6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்!
உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய விலங்கு டைனோசர். இந்த டைனோசர் பற்றிய சினிமா சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த டைனோசர் பற்றிய செய்திகளுக்கோ, மர்மங்களுக்கோ முடிவேயில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
உலகின் சில பகுதிகளில் டைனோசர் முட்டைகள், எலும்புகள் உள்ளிட்டவை அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இவை பத்திரமாக ஆராய்ச்சி மற்றும் அருங்காட்சியங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.
![]()