உலகக் கிண்ணப் போட்டிக்கான சுமார் 3 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன… பெறப்பட்ட வருமானம்…?
உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெறும் ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனையிலிருந்து சுமார் 7.5 பில்லியன் டாலர் பெறப்பட்டது என்று FIFA எனும் அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆட்டத்தின் முதல் நாளான நேற்றுவரை (20 நவம்பர்) மொத்தம் 2.95 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாயின.
போட்டி 29 நாள்களுக்கு நீடிக்கும். அதில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறும்.
போட்டியை ஏற்றுநடத்தும் கத்தார் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளைக் காட்டிலும் உலகக் கிண்ணப் போட்டி மக்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
டோஹாவில் இருக்கும் FIFA நிலையத்தின் வெளியே கூட்டம் கூடியுள்ளது. மக்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு நீண்டவரிசை பிடித்தவண்ணம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் விற்பனையான மொத்த நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை கத்தார் ஏற்கனவே மிஞ்சிவிட்டது.
ரஷ்யாவில் மொத்தம் 2.4 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாயின.