14-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு
என்.ஆர்.புரா அருகே 14-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கல்வெட்டு கண்டெடுப்பு சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஜெயபுரா அருகே உள்ள உத்தமேஸ்வரா கிராமத்தில் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இது குறித்து மைசூரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சுரேஷ், கல்லங்கடி என்பவரின் தலைமையில், உத்தமேஸ்வரா கிராமத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த கிராமத்தில் இருந்த சாலையோரம் 14-ம் ஆண்டு நூற்றாண்ைட சேர்ந்த சிற்ப கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்ப கல்லை பார்த்த ஆராய்ச்சியாளர்கள், உடனே அதை வெளியே எடுத்தனர். பின்னர் அந்த சிற்ப கல்லை ஆய்வு ெசய்தனர். அதில் அந்த கல்வெட்டு 14-ம் நூற்றாண்டை சேர்ந்த திம்மன்னா நாயக்கரின் காலத்தில் உள்ளது என்று தெரியவந்தது. அவரது வரலாற்றை குறிக்கும் வகையில் சில, அடையாளங்கள் அந்த கல்வெட்டில் இருந்தது.
14-ம் நூற்றாண்டை சேர்ந்தது அதாவது அந்த கல்வெட்டில் 2 யானைகள் சிவனுக்கு பூஜை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் சில கன்னட எழுத்துக்கள் மற்றும் மரணமானவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது போன்று சில உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பங்கள் மற்றும் அதில் இருக்கும் கன்னட எழுத்துகளை பார்க்கும்போது, அங்கு பழங்காலத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சுரேஷ் கூறும்போது:- 14-ம் ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு இது. இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அதே நேரம் கல்வெட்டுகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் வரலாறும் உள்ளது. இதனால் அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளோம். ஆராய்ச்சிக்கு பின்னர் கல்வெட்டு குறித்த வரலாறு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.