இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த தனது மகளுக்கு பொருந்தாத தனது சிறுநீரகத்தை?…
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த தனது மகளுக்கு பொருந்தாத தனது சிறுநீரகத்தை இன்னொருவருக்கு தானம் செய்த இங்கிலாந்தின் “அர்வோன்” எனும்
70 வயது தந்தை.
கதையல்ல உண்மை.
19 வயது அவரின் ஒரே மகள் “செரின்” இளம்வயதில் தன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து
ஒவ்வொரு இரவு 10 மணித்தியாலங்கள்
” டயலாசிஸ்”( Dialysis) எனப்படும் ரத்தம்
தூய்மை மாற்றும் சிகிச்சை செய்து வந்தார்.
இதை சகிக்க முடியாத தந்தை, தனது சிறுநீரகத்தை மகளுக்கு தானம் வழங்க
விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அவரது சிறுநீரகங்கள் மகளுக்கு பொருந்தவில்லை என்பது பெரும் ஏமாற்றமாக இருந்தது.
என்ன அதிர்ஷ்டம் சென்ற 2022 நத்தார் நாளில், தானம் வழங்கும் நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.
சிறுநீரக தானம் ஒன்று வழங்கியது , மகளுக்கு பொருந்துவதாக …
நத்தார் பரிசாக தனது மகளின் வாழ்வில்
கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த தந்தை
என்ன செய்தார் என்பதே இந்த பதிவின்
மனிதநேய பண்பான கருவாகும் .
அது, தான் தன் மகளுக்காக தனது எந்த சிறுநீரகத்தை தானம் வழங்க இருந்தாரோ , அது பொருந்த கூடிய இன்னொரு சிறுநீரக இளைஞன் ஒருவரின் உயிரை காப்பாற்ற தானம் வழங்கியுள்ளார் 2023 இன் புத்தாண்டு
பரிசாக .
சுயநலம் ஓங்கிய உலகில் மனிதநேயம்
ஆங்காங்கே வாழ்வது உண்மை.
![]()