வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் வெளியாகும் ஷாருக் கானின் பதான் திரைப்படம்!

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் எந்தவொரு படத்துக்கும் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button