13க்கும் மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள்  கூட்டாக அறிவித்துள்ளனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகள் 13ஆம் திருத்திற்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button