படைப்பாளிகள்
அண்டனூர் சுரா …. படைப்பாளி …. இந்தியா.
எழுத்து அறக்கட்டளை – சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு – 2021 ஆம் ஆண்டுக்கான நாவல் போட்டியில் ‘அன்னமழகி’ எனும் நாவலுக்காக உரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசு பெற்ற அண்டனூர் சுராவின் படைப்புகள் மற்றும் விருதுகள் பற்றிய சிறுகுறிப்பு
அண்டனூர் சுரா
இயற்பெயர் சு.இராஜமாணிக்கம் அண்டனூர், கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம். கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது படைப்புகள்.
சிறுகதைத் தொகுப்புகள் – எட்டு
மழைக்குப் பிறகான பொழுது – சிகரம் விருது
திற – தமிழ்நாடு அரசால் தெரிவு செய்யப்பட்ட நூல். கம்பம் பாரதி இலக்கியப் பேரவை.
ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – கவிதை உறவு விருது, நாங்கள் இலக்கியப் பேரவை விருது, நெருஞ்சி இலக்கிய விருது
பிராண நிறக் கனவு – தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, கவிதை உறவு விருது, படைப்பு விருது, மக்கள் மானுட பண்பாட்டு விருது
எண் வலிச் சாலை
எத்திசைச் செலினும் – முதலமைச்சர் விருது
தடுக்கை – சௌமா விருது
குரலி
நாவல்கள் – நான்கு
முத்தன் பள்ளம் – கரூர் திருக்குறள் பேரவை விருது, என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, பயணம் இலக்கிய இதழ் விருது, கணையாழி இதழ் விருது.
அப்பல்லோ – படைப்புத் தகவு விருது
தீவாந்தரம்
அன்னமழகி – எழுத்து அறக்கட்டளை விருது
குறுநாவல்கள் – மூன்று
கொங்கை – உலகளாவிய குறுநாவல் போட்டியில் விருது
முதல் வகுப்பு பொதுத் தேர்வு,
நீளநடுக்கோடு – ஸீரோ டிகிரி எழுத்து விருது
கட்டுரைத் தொகுப்பு – ஐந்து
முட்டாள்களின் கீழ் உலகம் – கவிதைஉறவு விருது
அழிபசி தீர்த்தல் – சேலம் தமிழ்ச்சங்கம் விருது
சொல்லேர் – பொதிகைத் தென்றல் இலக்கிய விருது
ஒரு நாடிலியின் பாதக்குறிப்புகள்
இனமொழி பதில்கள்
என இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இதுதவிர இவரது சிறுகதைகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளன. இவரது திற என்கிற சிறுகதைத் தொகுப்பு புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கதைகள் தனியார் கல்லூரிகளில் பாடமாக இடம் பெற்றுள்ளன.