ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதம்!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ரசிகரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு ரூ50 லட்சம் அபராதமும் 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத்தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பால்