செய்திகள்பலதும் பத்தும்

திக்…திக்…! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்…? நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகள்

உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான தீர்க்கதரிசனங்கள் ( The Centuries) என்பதில் கவிதை வடிவில் எழுதி வைத்து உள்ளார்.465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது,லண்டன் தீ விபத்து என்று பல நூறு விஷயங்களை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார். அதுபோல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து இவர் கணித்து உள்ளார். மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில், பெரும் அதிகாரம்கொண்ட பெண்மணி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார்.

தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே அவர் 67-ம் வயதில் கொல்லப்படுவார். நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது இது நடக்கும்’ என்று கூறியிருக்கிறார் நாஸ்ட்ர்டாம்ஸ்.

எமர்ஜென்ஸியால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984-ம் ஆண்டில் அவர் சொந்த பாதுகாவலரால்சுடப்பட்டதையும் இது குறிக்கிறது. இந்த நிலையில்தான் 2022ல் நடக்க போகும் விஷயங்கள் என்று இவர் கணித்ததாக இவரின் கவிதைகளில் இருந்து முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளது. அதன்படி 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்கும்.

தீ பிளம்பு போன்ற.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கல் பூமியை தாக்கும். இதனால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022 ஆம் ஆண்டில், பெரிய வானியல் நிகழ்வு நிகழும். அடுத்த ஆண்டில், ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள் ஒன்று, மிக அதிக வேகத்தில் வந்து பூமியைத் தாக்கும். அந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும். அந்த சிறுகோளின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமி உருவாகும். எனவே, கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என கணிக்கபட்டு உள்ளது.

அதேபோல் 2002ல் ஏற்பட்டது போல மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்படும். இதனால் பஞ்சம் ஏற்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு அதலபாதாளத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய புயல், வெள்ளம் ஏற்படும். இதனால் எதிர்பாராத அழிவு ஏற்படும் என கூறி உள்ளார். அதுபோல் இந்த் ஆண்டிற்கான அடுத்த 60 நாட்களுக்கு பெரிய ஆபத்துகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஆண்டு அணு ஆயுதம் வெடிக்கும் என்று நாஸ்ட்ர்டாமஸ் தனது கணிப்பில் கூறியது குறித்து கவலை ஏற்படுத்தி உள்ளது. அணு ஆயுத போர் வேற்பட்டால் நிலைமையில் கடும் மாற்றம் ஏற்படும். புவி வெப்பமயமாதலால் பூமியும் மில்லியன் கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள். இது நடந்தால், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் ஏற்படும். நாஸ்ட்ர்டாமஸ் கணிப்பில் “மூன்றாம் உலகப் போர் சுமார் 7 மாதங்கள் நீடிக்கும். இதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். பூமியின் வரைபடத்தில் பல நாடுகள் மறைந்துவிடும், மீதமுள்ள மக்கள் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என கூறி உள்ளார்.

நாஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும். அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும். அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்றுவிடும். மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது, நவீனத்துவம் முடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் என கூறி உள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.