உளவு நிறுவனங்கள்!… (தொடர் 33)….. மௌனஅவதானி.
உலகை புரட்டிப் போடும் பெரும் சக்தியாக இருப்பவர்கள் மிகவும் நுண்ணறிவு கொண்ட ஊடகவியலாளர்களே.
இத்தகு ஊடகவியலாளர்களை உளவு நிறுவனங்கள் தமது சதி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தத் தவறுவதே இல்லை.
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் சமூகம் அரசியல் சார்ந்த விடயங்களில் மட்டுமே ஆயந்தறிந்து கருத்துக்களை வெளியிடுபவர்களாக இருந்தார்கள்.
பத்திரிகைகளில் வெளிவரும் இத்தகு கட்டுரைகளை வாசிப்பதில் ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.தமதுஆட்சியில் உள்ள தவறுகளை நிர்வாகத் திறமையின்மை போன்றவற்றை சுட்டிக்காட்டுதல் போன்ற ஊடகவியாளர்களின் கட்டுரைகளில் சொல்லியவற்றை உற்றுநோக்கி தவறுகளைத் திருத்திய ஆட்சியாளர்களும் உண்டு.
அதே வேளை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்த முடியாதவற்றைகூட அது தெரிந்தும் அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசின் அசமந்தப் போக்கினால்தான் பொருளாதாரப் பின்னடைவுகள், வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக மக்களை அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதிலும் ஊடகவியலாளர்களின் பெரும்பங்கு இருக்கவே செய்கின்றது.
உளவு நிறுவனங்கள் தமது ஒற்றர்களை பத்திரிகை நிறுவனங்களில் நியமித்துவிடுகின்றனர்.இந்த ஒற்றர்கள் பெரும்பாலும் ஊடகத்துறையில் கல்விகற்றவர்களாக மட்டும் இருந்துவிட மாட்டார்கள்.
மிகுந்து நுண்ணறிவாளர்களாக இருப்பார்கள்.ஆரம்ப காலங்களில் ஊடகவியலாளர்கள் சமூகம் அரசியல்: ஆகிய இரண்டு விடயங்களில் மட்டுமே அது தொடர்பான கல்வியையும் அது சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு தமது கருத்துக்களை பத்திரிகை வாயிலாக தெரிவித்து வந்தனர்.
ஆனால் சமகால ஊடகக் கல்வியென்பது பல்வேறுபட்ட கிளைக் கல்விகளாகவும், அக்கிளைக் கல்விகள் நுண்ணறிவுடன் உற்றுநோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்கி வருகின்றது.
இன்றைய ஊடகவியலாளர்கள் ஒரு நாட்டின் மக்கள் குழுமத்திலிருந்து தனி அலகான தனி மனிதனை அவன் அனுபவிக்கும் தேவைகளை இன்றியமையாதவையாக்கி அதிலிருந்து அவனை விலகிப் போகாது இழுத்து வைத்துக் கொண்டு பின்னர் அதனால் ஏற்படும் சாதக பாதக விளைவுகளை அந்த நாட்டின் நிர்வாகத்தையே சிதைக்கும் அளவுக்கு அவர்களுடைய கருத்துக்களை பத்திரிகைகளில் சொல்லிவிடுகின்றனர்.அதாவது ஒன்றின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவதும் இதில் இசைவாக்கமாகிப் போகும் மக்களை வைத்தே அரசிற்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வைப்பதுமாகும்.
பத்திரிகைகள் என்பன மூன்று நிலைகளில் இயங்குகின்றன.ஒன்று நடுநிலையான பொதுப் பத்திரிகைகள், இரண்டாவது ஆளுங்கட்சிக்குச் சார்பான பத்திரிகைகள், மூன்றாவது எதிர்க்கட்சிக்குச் சார்பான பத்திரிகைகள்.
