகஷ்வேதா முகர்ஜி தனது இருபத்து நான்கு ஆண்டு அனுபவத்திலிருந்து இவ்வாறு சொல்கிறார். பௌதிபாஜி (பெங்காலி பேச்சு வழக்கில் மைத்துனன் மைத்துனியருக்கு இடையே உறவுவைத்துக் கொள்வதை குறிக்கும் சொல்) மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் மனைவிகளையும் காதலிகளையும் தற்காலிகமாக மாற்றிக் கொள்வதை ஏற்றுக் கொள்வதை சொல்லி ஆச்சரியப்படுகிறார். “கோடிக்கணக்கில் பெண்கள் இத்தொழிலில் வாழ்கிறார்கள். அவர்களின் சேவைக்கு பெரிய தேவை இருக்கிறது. பாலியல் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கான புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் பொறுப்பு” என்று மேலும் மறுக்காமல் எதிரொலிக்கிறா். நல்லொழுக்கத்துடன் வாழும் மனிதனுக்கு இதுதான் உண்மையின் சுவையை உணர்த்தும் நேரம். ஷ்ரேயா அவரது வார்த்தைகளில், “நாட்டிலுள்ள மக்கள் இந்த மக்களை கடவுளின்பரிசு அல்ல என்று ஏற்றுக் கொள்ளும்படியான கெட்ட நேரம் என்பதே இது. மனிதர்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அதை கடந்து செல்லுங்கள்” என்கிறார்.(முற்றும்)
-சங்கர சுப்பிரமணியன்.