ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – 58 இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன்படி, இராணுவ அதிகாரிகளின் பட்டியல் தொடர்பான பிரேரணையை 31 நாடுகளுக்கு அனுப்ப ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 6ஆம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்தன.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆர்மேனியா, பின்லாந்து, உக்ரைன், லிதுவேனியா, அர்ஜென்டினா, மெக்சிகோ, செக் குடியரசு, லக்சம்பர்க், மலாவி, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ உள்ளிட்ட 20 நாடுகள் இவ்வாறு வாக்களித்தன.
பாகிஸ்தான், சீனா, கியூபா, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா, பொலிவியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
இந்தியா, ஜப்பான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், லிபியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.