இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். சரித் அசலங்கா 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.