யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை  அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை அகழ்வு செய்யும் பணி இன்றைய தினம்  திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி , ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள  இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு , அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button