என்னப்பா சொல்றீங்க…! ரஞ்சிதமே பாடலுக்கு கர்ப்பிணி வயிற்றிலுள்ள வாரிசும் கூட நடனம்…!
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.
தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியாது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. குடும்ப பொழுது போக்காக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது.
சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=zuVV9Y55gvc&t=1s
ரஞ்சிதமே பாடல் வீடியோ யூடியூபில் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் அதிரடியாக நடனமாடியுள்ளார் விஜய். இந்தப் பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள், குழந்தைகள்கூட நடனமாடுகிறார்கள். குழந்தைகள் நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்து, “வாரிசு பிளாக் பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.
![]()