’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது.

அந்த வகையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த வீடியோவை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button