செய்திகள்

இந்திய அணியை தோற்கடித்தால்…’ பாக்., நடிகை விபரீத சவால்

‘டி – 20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ”இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால், அந்நாட்டை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ளத் தயார்,” என பாகிஸ்தான் நடிகை சிஹார் ஷின்வாரி தெரிவித்துள்ளது, கடும் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

‘டி – 20’ எனப் படும், 20 ஓவர்கள் கிரிக்கெட்டின் உலகக் கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

சமீபத்தில், பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், பாக்.,கை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது.

இதையடுத்து போட்டி தொடரில் இருந்து சீக்கிரமே வெளியேறும் நிலைக்கு பாக்., அணி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா – ஜிப்பாப்வே அணிகளுக்கு இடையிலான, டி – 20 போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

இதில், என்றும் இல்லாத அதிசயமாக ஜிம்பாப்வே அணி இந்திய அணியை தோற்கடித்துவிட்டால், ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என, பாக்.,கைச் சேர்ந்த நடிகை சிஹார் ஷின்வாரி என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டி – 20 போட்டி தொடர்பாக இவர் வெளியிட்ட பல்வேறு பதிவுகளும் நேருக்குமாறாக நடந்துள்ளதை அடுத்து நடிகை ஷின்வாரியை சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *