கட்டுரைகள்
பாலியலும் மற்ற பேய்களும்! … 2 …. -சங்கர சுப்பிரமணியன்.
நெருக்கத்துக்கும் காதலுக்கும் இந்தியாவின் சிக்கலான உறவில் தேடல்…
Q என்ற படத்தயாரிப்பாளரின் Love in India என்ற பெயருடன் 2009ல் வெளிவந்த ஆவணப்படத்தில் பழமைவாத இந்திய சமூகத்தில் காதலும் பாலுணர்வும் ஏற்படுத்திய முரண்பாடான வலைச்சிக்கலை பற்றிய ஆய்வு, தொன்னூறுகளில் இந்தியாவின் சிறந்த பண்பாட்டின் பிரதிபலிப்பு மற்றும் தொலைக்காட்சி நிக்ழ்ச்சிகள் ஏற்படுத்திய மாற்றத்துக்கு பழமைவாதத்தை முழுமையாக உயர்த்தும் பொறுப்பைக் காட்டியுள்ளது. மாமியார் மருமகள் தொடரிலிருந்து (தொலைக்காட்சி-கொல்கொத்தா) தொகுப்பாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் (விவாதம்) வரை கடைப்பிடிக்க முடியா முழுமையான ஆணாதிக்க முடிவுகளை ஏற்பதால் அது மற்ற எவருக்கும் இடமளிப்பதில்லை என்கிறார் இவர். இந்தியக் காதலின் எதிர்காலம் இருண்டிருக்கிறது என்று சொல்கின்ற இவர், “வங்காள மறுமலர்ச்சிக் காலம், இந்திய விடுதலை காலம் காமசூத்திரம் மற்றும் பொது நம்பிக்கையாய் இருந்த புராணகால பழைய இந்தியா இவையெல்லாம் வரலாற்றில் ஆணாதிக்க உச்ச கட்டமைப்பில் இருந்த வெவ்வேறு காலங்கள் என்று மேலும் கூறுகிறார். இந்தியாவில் பாலியலைச் சூழ்ந்த கபடத்தனம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வில் மிகவும் அசிங்கமானதாக இருப்பதாக இந்திய பாலியல் தொழிலாளிகளின் பெரிய அமைப்பான “தர்பார் மகிளா சமன்வய கமிட்டியின் தலைவரும் 48 வயதான பாலியல் தொழிலாளியுமான பிஸாகா லஸ்கர் கூறுவதாவது, “எனது கணக்கின்படி எங்கள் வாடிக்கையாளர்கள் அதிக சதவிகிதத்தினர் திருமணமானவர்களே. இந்த ஆண்கள் மகிழ்வோடு திருமணமானவர்கள் ஆனால் ஆனால் உடலுறவில் நிறைவடையாதவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் தற்காலிகமாக ஆர்வமற்றவர்களாக அல்லது முறையற்ற பாலுறவில் ஈடுபட்டிருப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒளிவு மறைவற்ற உண்மை. எல்லோரும் அறியும்படி தெருவில் என் தொழிலுக்காக நிற்கும்போது மட்டும் இந்த மனிதர்கள் என் தொழிலுக்காக என்னை இகழ்ந்து கேலி செய்கிறார்கள். இன்பம் தேவைப்படாததோடு பெண்களை இரண்டாந்தர குடிமக்களாக கருதும் சமூகத்தின் ஆணாதிக்க பார்வை மேலும் அவர்களின் இனத்தை இழிவுபடுத்துவதாக அவர் கூறுகிறார். “ஒரு பெண் பாலியலை வியாபார நடவடிக்கையாக்கும்போது பணம் ஆணிடமிருந்து பெண்ணிடம் செல்லும் எல்லா எதிர்பாராத அவலங்களும் நடக்கிறது.” இங்கு வகுப்பபேத நிலைப்பாடும் கூட இருக்கிறது. நடுத்தர வகுப்பு, கீழ்நிலை நடுத்தர வகுப்பு மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து வருகிறவர்களின் சிரமத்தைப்போல சமூகத்தின் பணக்கார வகுப்பினருக்கு அந்தரங்கத்தை பாதுகாப்பதில் அவ்வளவு சிரமமில்லை. படித்தவர்களும் பணக்காரர்களும் இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்று பங்கேற்று சுதந்திரமாக இணைவார்கள். அப்போது கலங்கமும் அவமானமும் எங்கே போனது? என்று மஹஸ்வேதா முகர்ஜீ என்ற தர்பாரின் தொடர்பு அதிகாரி கேட்கிறார். ஒதுக்கப்பட்ட சமூகங்களி்ல் இருந்து வருபவர்களுக்கு நடைமுறை கடினமாக உள்ளது. பழங்கால சிற்பங்களும் சுவர்ச்சித்திரங்களும்கூட ஒரினச் சேர்க்கையை அந்த பொற்கால நாட்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நமக்கு சொல்கிறது. விருப்பமுடன் ஈடுபட்ட ஓரினச்சேர்க்கை நவீன இந்தியாவில் 2016வரை ஒரு குற்றமாக பார்க்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையை சாதாரணமாக ஏற்றுக் கொள்வதற்கான முக்கிய விவாதங்களில் ஒன்று அதனால் குழந்தை உண்டாவதில்லை என்பதுதான். ஷ்ரேயா என்பவரைப் பொறுத்தவரை (அவளுக்கும் மற்றவர்களுக்கும்), “LGBTQ (Lesbian, Gay, Bisexual, Transgender and Queer) சமூகத்துக்குள் காதலை வெளிப்படையாகச் சொல்லவும் பெருமைப்படவும் பல ஆண்டுகளாக சிரமமாகவே இருந்தது. உண்மையில் நாங்கள் பயமுறுத்தபட்டதுடன் சமீபகாலம்வரை சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தோம். மக்களால் தொடர்ந்து மாயமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு இன்னும் எவ்வளவோ நடக்கிறது ஏனென்றால் இயல்பாக இருப்பதுதான். எந்த உலகத்தில் இது சரியாக இருக்கும்? ஷ்ரேயா ஒரு இருபாலினம் என்பதோடு மும்பையில் புகைப்படக்காரராகவும் இருக்கிறார். பாலின கல்வி இல்லாததால் நாடு எந்த அளவுக்கு மிகவும் வெறுக்கத்தக்க பாலியல் குற்றங்களை எதிர்நோக்கியுள்ளது என்றும் மக்களை கோபப்பட வைப்பதுடன் இளைஞர்களையும் குழப்பியுள்ளது என்றும் கூறுகிறார். (தொடரும்) -சங்கர சுப்பிரமணியன்.