நடிகர் விஜய் சங்கீதாவின் விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி!

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் நடிகராக இருந்து வருகிறார். உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களுக்குச் சொந்தக்காரர்.

விஜய் சங்கீத என்ற ரசிகை ஒருவரை தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். சில நாட்களாக விஜய் தனது அப்பா அம்மாவுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறார். அவர்களது பிறந்தநாளில் கூடச் சென்று சந்திப்பதில்லையெனச் செய்திகள் வெளியானது.

அதையடுத்து நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பெரும் பிரச்சனை நிலவி இருவரும் விவகாரத்து செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியது. மேலும் விஜய் கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாகப் பழகி வருவதகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் வதந்திகள் வெளியானது.

ஆனால், இதெல்லாமே பொய் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். இருவரும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள். சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லையெனக் கூறி சர்ச்சைக்கு முடிவுகட்டியுள்ளார்.

 

https://www.youtube.com/watch?v=TycA1WdJxHc&t=3s

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button