ஆளுங்கட்சிக்குச் சார்பான பத்திரிகைகள் என்பது,ஆட்சியதிகாரத்தில் இருக்கும் சமகால ஆட்சியாளர்களின் ஆட்சி முறைமையை விதந்துரைப்பதும், அவர்களின் நிர்வாகத்தை மிகையாக பாராட்டுவதுடன் கடந்த காலத்தில் எதிர்க்கட்சியினர் ஆட்சியதிகாரத்தில் இருந்திருப்பார்களானால் அவர்களின் ஆட்சிமுறைமையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பையுமே கொடுக்காத அல்லது அதைப் பற்றி மக்களே சிந்திக்காத மிக மிகச் சிறிய தவறுகளை பூதகரமாக்கி அதனால்தான் மக்கள் பாதிக்கப்பட்டனர் என தங்கள் பத்திரிகைளில் தமது ஆட்சியினை தொடர்ந்து வைத்திருக்க முயற்சிப்பது.
ஏதிர்க்கட்சிக்கு சார்பான பத்திரிகைகள் ஆளுங்கட்சியினர் சிறப்பாக நாட்டை நிர்வாகித்த போதும் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்புகளின் மூலைமுடுக்கெல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்து ஏதாவது கண்ணுக்குத் தெரியாத எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தாத சிறு தவறுகள் என்ற துவாரத்தை எழுத்தாளுமை என்ற நுண்பெருக்கிக் கண்ணாடி மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும் , அதன் மூலம் தம்முடைய ஆதரவை மக்களிடமிருந்து தேடி நடைமுறை அரசை கலைக்கச் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுதல் என்பதாகும்.
நடுநிலைமையான பொதுப் பத்திரிகைகள் என தம்மைக் கூறிக் கொள்ளும் பத்திரிகைகள்கூட நடுநிலமையாகத்தான் செயல்படுகின்றனவா என்பதை உன்னிப்பாக உற்று நோக்கிப் பார்ககையில் அவர்களின் செயல்பாடுகளில் தளம்பல் இருப்பதைக் காண முடியும்.எனினும் அவர்கள் ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும் ஆசிரியர் தலையங்கத்ஐத எழுதுவார்கள்.
எந்த நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்று வல்லாதிக்க நாடுகள் நினைக்கின்றனவோ அந்த நாட்டினுடைய செய்தி ஊடகங்களை தமது உளவு நிறுவனங்கள் மூலமாக தம்வசப்படுத்தி விடுகின்றன.
இத்தகு பத்திரிகைளில் இடம்பெறும் விடயதானங்கள் பலவாக இருந்த போதும் ஆசிரியரின் தலையங்கமும்,முக்கியமான ஊடகவியலாளர்களால் எழுதப்படும் தனித்துவமான கட்டுரைகளுமே மக்கள் மத்தியில் தாக்கத்தைக் கொடுக்கின்றன.
உளவு நிறுவனங்கள் தமது ஒற்றர்கள் மூலம் தமக்குச் சாதகமாக இயங்கக்கூடிய ஆசரியர்களுக்கு,இக்கட்:டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பெண்,பொருள் பணம் போன்றவற்றையோ அல்லது அன்பளிப்புகளைளோ வழங்கி தம்வசப்படுத்தி விடுவார்கள்.அது போன்று நுண்ணறிவு கொண்ட ஊடகவியலாளர்கள ஒற்றர்கள் தேடிப்பிடித்து அவர்களையும் தம் வசப்படுத்தி விடுவார்கள்.
தான் மேற்கொண்டுவரும் துறைசார் பணியில் அது சார்ந்த அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகக் கற்றுக் கொண்டராயினும் உடலே கருவி என்பதால் அவர்களின் தேவை எதைச் சார்ந்திருக்கிறதோ அத்தேவை உளவு நிறுவனங்களுக்கு பலமாகவும், சம்பந்தப்பட்டவருக்கு பலவீனமாகவும் இருக்கும்.
இந்தப் பலவீனம் என்பது இரகசியம் காத்தல் என்ற மூடிமறைப்புக்கு உட்பட்டதாக ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும்.ஒரு பத்திரிகை ஆசிரியரிடமோ அல்லது ஊடகவியலாளரிடமோ காணப்படும் பலவீனந்தான் உளவு நிறுவனங்களின் முதலீடாகும்.
