செய்திகள்பலதும் பத்தும்
பணிவன்புடன் நடந்துகொண்டால்… குறைந்த விலையில் தேநீர் – பிரிட்டனில்..
வாடிக்கையாளர்கள் பணிவன்புடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்கப் பிரிட்டனில் உள்ள ஒரு தேநீர்க் கடை வித்தியாசமான வழியை நாடியிருக்கின்றது.
பணிவன்புடன் நடந்துகொண்டால் தேநீரின் விலை சுமார் 2 டாலர்.
மரியாதையின்றி நடந்துகொண்டால் சுமார் ஐந்தரை டாலர்.
கடையில் நல்ல சூழலை உருவாக்கவே அத்தகைய திட்டத்தைக் கொண்டுவந்ததாக அதன் உரிமையாளர் உஸ்மான் ஹுசேன் (Usman Hussain) Daily Mail செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எனினும் இதுவரை எந்த வாடிக்கையாளரிடமும் தேநீரை ஐந்தரை டாலருக்கு விற்றதில்லை என்று அவர் சொன்னார்.
அவர்களுக்கு அது ஓர் எச்சரிக்கை மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் பணிவன்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால், அவர் வெவ்வேறு தேநீர் விலைகள் எழுதப்பட்டிருக்கும் பலகையைக் காட்டுவார்.
அதைப் பார்த்த பின்னர், வாடிக்கையாளர்கள் பணிவாக இருப்பதாக ஹுசேன் சொன்னார்.