உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து இதுதான் – எந்த நோயுக்கான சிகிச்சை தெரியுமா..!
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது.
இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலே மாத்திரை போடும் அளவிற்கு வாழ்க்கை தரமும், வாழும் சூழலும் மாறியுள்ளது.
வேலையில் அதிக பளு, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட பலர் உறங்கும் முன் மாத்திரையோ அல்லது மருந்தோ எடுத்து வருகின்றனர். பெரிய சிகிச்சைகளுக்கும் மருந்துகள்தான் மூலப்பொருட்களாக உள்ளன.
இப்படிப்பட்ட மருந்துகளின் விலையும் குறைந்தபாடில்லை. சிகிச்சை மற்றும் அதற்கான பயன்பாட்டின் அளவு குறித்து மருந்துகளின் விலை மாறுபடுகிறது .
இந்நிலையில் உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை வெளிப்படையாகியுள்ளது.
முதுகெலும்பு தசைச் சிதைவு நோயான ஹீமோபிலியாவுக்கான மருந்து ஹெம்ஜெனிக்ஸ் விலை உயர்ந்த மருந்து ஆகும்.
இந்த மருந்தின் ஒரு டோஸுக்கு 3. 5 மில்லியன் டொலர் செலவாகும் என தெரிவிக்கப்டுகிறது.
இது உலகின் மிக விலையுயர்ந்த மருந்தாக கருதப்படுகிறது.