புரூஸ் லீ உயிரை பறித்த தண்ணீர் – அதிகளவு தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!
தற்காப்பு கலை ஜாம்பவான் மற்றும் பிரபல நடிகரான புரூஸ் லீ தனது 32வது வயதில் உலகிலிருந்து விடைபெற்றார். இப்போது புரூஸ் லீ மரணம் குறித்து ஆச்சரியப்படும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் ஒரு புதிய ஆய்வில், புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். நடிகர் புரூஸ் லீ ஜூலை 1973 இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார்.
அப்போது, வலிநிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்பினர். ஆனால் புரூஸ் லீ மரணத்திற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிவந்த புதிய ஆய்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, நடிகர் புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புரூஸ் லீயின் மரணத்திற்கு ஹைபோநெட்ரீமியா காரணமாக இருக்கலாம்.சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இறந்ததாக கூறுகிறது.
அப்படியானால், அதிகமாக தண்ணீர் குடிப்பது எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தண்ணீர் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி நமது சருமம் மற்றும் கூந்தலுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதிக தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இது மட்டுமின்றி, மரணத்தை கூட ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான தண்ணீர் குடிப்பது உடலில் சோடியத்தின் அளவைக் குறைக்கிறது, இது சிறுநீரகத்தை பாதிக்கிறது மற்றும் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள இந்த நிலை ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்தும், இதன் காரணமாக மரணமும் ஏற்படலாம். இதைத் தவிர அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் வீக்கம் ஏற்படும். அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த பிரச்சனையின் பல அறிகுறிகள் உள்ளன, அதாவது சோர்வு, வயிற்று வலி, வாந்தி போன்றவை.
இந்த பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்கொண்டால், அது அதிகப்படியான நீரேற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம். அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். லீயின் மனைவி லிண்டா, லீ உட்கொள்ளும் உணவை பற்றி குறிப்பிடுகையில், அதிகம் கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் எடுத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘புரூஸ் லீ: எ லைப்’புத்தகத்தின் ஆசிரியர் மேத்யூ பாலி, லீ ஒருநாளில் அடிக்கடி தண்ணீர் அருந்துவதை பதிவு செய்துள்ளார். மருத்துவ அறிக்கையின்படி, போதைப்பொருள்(கஞ்சா), மருந்துகள், உப்புக்குறைவு, கிட்னி செயலிழப்பு, அதிக உடற்பயிற்சி போன்ற காரணங்களும் அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக, அவரது உடலில் எடுத்துக்கொண்ட தண்ணீரின் அளவு சிறுநீராக வெளியேற்றப்படவில்லை, புரூஸ் லீ ஒரு குறிப்பிட்ட வகை சிறுநீரக செயலிழப்பால் தான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.