செய்திகள்

வரலாற்றில் முதல்முறையாக உலக கிண்ண போட்டியில் களம் இறங்கும் பெண்கள்!

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி – கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார்.

இந்த பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் ( Stephanie Frappart) பெற்றுள்ளார்.

இவருக்கு துணையாக, பிரேசிலை சேர்ந்த (newsa back ) நியூசாபேக் மற்றும் மெக்சிகோவை சேர்ந்த (karen dias medina) கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.

வரலாற்றில் முதல்முறையாக உலக கிண்ண போட்டியில் களம் இறங்கும் பெண்கள்! | Football World Cup History As First Woman Referee

இந்த தகவலை, உலகக்கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *