உக்ரைன்…. ரஷ்யா போர் குறித்த பாபா வாங்காவின் கணிப்பு!
மிஸ்டிக் பாபா வாங்காவின் கணிப்பால் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து கண்ணீர் விட்டு அழும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரிய மாயவாதி பாபா வாங்கா 1996ல் இறப்பதற்கு முன்பு உலக நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட கணிப்புகள் பல உண்மையாகி வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அவர் தெரிவித்த கணிப்பு ஒன்று ரஷ்ய ராணுவ வீரரின் மனைவியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்துள்ளது.
உக்ரைன் போர் தாக்குதலில் முன்வரிசையில் சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவ வீரரிடம் அவரது மனைவி, பாபா வாங்காவின் கணிப்புப்படி இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவே விரைவாக திரும்பி வந்து விடும்படி கேட்டு கதறி அழுதுள்ளார்.
ரஷ்ய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு எடுக்கப்பட்டு உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை இயக்குனரகத்தால் யூடியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் கணவரான ரஷ்ய ராணுவ வீரர், இந்த பணியின் முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு இதன்மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என கூறுவதும், அதற்கு அவரது மனைவி இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை, நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார்.
உடனடியாக பிறர் உத்தரவுகளை மறுத்த போது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விளக்கி தன்னால் வீடு திரும்ப முடியாது என மனைவிக்கு விளக்க ரஷ்ய வீரர் முயற்சி செய்வது போன்றது இடம்பெற்று உள்ளது.
மேலும் பல முக்கிய நிகழ்வுகளில், 9/11, பிரெக்சிட் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றை துல்லியமாக கணித்த பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்காவை குறிப்பிட்ட ரஷ்ய வீரரின் மனைவி, வாங்காவின் கணிப்புகளின் படி இவை அனைத்து 2024 வரை நீடிக்கும் என்றும், நேற்று உன்னை இரண்டு வருடங்கள் வரை பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன், மேலும் இந்த கால இடைவெளியில் தவறுதலாக எதுவும் நடைபெற்று விட்டால் என்ன செய்வது? என்று அவர் அழைப்பில் கதறி அழுதாள்.
இறுதியில் அவளது கணவன் அழாதே, அழாதே என ஆறுதல் படுத்தினாலும், அவள் என்னால் முடியாது முடியாது என திரும்ப திரும்ப பதிலளித்தது அந்த அழைப்பில் பதிவாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சூதாட்ட விடுதிக்கு முன்னால் நடைபெற்ற பயங்கரம்: ஆடைகளில் இரத்தத்துடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி
ஐரோப்பா பழமையான இடமாறாக குறைக்கப்பட்ட பிறகு, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.