ஒரு நாட்டினுடைய மக்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்களன்.அன்றாடம் பத்திரிகை வாசிப்பவர்கள்,ஆசிரியர் தலையஙகத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாசிப்பவர்கள்,ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு செய்திகளை வாசிப்பவர்கள், தாம் பின்பற்றும் கட்சிபற்றி வரும் செய்திகளை வாசிப்பவர்கள்,தான் சார்ந்த கட்சிளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அரசாங்கத்தைக் கண்டிக்கும் செய்திகளை வாசிப்பவர்கள், ஆங்காங்கே நடைபெறும் மக்கள் சார்ந்த செய்திகளை வாசிப்பவர்கள், அரசாங்கத்தை ஆதரிப்பவராயின் அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் அபிவிருத்தி சம்பந்தப்பட்ட செய்திகளை வாசிப்பவர்கள்,புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தாங்கிவரும் செய்திகளை வாசிப்பவர்கள்,கல்வி சம்பந்தப்பட்ட செய்திகளை வாசிப்பவர்கள்,கொலை பாலியல் வன்முறை, காதல் காமம் சம்பந்தப்பட்ட செய்திகளை வாசிப்பவர்கள், சினிமாச் செய்திகளை வாசிப்பவர்கள் , தாம் விரும்பும் நடிக நடிகைகளைப் பற்றநி வரும் செய்திகளை வாசிப்பவர்கள் என மக்கள் பலவாறாக இருப்பார்கள்.
இவர்களுள் புத்திசீவிகளாகவும் நுண்ணறிவாளர்களாகவும் பலர் இருப்பார்கள்.அவர்களுக்குள்ளும் கட்சி சார்ந்தவர்கள் ,தொழிலாள அமைப்புச் சார்ந்தவர்கள்,பல்துறை விற்பன்னர்கள் எனப் பலர் இருப்பார்கள்.
ஆசிரியர் தலையங்கங்களும்,ஊடகவியலாளர்களின் தனிக்கட்டுரைகளும் மேற்சொன்னவர்களால் உள்வாங்கப்பட்டு அதுசார்ந்த தொடர் சிந்தனை அரசுக்கெதிரான பிரச்சார பீரங்கியாக மாற்றப்படும்.
ஒரு நல்ல புத்திசீவியான ஒரு அரசியலாளன் அன்றாடம் பத்திரிகைகளை வாசிப்பனாகவே இருப்பான்.அவன் ஒரு நாடாளுமன்ற உறுப்:பினராக இருப்பானானால் அரசுக்கெதிராக எழுதபட்ட ஆசிரியர் தலையங்க பத்திரிகையை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் செல்வான்.அதுமட்டுமல்ல அரசு செய்யும் தவறகளைச் சுட்டிக்காட்டும் விசேச கட்டுரைகளைத் தாங்கி வரும் பத்திரிகையோடும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினன் நாடாளுமன்றம் செல்வான்.
தான் சீரழிக்க நினைக்கும் நாட்டில் தனக்குச் சார்பில்லாத அரசு இருக்குமானால் வல்லாதிக்க நாடுகள் இல்லாத ஒன்றை இருப்பதாக பூதகரமாக்கி உளவு நிறுவனங்கள் பத்திரிகை ஆசிரியரைக் கொண்டும்,புத்திசீவித்தனம் கொண்ட ஊடகவியலாளரைக் கொண்டும் எழுத வைக்கும்.
இத்தகைய எழுத்துக்கள் அரசியல் இராசதந்திரிகளையே நிலைகுலையச் செய்துவிடும்.ஒரு நாட்டில் வளமான விவசாயத்துக்குரிய மண் இருந்தும்,பயிர்களை விளைவித்து அதிலிருந்து பயன்பெற்று மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்னிறவைத் தடுத்து வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வைக்கக்கூடிய கட்டுரைகளை எழுதி ஆட்சியாளர்களையே மூளைச்சலவை செய்யக்கூடிய ஆற்றல் ஊடகவியலாளர்களுக்கு உண்டு.
(தொடரும்)